Published:Updated:

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

‘‘ஆண்ட்ராய்ட் கேம்ஸ் எத்தனை வந்தாலும், சுளீர் வெயிலில் மட்டையைச் சுழற்றி சிக்ஸர் அடிக்கிற கெத்துக்கு ஈடாகாது’’ - வியர்வை சொட்டச் சொட்ட சொல்கிறார்கள் அந்தச் சுட்டிகள்.

அது, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் ஒரு மைதானம். இந்தியர்களுக்கு சாப்பாடு, தண்ணீர்போல ஆகிவிட்ட விளையாட்டு, கிரிக்கெட். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம், சுட்டிகளின் SPL கிரிக்கெட்டை (அதாங்க, Street Premier league) பார்க்க ஒரு ரவுண்டு வந்தோம்.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

‘‘ஸ்கூல் நாளில், காலையில் எட்டு மணிக்கும் சொக்கும் தூக்கம், லீவு நாளில் ஆறு மணிக்கே ஓடிப்போயிடும். படுக்கும்போதே, கட்டிலுக்குக் கீழே கிரிக்கெட் பேட்டை வெச்சுட்டுதான் படுப்பேன். டாஸ், பவுண்டரி, சிக்ஸர் என கனவெல்லாம் கிரிக்கெட்தான் ஓடும். விடிஞ்சதும் இங்கே ஓடி வந்துருவேன்’’ என்கிறான் ராகேஷ்.

“தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கிரிக்கெட் விளையாட வந்துருவேன். பெரிய அண்ணண்கள் வந்தால், அவங்களுக்கு பௌலிங் போட்டும் விளையாடுவோம்’’ என்றான் பாலா.

மட்டையின் கைப்பிடியில் சின்சியராக நூலைச் சுற்றிக்கொண்டிருந்த கிஷோர், ‘‘அடிக்கடி அப்பாகிட்டே புது பேட் கேட்க முடியாது. நாம அடிக்கிற வேகத்துக்கு, ஹேண்டில் உடையாம இருக்கணுமில்லே. இப்படி ஃபெவிக்கால் தடவி, நூலைச் சுத்தினால், ஸ்ட்ராங் ஆகிடும்.  சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் தூக்கலாம்’’ என்றான்.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

இந்த மாதிரி தெரு விளையாட்டின் சுவாரஸ்யங்களில் ஒன்று, தாறுமாறான ரூல்ஸ்.

‘‘ஆமா, பூவா தலையா டாஸ் போட மாட்டோம். இரண்டு டீம் கேப்டனும் ஒற்றையா ரெட்டையா போட்டு, பேட்டிங் எடுப்போம். தெருவிலும் சின்ன கிரவுண்டிலும் சிக்ஸர் அடிச்சா அவுட்டு. ஏன்னா, யார் வீட்டிலாவது போய் விழுந்திடும். பந்தை எடுத்துவெச்சுட்டு கொடுக்க மாட்டாங்க. அதனால, சிக்ஸர் அடிக்காமலே நிறைய ரன்னை எடுக்கிறதுதான் சவால். இன்னொரு சவால், ரன் அவுட்டை ஒப்புக்க வைக்கறது. அம்பயரா வந்து நிற்கிறவன் செத்தான்’’ என்கிறான் ரமேஷ்.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

‘‘பேட்டிங் டீமில் இருக்கிற ஒருத்தனே அம்பயரா நிற்கணும். ஓவர் த்ரோவுக்கு ரன் ஓடக் கூடாது. நாட் ரன் சைடுனு ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பக்கத்தை வெச்சிருப்போம். அங்கே பந்து போனால், ரன் அவுட் கிடையாது. வைய்டுக்கும் நோ பாலுக்கும் எக்ஸ்ட்ரா பந்து உண்டு; ஆனால், ரன் கிடையாது... இப்படி நிறைய ரூல்ஸ் உண்டு’’ என்று அடுக்கினான் புவனேஷ்.

‘‘ஆள் குறைவா இருக்கும்போது சிங்கிள்ஸ் விளையாடுவோம். கிரிக்கெட்டை கண்டுபிடிச்சது இங்கிலாந்துன்னா, இந்த சிங்கிள்ஸைக் கண்டுபிடிச்சது நிச்சயமா நம்ம நாட்டு பசங்கதான். இதுல இருக்கிற ரூல்ஸைத் தெரிஞ்சுக்க தனி கோர்ஸ் படிக்கணும். சச்சினே வந்தாலும் திணறிடுவாரு’’ என்று சிரிக்கிறான் ரமேஷ்.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

இந்த வருங்கால வீரர்களுக்கு இருக்கும் இன்னொரு பெரிய்ய்ய்ய்ய சவால், பெற்றோரை சமாளித்து விளையாட வருவது.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

‘‘ஐயையோ... அதை ஏன் கேட்கறீங்க? தோனியும் கோஹ்லியும் சிக்ஸர் அடிச்சா, கைதட்டற அப்பாக்களே, நாம பந்தைத் தொட்டதும் பாய்ஞ்சு வந்துப் பிடுங்கறாங்க. கணக்குல நூத்துக்கு நூறு எடுத்தால், பேட் வாங்கிக் கொடுக்கிறேன்னு பிளாக்மெயில் பண்றாங்க. அந்தச் சவாலையும் ஏத்துக்கிட்டு போன வருஷம், கணக்கில் 100 எடுத்தேன். அப்போ வாங்கினதுதான் இந்த 600 ரூபாய் பேட். சும்மா பந்தைத் தொட்டாலே, சிக்ஸருக்குப் பறக்கும்’’ என்று மட்டையைச் சுழற்றினான் ராகேஷ்.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

‘‘அப்பாக்களையாவது சமாளிச்சுடலாம். இந்த அம்மாக்கள் இருக்காங்களே, ‘அடுப்புல போட்டு  எரிச்சுடுவேன், பந்தை ஒளிச்சு வெச்சுருவேன்’னு விதவிதமா மிரட்டுவாங்க. இவங்களுக்குப் பயந்து, ஒவ்வொரு நாளும் வீட்டுல புது புது இடங்களை கண்டுபிடிச்சு ஒளிச்சு வைப்போம். அப்படியும் கண்டுபிடிச்சுடுவாங்க. ஃப்ரெண்ட்ஸ்   வீட்டுல வெச்சுக்கச் சொல்லி கொடுத்தால், என் அம்மாவுக்கு உன் அம்மா எவ்வளவோ பரவாயில்லைனு அலறுவாங்க’’ என சோக மழையாக கொட்டினான் பாலா.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

“என் அம்மா, ஞாயித்துக்கிழமைன்னா நல்லாத் தூங்கணும்னு சொல்லுவாங்க. ஃப்ரெண்ட்ஸ் வீடு தேடி வந்தாலும், ‘தூங்கறான் போங்கடாங்க’னு விரட்டி விட்ருவாங்க. அதனால், காலையிலேயே எஸ்கேப் ஆகி வந்துருவோம். மதியம் ஐஸ் விற்கிற அண்ணா வந்தால், அதையே லன்ச் மாதிரி சாப்பிட்டு, சாயந்திரம்தான் வீட்டுக்குப் போவோம்’’ என்று எஸ்கேப் தந்திரங்களைச் சொன்னான் புவனேஷ்.

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

இப்படி பல தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு வருவதுதான் இவர்களின் மாஸ். அதென்ன அடுத்த கட்டம்?

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

‘‘நல்லா விளையாட ஆரம்பிச்சோம்ன்னா, சீனியர் அண்ணன்கள்கிட்டே போய்ப் பேசுவோம். அவங்க விளையாடும் டோர்னோமென்ட்ல நமக்கும் சான்ஸ் கொடுப்பாங்க. தீபாவளி, பொங்கல் சமயத்தில் டோர்னோமென்ட் நடக்கும். அப்படி சீனியர்கள் டீமில் விளையாடி மூணு முறை கப் ஜெயிச்சு இருக்கோம்’’ என்றான் ராகேஷ்.

சபாஷ், கில்லியான பசங்கதான்!

- சா.கவியரசன், அட்டை, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு