பொது அறிவு
FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

‘மாஸ்க்’மோரா

‘மாஸ்க்’மோரா
பிரீமியம் ஸ்டோரி
News
‘மாஸ்க்’மோரா

சு.சூர்யா கோமதிபடங்கள்: ஆ.முத்துக்குமார், மாடல்கள்:செளமியா, விஜய் இமான்

‘மாஸ்க்’மோரா

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அட்ராசிட்டி பண்ண விதவிதமான மாஸ்க் செய்ய கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ‘சி.என். கிராப்ட்ஸ்’ சுதா சந்திரநாராயணன். கொஞ்சம் வித்தியாசமா செய்து மகிழ்வோமா?

‘மாஸ்க்’மோரா

தேவையானவை: வெள்ளை சார்ட் பேப்பர் - 1, ஆரஞ்சு சார்ட் பேப்பர்-1, கறுப்பு ஸ்கெட்ச்-1, கறுப்பு ரிப்பன் (கிஃப்ட் பாக்ஸில் சுற்றுவது) - அரை மீட்டர், ஃபெவிக்கால், கத்தரிக்கோல், கத்தி.

‘மாஸ்க்’மோரா
‘மாஸ்க்’மோரா

*நரி உருவத்தை வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற சார்ட்களில் வரைந்து, படத்தில் காட்டியபடி வெட்டி எடுக்கவும்.

*வெள்ளை சார்ட்டின் மீது ஆரஞ்சு சார்ட்டினை படத்தில் காட்டியபடி ஒட்டவும்.

*
நரியின் காதுகளுக்கு இலை போன்ற வடிவத்தில் ஆரஞ்சு சார்ட்டிலும், அதைவிட சிறிய அளவில் வெள்ளை சார்ட்டிலும் காதுகள் வரைந்து வெட்டிக்கொள்ளவும்.

*நரியின் முகம், சரியான வடிவத்துக்கு வர, நரியின் தலைப் பகுதியில் கத்தியால் கீறிவிடவும் (படம் 5). காதுப் பகுதிகளை, தலைப் பகுதியில் ஒட்டவும்.

*கண்கள் வரைந்து துளையிடவும். சார்ட்டினை மெல்லியதாக கட் செய்து, மீசையாக ஒட்டவும். கறுப்பு ரிப்பனை பின்புறம் ஒட்டினால், நரி ரெடி!

100 கிராம் சிங்கம்

‘மாஸ்க்’மோரா

தேவையானவை: ஆரஞ்சு, வெள்ளை, பிரவுன், மஞ்சள் நிற சார்ட்கள் -1, செலோஃபன் டேப், கறுப்பு ஸ்கெட்ச்-1, கறுப்பு ரிப்பன் (கிஃப்ட் பாக்ஸில் சுற்றுவது)- அரை மீட்டர், ஃபெவிக்கால், கத்தரிக்கோல், கத்தி.

‘மாஸ்க்’மோரா
‘மாஸ்க்’மோரா


*சிங்கத்தின் அடிப்படை உருவங்களை சார்ட் பேப்பரில் வரைந்து, தனித்தனியாக  வெட்டி எடுக்கவும்.

*தலை, காதுகள், மூக்கு ஆகிய பகுதிகளைப் படத்தில் காட்டியபடி  ஒட்டவும்.

*கண்களை வெட்டி எடுத்து, அவுட்லைன் கொடுக்கவும்.

*சார்ட் பேப்பரை மெல்லியதாக வெட்டி எடுத்து, மீசையாக ஒட்டவும்.மாஸ்க் பேஸ் ரெடி.

*ஆரஞ்சு நிற சார்ட்டை வட்டமாக வெட்டி அதன் ஓரங்களை வெட்டி டிசைன் செய்யவும். (படம் 5)

*டிசைன் செய்த ஆரஞ்சு சார்ட்டின் மீது, மாஸ்க் பேஸ் பகுதியை ஒட்டவும். மாஸ்கினை பின்புறமாக திருப்பி இரண்டு புறமும் கறுப்பு  ரிப்பனை ஒட்டவும்.

*100 கிராம் கம்பீர சிங்கம் கர்ஜிக்கும்.

டக்கர் டால்மேஷன்!

‘மாஸ்க்’மோரா

தேவையானவை: வெள்ளை சார்ட் - 2, செலோஃபன் டேப், கறுப்பு நிற ஸ்கெட்ச் -1, கறுப்பு ரிப்பன் (கிஃப்ட் பாக்ஸில் சுற்றுவது) - அரை மீட்டர், ஃபெவிக்கால், கத்தரிக்கோல், கத்தி

‘மாஸ்க்’மோரா
‘மாஸ்க்’மோரா

*நாயின் அடிப்படை உருவங்களை சார்ட் பேப்பரில் வரைந்து, வெட்டி எடுக்கவும்.

*நாயின் முகப் பகுதியில் கண்கள் வரைந்து, வெட்டி எடுக்கவும்.

*காதுகளுக்கான துண்டுகளில்   ஸ்கெட்ச்சால்  கலரிங் செய்துகொள்ளவும். அதே போன்று நாயின் காதுகளுக்கும்  கலரிங் செய்யவும் (படம் 6)

*முகப்பகுதியுடன் காதுகளை ஒட்டவும்.பின்புறம் திருப்பி, கறுப்பு நிற ரிப்பனை ஒட்டவும்.

*டக்கர் ‘டால்மேஷன்’ மாஸ்க் ரெடி.