Published:Updated:

விஜய்யும் தனுஷும் பேசிய மைக்! - எஃப்.எம். விசிட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜய்யும் தனுஷும் பேசிய மைக்! - எஃப்.எம். விசிட்
விஜய்யும் தனுஷும் பேசிய மைக்! - எஃப்.எம். விசிட்

பா.ஜான்சன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

``அடேங்கப்பா... இவ்ளோ சின்ன ரூம்ல இருந்துக்கிட்டுதான் ஊரையே குஷியா  ஆட வைக்கிறீங்களா?’’ எனக் கண்கள் விரிய, மெகா டெசிபல் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்... சபரி, சாய் பிரகதி, அர்ஜுன், ரிஷி தேஜா மற்றும் சஞ்சய்.

விஜய்யும் தனுஷும் பேசிய மைக்! - எஃப்.எம். விசிட்

கலகல கலாய்ப்புடன் பாடல்களைக் கொடுத்து நம்மை உற்சாகப்படுத்தும்     எஃப்.எம். நிலையத்துக்கு சுட்டிகளோடு ஒரு விசிட் அடிப்போம் என முடிவுசெய்து, ‘பிக் எஃப்.எம்’ ஸ்டுடியோவுக்குச் சென்றோம்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என இருக்கும்  ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு அந்த இடம் ஆச்சர்யத்தை அளித்தது. அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றார் பிக் எஃப்.எம் தொகுப்பாளர் கிரிஷ்.

‘‘அங்கிள், நீங்க ஒருத்தர்தானே இருக்கீங்க... எதுக்கு இத்தனை சேர்ஸ்? எதுக்கு ரெண்டு மட்டும்  உயரமா இருக்கு?’’ என நான்ஸ்டாப் கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள்.

‘‘முதல்ல உட்காருங்க. அப்புறமா நீங்க கேட்கிறதுக்குப் பதில் சொல்றேன். பயங்கர ‘லொடலொடா’வா இருக்கீங்க. உங்க எல்லோருக்குமே ‘ஆர்ஜே’ ஆகறதுக்கான தகுதிகள் இருக்கு’’ என அவர்களை உட்காரவைத்தார் கிரிஷ்.

விஜய்யும் தனுஷும் பேசிய மைக்! - எஃப்.எம். விசிட்

கீபோர்டு போல இருந்த கருவியைக் காண்பித்த கிரிஷ், ‘‘இதுக்குப் பேர்தான் கன்சோல். மைக்கை ஆன் பண்றது, சவுண்டை கூட்டறது, ரெக்கார்டு பண்றதுனு மொத்த கன்ட்ரோலும் இதுலதான் இருக்கு. இப்போ, நீங்க பேசறீங்களா?'' என்றதும், குஷியாக தயாரானார்கள் சுட்டீஸ்.

‘‘நாங்க பேசறது லைவ்வா கேட்குமா?'' எனக் கேட்டாள் சாய் பிரகதி.

‘‘அப்படி செய்தால், நீங்க கத்துறது, வாலுத்தனம் பண்றதையும் ஊரே கேட்கும்  பரவால்லையா?'' என்றதும், ‘‘நோ... நோ...'’ என்று ‘நல்ல பிள்ளைகளாக’ மாறினார்கள்.

‘‘ஸோ, ரெக்கார்டு பண்ணிக்கிட்டு எடிட் பண்ணிப்போம். எதுக்கு இத்தனை சேர்ஸ்னு கேட்டீங்களே... புரோகிராமில் கலந்துக்க வரும் சீஃப் கெஸ்ட் இங்கேதான் உட்காருவாங்க.  விஜய், தனுஷ் என வி.ஐ.பி-கள் உட்கார்ந்த இடம். இன்னிக்கு நீங்கதான் வி.வி.ஐ.பி-கள்’’ என்றார் கிரிஷ்.

ஆளாளுக்கு மைக்கைப் பிடித்து பேசினார்கள்.  டாக்டர், டீச்சர், ஃபேஷன் டிசைனர், விஞ்ஞானி என தங்களின் வருங்கால கனவுகளில் தொடங்கி... பிடித்த சாக்லேட், நண்பனுடன் போட்ட சண்டை என அதகளமானது அந்த இடம். ரெக்கார்டு செய்தவற்றை திரும்பப் போட்டுக்காட்டியதும் ஏக குஷி.

‘‘அண்ணா, இது என்ன? இந்தக் கோடு மேலேயும் கீழேயும் போயிட்டு போயிட்டு வருது?'' என ரிஷி தேஜா கேட்க, ‘‘இதுதான் வால்யூம் லெவல். நாம பேசற சத்ததுக்கு தகுந்தபடி மேலும் கீழும் போகும்'' என்றார் கிரிஷ்.

‘‘இங்கே 10 செகண்ட்னு போட்டிருக்கே இது என்ன?'' என சஞ்சய் கேட்க, ‘‘இந்த இடத்தில் 10 செகண்ட் விளம்பரம் இருக்குனு அர்த்தம்’’ என்றார் கிரிஷ்.

‘‘இங்கே உங்களைத் தவிர வேற யாரெல்லாம் இருக்கீங்க? அவங்க என்ன பண்ணுவாங்க?’’ எனக் கேட்டான் சஞ்சய்.

விஜய்யும் தனுஷும் பேசிய மைக்! - எஃப்.எம். விசிட்

‘‘அதோ அங்கே ஒரு ரூம் இருக்கே, அதுதான் பேக்கப் ஸ்டுடியோ. கிரியேட்டிவ் விஷயங்கள், விளம்பர ரெக்கார்டிங் எல்லாம் அங்கே ஒரு டீம் செய்யும். தவிர, திடீர்னு இங்கே ஏதாவது டெக்னிக்கல் பிராப்ளம் ஏற்பட்டால், அந்த ஸ்டுடியோவை யூஸ் பண்ணிப்போம். அதாவது, நீங்க பரீட்சைக்கு எக்ஸ்ட்ரா பேனா எடுத்துட்டுப்போகிற மாதிரி’’ என்றார் கிரிஷ்.

‘‘புரியுது அங்கிள், எக்ஸாம்பிள் எல்லாம் சொல்லாதீங்க. நாங்க என்ன எல்.கே.ஜி குழந்தைகளா?’’ என கலாய்த்தாள் சாய் பிரகதி.

‘‘இப்படி எல்லாம் கலாய்ச்சா நான் மத்த விஷயங்களைச் சொல்ல மாட்டேன்’’ என பொய் கோபமான கிரிஷை, மற்றவர்கள் ‘கூல்’ செய்ததும் தொடர்ந்தார்.

‘‘ஆர்.ஜே-க்கள், சேல்ஸ் டீம், புரொட்யூசர் எனப் பலரும் சேர்ந்ததுதான் ஒரு எஃப்.எம். இந்த விஷயம் பத்தி பேசலாம், இதைப் பத்தி ஷோ பண்ணலாம்னு முடிவெடுக்கிறவர்  புரொட்யூசர். அடுத்து, புரொகிராமிங் ஹெட்.  எங்க எல்லோருக்கும் ‘தல’, ‘தளபதி’ இவர்தான். யார் யார் என்ன வேலை பண்றாங்கனு செக் பண்ற பிரின்ஸிபால். அடுத்து, சவுண்டு இன்ஜினீயர். நாங்க பேசறதை, மியூஸிக் எல்லாம் போட்டு தெளிவாக மக்கள்கிட்டே கொண்டுபோறது இவர்தான்’’ என்றார் கிரிஷ்.

‘‘இவங்க எல்லோருக்கும் மேலே ஒருத்தர் இருக்கார். அது, ஆர்.ஜே-வான நீங்கதான்’’ என்றான் சபரி.

‘‘உஷ்... சத்தமா சொல்லாதே கண்ணா! ‘எத்தனை சாக்லேட் வாங்கிக் கொடுத்து இப்படி பேசவெச்சே?’னு ஒரு வாரத்துக்கு கலாய்ப்பாங்க. ‘ஆர்.ஜே’வா இருக்க பேச்சு மட்டும் போதாது. உலகத்துல என்ன நடக்குதுங்கறதை தெரிஞ்சு வெச்சுக்கணும். கோபமோ, எரிச்சலோ கூடாது. ரொம்ப சிநேகமா பேசணும். டைமிங்சென்ஸ் முக்கியம்’’ என்று அடுக்கினார் கிரிஷ்.

‘‘அட, எங்களை மாதிரி இருக்கணும்னு சுருக்கமா ‘நறுக்’னு ஒரு வரியில சொல்ல வேண்டியதுதானே!’’ என அர்ஜுன் கலாய்க்க, க்ளீன்போல்டு ஆனார் கிரிஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு