Published:Updated:

ஆதிகால அசத்தல் ஆட்டம்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, க.பாலாஜி - படங்கள்: ஆ.முத்துக்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
ஆதிகால அசத்தல் ஆட்டம்!

‘‘மனிதர்களின் மரபணுவோடு கலந்த விஷயங்களில் வில்வித்தை ஒன்று. ஆதிகால மனிதன் வேட்டையாடுவதற்காக வில்லை கண்டுபிடித்தான். பிறகு, போர்க் கருவியாக மாறியது. இப்போது, விளையாட்டாகவும் வளர்ந்து நிற்கிறது. வில்வித்தை என்பது, அம்பை எய்வது மட்டுமல்ல. மனதை ஒருமுகப்படுத்துவது, கூர்ந்து பார்ப்பது, இலக்கை அடைவது என நம்மை செதுக்கும் ஒரு கலை” என இன்ட்ரோ கொடுக்கிறார் வில்வித்தை பயிற்சியாளர் ஹுசைனி.

ஆதிகால அசத்தல் ஆட்டம்!

சென்னை, பெசன்ட் நகரில் இருக்கும் ‘ஹூ ஆர்ச்சரி மிஷன்’ (Hu Archery Misson) வாளகத்தில், அதிகாலை காற்றை கிழித்தபடி அம்புகள் பாய்ந்துகொண்டிருந்தன.

“மூணு வயசு குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் வில்வித்தையைக் கற்கலாம். காலை 6 மணி அல்லது மாலை 4 மணிக்கு பயிற்சிக்கு வரணும். முதலில், தாய், தந்தை, ஆசிரியர், கடவுளை வணங்கச் செய்வோம். அடுத்து, மனதுக்கான பயிற்சி. நம்பிக்கை வாசகங்களை சொல்லவைப்போம். மூன்றாவது, மனதை ஒருநிலையாக்கும் தியானப் பயிற்சி. பிறகு, வார்ம்-அப் பயிற்சிகள். புல் அப்ஸ், ஸ்ட்ரெச்சஸ் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் தனித்தனியாக பயிற்சி இருக்கும். அடுத்து, தசைகளைத் தளர்த்தும் பயிற்சி. இவை எல்லாம் முடிந்த பிறகுதான் வில்லையே தொட முடியும்” என்கிறார் ஹுசைனி.

5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு  டார்கெட்டில் இருந்து 5 மீட்டர் தூரத்தில் இருந்து பயிற்சி ஆரம்பிக்கும். 10 மீட்டர், 20 மீட்டர் என படிப்படியாக அதிகரித்து 70 மீட்டர் வரை கற்றுத்தரப்படும். 70 மீட்டர் தூரத்தில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்.

ஆதிகால அசத்தல் ஆட்டம்!

“வில்வித்தை போட்டிகளில் ‘டார்கெட் ஆர்ச்சரி’ என்பது ஒரு வகை. இதில், தனி நபர், குழு என இரண்டு வகைகள் உண்டு. இந்த ‘டார்கெட் ஆர்ச்சரி’ மட்டுமே ஒலிம்பிக் விளையாட்டில் உள்ளது. இது தவிர, உள் அரங்கில் நடக்கும் போட்டி (Indoor archery), காட்டுக்குள் மான் போன்ற பொம்மைகளை வைத்து விளையாடும் 3D ஆர்ச்சரி, வானத்தை நோக்கி அம்பை எய்யும் ஃப்ளைட் ஆர்ச்சரி (Flight archery) எனப் பல வகைகள் உண்டு” என்கிறார் ஹுசைனி.
ஏழாவது படிக்கும் வித்யுத் சுரேஷ், “கார்ட்டூன்லதான் முதன்முதல்ல வில்லை பார்த்தேன். எனக்கும்  ஆசை வந்துச்சு. இங்கே ஆறு மாசமா பயிற்சி எடுக்கிறேன். சீக்கிரமே நிறைய மெடல்ஸ் வாங்குவேன்’’ என்கிறார்.

மாதவ் தத்தா என்ற சுட்டி, ‘‘எந்த ஊருக்குப் போனாலும் வில் பொம்மை வாங்கி விளையாடறது என் ஹாபி. அப்படியே விளையாட்டா ஆரம்பிச்சு மாநிலப் போட்டிகளில் ஜெயிச்சு இருக்கேன்’’ எனச் சொல்லிவிட்டு இலக்கு நோக்கி குறிபார்த்து எய்கிறார்.

ஆதிகால அசத்தல் ஆட்டம்!

ஸ்ரீசரண் என்ற சிறுவன், “நான் அஞ்சு வருஷமா பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன். ஏழு முறை மாநில அளவிலான போட்டிகளில் மெடல்ஸ் வாங்கி இருக்கேன். தேசியப் போட்டிகளிலும் கலந்துகிட்டு இருக்கேன்’’ என்கிறார் உற்சாகமாக.

ஆதிகால அசத்தல் ஆட்டம்!கிருத்திகா என்ற சிறுமி, “ஆரம்பத்துல அப்பா சொல்லித்தான் பயிற்சிக்கு வந்தேன். இப்போ, எனக்கே ரொம்ப பிடிச்சு போய்டுச்சு. மாநில அளவில் 5 பதக்கமும், தேசிய அளவில் 3 பதக்கமும் வாங்கி இருக்கேன். எல்லோரையும் போல என்னுடைய இலக்கும் ஒலிம்பிக்தான். அதற்காக இப்போ எய்ம் பண்ணிக்கிட்டு இருக்கேன்’’ எனப் புன்னகைக்கிறார்.

ஆல் தி பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!

வில்வித்தையில் வெற்றி தோல்வி தீர்மானிப்பது எப்படி?

ஆதிகால அசத்தல் ஆட்டம்!

லக்கின் நடுப் பகுதியில் மஞ்சள், அடுத்ததாக சிவப்பு, நீலம், கறுப்பு, வெள்ளை என 5 வண்ணங்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டியில் ஒவ்வொரு வீரரும் 72 முறை அம்பை இலக்கை நோக்கி செலுத்துவார். 36 அம்புகளை எய்தபின் ஓய்வு எடுக்கலாம். புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பார்கள். இலக்கின் நடுவில் இருக்கும் மஞ்சள் வட்டத்தின் நடுப்புள்ளியில் அடித்தால்,  X என குறிக்கப்படும். இருவர் ஒரே புள்ளிகளை பெறும்போது, இந்த X புள்ளியை பெற்றவரை வெற்றி பெற்றவராக  அறிவிக்கப் பயன்படுகிறது.

டார்கெட்டில் 5 வண்ணங்களில் வட்டங்கள் இருக்கும்.

மஞ்சள்: உள் வட்டம் - 10 புள்ளிகள், வெளிவட்டம் - 9 புள்ளிகள்

சிவப்பு: உள் வட்டம் - 8  புள்ளிகள், வெளிவட்டம் - 7 புள்ளிகள்

நீலம்:
உள் வட்டம் - 6 புள்ளிகள், வெளி வட்டம் - 5 புள்ளிகள்

கறுப்பு: உள் வட்டம் - 4 புள்ளிகள், வெளி வட்டம் - 3 புள்ளிகள்

வெள்ளை:
உள் வட்டம் - 2 புள்ளிகள், வெளிவட்டம் - 1 புள்ளி.

அம்பை செலுத்த 14 வகையான படிநிலைகள்...

ஆதிகால அசத்தல் ஆட்டம்!

1. அட்ரஸ் (Address): எல்லாம் சரி பார்த்து தயாராவது.

2. பிக் (Pick): அம்பு பையில் இருந்து, அம்பை சரியான முறையில் எடுப்பது.

3. நாக் (Knock): அம்பை நாணில் சரியாக பொறுத்துவது.

4. ஹூக் (Hook): வில்லிலும் அம்பு இருக்கும் நாணிலும் சரியாக பிடித்துக்கொள்வது. மூன்று விரல்களை மட்டுமே பயன்படுத்தி, அம்பை பிடிக்க வேண்டும். கட்டை விரலை, உலகின் எந்த வில்வித்தை வீரரும் பயன்படுத்த மாட்டார்.

5. ஹோல்டு (Hold): வில்லில் பொறுத்தப்பட்ட அம்பை சரியாக பிடித்துக்கொள்வது.

6. பிரிசெட் (Preset): உடலையும் தலையையும் நேர்க்கோட்டில் வைப்பது. இலக்கு இருக்கும் திசையில் சரியாக நிற்பது. உடலை எந்தப் பக்கமும் அசைக்கக் கூடாது.

7. ரைஸ் (Raise): வில்லை கொஞ்சம் மேலே தூக்கி, அம்பும் தலையும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு பிடித்துக்கொள்வது.

ஆதிகால அசத்தல் ஆட்டம்!

8. டிரா (Draw): நாணை இழுப்பது.

9. ஏங்கர் (Anger): நாணை தாடைக்கு கீழே வருமாறு வைப்பது.

10. எய்ம் (Aim): இலக்கை பார்க்கும்போது  வில்லின் நாண், வில்லின் முனையில் இருக்கும் சைட்டர் பின், இலக்கின் நடுப்புள்ளி ஆகியவை ஒரே புள்ளியில் இருக்க வேண்டும்.

11. ரிலீஸ் (Release): அம்பை வில்லில் இருந்து விடுவிப்பது. அப்போது, வில்லை கெட்டியாக பிடித்துக்கொள்ள கூடாது.

12.
ஃபாலோ த்ரோ (Fallow Through): இலக்கை அடையும் வரை அம்பை கவனிப்பது.

13.
டவுன் (Down): வில்லை இறக்கி கீழே வைப்பது.

14.
ரெக்ருபெட் (Recrubed): கொஞ்சம் ஓய்வு கொடுத்த பிறகே, அடுத்த அம்பை எடுத்து எய்ய வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு