பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன் மீல்ஸ்!

‘‘மம்மி இன்னிக்கு பிரேக்ஃபாஸ்ட்டுக்கு கரடி வேணும். லஞ்சுக்கு ஒரு டைனோசர். நைட் கம்மியா  சாப்பிடணுமாம். ஒரே ஒரு நத்தை போதும்” என்று ஒரு சுட்டி ஃபுட் ஆர்டர் கொடுத்தால் எப்படி இருக்கும்? மூன்று வயது ஜேகோப் (Jacob), தன் அம்மாவிடம் அப்படித்தான் கேட்கிறான்.

கார்ட்டூன் மீல்ஸ்!

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சாப்பிட வைப்பது என அம்மாக்களுக்கும் வரும் அதே பிரச்னைதான், ஆஸ்திரேலியாவின் லாலே மோமடி (Laleh Mohmedi) என்ற அம்மாவுக்கும் வந்தது. அவருடைய கலக்கல் ஐடியாதான் இந்த கார்ட்டூன் ஃபுட் ஆர்ட்.

கார்ட்டூன் மீல்ஸ்!

பான் கேக்கை ஒன்றை சிங்கம் வடிவில் உருவாக்கிக் கொடுத்தார் லாலே மோமடி. அந்தச் சிங்கம், ஒரே வாயில் மகனின் வயிற்றுக்குள் போனது. அப்படி போகும் முன்பு புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பதிவேற்ற, அங்கும் தாறுமாறு ஹிட்.

கார்ட்டூன் மீல்ஸ்!

அன்று முதல் மகனுக்குப் பிடித்த கார்ட்டூன், காமிக்ஸ், சினிமா கேரக்டர்கள் வடிவில் உணவைத் தயாரித்து தருகிறார். ‘ஃபைண்டிங் நிமோ’ முதல் ‘மினியான்ஸ்’ வரை எல்லாமே அவ்வளவு அழகு! அவற்றை ‘Jacob’s Food     Diary’ என்ற பெயரில் இணையத்திலும் வெளியிடுகிறார். ‘மகனை சாப்பிட வைக்கும் பிரச்னையும் தீருது; சோஷியல் மீடியாவில் லைக்ஸும் அள்ளுது’ என குஷியாகிறார் இந்த சூப்பர் மம்மி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு