பிரீமியம் ஸ்டோரி
எஸ்கேப் சரித்திரம்!

போர்க்ல எடுக்கிற நூடுல்ஸில் நழுவுற நூடுல்ஸ் நாங்க’ என்பது போல, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து எப்படி எல்லாம் எஸ்கேப் ஆகிறோம் என்பதைச் சொல்கிறார்கள் இந்தக் குறும்புக்காரச் சுட்டிகள்.

ரிஸ்வானா

எஸ்கேப் சரித்திரம்!
எஸ்கேப் சரித்திரம்!

‘‘அம்மா ஏதாவது வேலை சொன்னா இருக்கவே இருக்கு, புக்ஸ். ‘நிறைய படிக்கவேண்டியது இருக்கும்மா’னு சொல்லி, புக்ஸை எடுத்துக்கிட்டு ரூமுக்குள்ளே போயிருவேன். அம்மாவின் செல்போனில் கேம்ஸ் விளையாடுவேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா விளையாடிட்டு இருக்கும்போதுதான் யாராவது போன் பண்ணித் தொலைப்பாங்க. சத்தம் கேட்டு அம்மா ஓடி வருவாங்க. முட்டுச் சந்துல மாட்டிக்கிட்ட எலி மாதிரி ஒரு நிமிஷம் ஷாக் ஆயிருவேன். அம்மா உள்ளே வந்ததும், எலி மாதிரியே ‘கீச் கீச்’னு கத்தி, அவங்களை அலறவெச்சு எஸ்கேப் ஆகிருவேன்.’’

சுஜானா

எஸ்கேப் சரித்திரம்!

‘‘எனக்கு அன்னிக்கு படிக்கிற, எழுதுகிற மூட் இல்லைன்னா, ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும், டைரியை மறைச்சு வெச்சுட்டு பாப்பாவோடு விளையாடிட்டு இருப்பேன். ‘ஹோம்வொர்க் பண்ணலையா?’னு அம்மா கேட்பாங்க. ‘இன்னிக்கு மிஸ் டைரியே கொடுக்கலை’னு சொல்லிருவேன். அப்புறம், அம்மா நைட் சமையல் செய்ய கிச்சனுக்குப் போனதும், ஹோம்வொர்க்கை முடிச்சிருவேன். ரொம்ப நாளா இப்படித்தான். இந்த ரகசியத்தை  அம்மாகிட்ட சொல்லிடாதீங்க.’’

முஹம்மது இஹாப்

எஸ்கேப் சரித்திரம்!
எஸ்கேப் சரித்திரம்!

‘‘ட்யூஷன் மிஸ்கிட்ட எஸ்கேப் ஆகுறதுக்காக,  நான் விதவிதமா யோசிக்கிறதை ஒரு புக்காவே போடலாம். ஏதாவது கேள்வி கேட்கறதுக்காக நிமிர்ந்து கூட்டத்தைப் பார்ப்பாங்க. அந்த நேரம்தான், நான் குனிஞ்சு ரொம்ப தீவிரமா நோட்ஸ் எடுக்கிற மாதிரி ஆக்ட் கொடுப்பேன். இல்லைன்னா, இன்னும் ரெண்டு நிமிஷத்துல கேள்வி கேட்பாங்கன்னு யூகிச்சு, பாத்ரூம் வருதுனு கிளம்பிடுவேன். இல்லைன்னா, தண்ணீர் குடிக்க எழுந்து போவேன். சும்மா விளையாடிட்டு இருக்கிற மிஸ்ஸோட பாப்பாவை, என் பக்கம் கவனம் திருப்பி தூக்கிப்பேன். இன்னும் இப்படி சொல்லிட்டே போகலாம்.’’

பேபி ப்ரீத்தி

எஸ்கேப் சரித்திரம்!

‘‘ஒரு நாள் மிஸ் பாடம் நடத்த நடத்த செம போரிங். தூக்கம் சொக்குச்சு. தூங்கினா சும்மா இருப்பாங்களா? யோசிச்சு, நேரா மிஸ்கிட்டே போய் நின்னேன். ‘மிஸ், என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ராத்திரி எல்லாம் நான்தான் கண் முழிச்சுப் பார்த்துகிட்டேன். இப்போ, தூக்கமா வருது. போய்ட்டு ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரட்டுமா?’னு கேட்டேன். ‘அடடா... கொஞ்ச நேரம் படுத்துக்க, அப்புறம் நானே எழுப்புறேன்’னு பாசமா சொன்னாங்க. அப்புறம் என்ன? சுகமா படுத்துத் தூங்கினேன்.’’

பால சைலேஷ்

எஸ்கேப் சரித்திரம்!

‘‘ஸ்கூலில் ஏதாவது புரோகிராம் நடக்கறதா இருந்தா உடனே ஃப்ரெண்ட்ஸ் ஒண்ணுகூடி பிளான் போட ஆரம்பிச்சுடுவோம். ‘அடடா, அவ்வளவு நல்ல பசங்களா?’னு உணர்ச்சிவசப்படாதீங்க. நமக்கு கொடுக்கிற வேலையில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகலாங்கிற பிளான்தான் அது. ‘பாலா, நீ என்ட்ரன்ஸ்ல பார்த்துக்க. பசங்களை வரிசையா அனுப்பு’னு சொன்னா... ‘மிஸ், என்னைவிட கெளதமை பார்த்தாதான் பசங்க ஒழுங்கா வருவாங்க’னு அடுத்தவனை கோத்துவிட்ருவோம். ரொம்ப சேஃப்டியான வேலையா வாங்கிகிட்டு ஜாலியா இருப்போம்.’’

வெ.வித்யா காயத்ரி, படங்கள்: நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு