Published:Updated:

ரியோ ஜாலம்

ரியோ ஜாலம்
பிரீமியம் ஸ்டோரி
ரியோ ஜாலம்

- ஒலிம்பிக் துளிகள்

ரியோ ஜாலம்

- ஒலிம்பிக் துளிகள்

Published:Updated:
ரியோ ஜாலம்
பிரீமியம் ஸ்டோரி
ரியோ ஜாலம்
ரியோ ஜாலம்

'ரியோ... ரியோ' என உலகம் அதிகம் உச்சரிக்கும் ரியோ டி ஜெனிரோவில், கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது ஒலிம்பிக் திருவிழா. அந்தத் திருவிழாவின் சில சுவாரஸ்யத் துளிகள்...

முதன்முதலாக தென் அமெரிக்க நகரம்  ஒன்றில் நடக்கும் ‘ஒலிம்பிக் திருவிழா' என்ற  பெருமையைப் பெறுகிறது, ரியோ ஒலிம்பிக். நான்கு இடங்களில், 33 விளையாட்டு அரங்கங்களில் நடக்கிறது. 5 கண்டங்கள், 206 நாடுகள், 42 விளையாட்டுகள், 10,000 வீரர்கள்,  8,000 ஒலிம்பிக் குழுப் பணியாளர்கள், 85,000 பாதுகாவலர்கள்,

ரியோ ஜாலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

45,000 தன்னார்வத் தொண்டர்கள்... என 17 நாட்கள் (ஆகஸ்ட் 5 - 21) ரியோவே அதகளமாக இருக்கிறது.

தொடக்க விழா ஜாலம்!

கோடிக்கணக்கான டாலர்களை அள்ளித் தெளித்து, தொடக்க விழா தேவையா? அதற்குப் பதில், மக்கள் நலத் திட்டங்கள், அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துதல் என்ற அடிப்படையில் நடந்தது விழா. 2010-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு செலவிடப்பட்டதில்     10 சதவிகிதத் தொகையே ஒதுக்கப்பட்டது. அதிலேயே கண்கவர் படைப்பாற்றல் மிளிரும் விதத்திலும், உணர்வுபூர்வமாகவும் நடந்தது ரியோ 2016 தொடக்க விழா.

ரியோ ஜாலம்

பிரேசில் நாட்டின் படகுப் போட்டி வீரர், ‘ராபர்ட் ஷைட்' (Robert Scheidt) விளையாட்டு வீரர்களின் சார்பில் உறுதிமொழி எடுத்தார்.   கஸ்டோவ் க்யூர்டன் (Gustovo Kuerten) எடுத்துவந்த ஒலிம்பிக் ஜோதியை, கூடைப்பந்து வீராங்கனை ஹார்டெனிக்கா (Hortencia Marcari) பெற்றுக்கொண்டார். கோர்டீரொ டி லிமா (Vanderlei Cordeiro de Lima) ஜோதியை ஏற்றி  கோலாகலத்தை ஆரம்பித்தார்.

புதியவை புகுத்துதல்!

ரியோ ஜாலம்

ஒலிம்பிக்கில் ஒவ்வொரு முறையும்  புதியதாக ஒரு விளையாட்டைச் சேர்ப்பார்கள் அல்லது நீக்கப்பட்ட விளையாட்டு இடம்பெறும். அந்த வகையில், 112 வருடங்களுக்குப் பிறகு  கால்ஃப் விளையாட்டும்,  92 ஆண்டுகளுக்குப் பிறகு ரக்பி விளையாட்டும் இந்த ஒலிம்பிக்கில் மீண்டும் சேர்க்கப்பட்டன. காற்றாடி அலை மிதவை (Kite Surfing) விளையாட்டுக்குப் பதில், பாய் மிதவை (Wind Surfing) சேர்க்கப்பட்டது.

நாடு இல்லை... நாங்கள் இருக்கிறோம்!

ரியோ ஜாலம்

ஒரு நாட்டின் குடிமகனாக இருந்து,   அகதிகளாக வேறு நாடுகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உலகம் முழுக்க உள்ளனர். அவர்களின் விளையாட்டு ஆற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புலம்பெயர்ந்தவர்கள் அணி (IOC Refugee Olympic Team - ROT). சிரியாவில் இருந்து இரண்டு நீச்சல் வீரர்கள், காங்கோவில் இருந்து இரண்டு ஜூடோ வீரர்கள், மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் மற்றும் காக்கூமா அகதிகள் முகாமில் இருந்து தடகள வீரர்கள் என 10 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்துகொண்டனர்.

பதக்க நாயகன் பெல்ப்ஸ்!

ரியோ ஜாலம்

ஒலிம்பிக் நீச்சல் போட்டி என்றாலே, அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்தான் ஹீரோ. இவர் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்  கிடைக்காமல் திரும்பினார். ஆனால், அடுத்த அடுத்த ஒலிம்பிக் மூலம் இதுவரை 21 தங்கப் பதக்கங்களைத் தட்டியிருக்கிறார்.

இந்த ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை ஜூடோ போட்டியின் மூலம் கொசோவோ நாட்டுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார், மஜ்லிண்டா கெல்மெண்டி(Maljinda Kelmendi).

வயது ஒரு தடையில்லை!

2015-ம் ஆண்டு நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்த, நேபாள நாட்டைச் சேர்ந்த 13 வயது கௌரிகா சிங் (Gaurika Singh), பெண்களுக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களில் இவர்தான் மிகவும் இளையவர். உஸ்பெகிஸ்தானின் ஒக்சானா அலெக்சாண்ட்ரோவ்னா
சுசொவிட்டினா(Oksana Aleksandrovna Chusovitina) என்ற வீராங்கனை அதிகபட்சமாக 44 வயதில், ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்றார்.

இந்திய வீரர்கள்!

இந்தியா சார்பாக 15 விளையாட்டுகள், 66 பிரிவுகள், ஏறத்தாழ 120  வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்களில் தமிழர்கள், கிருஷ்ணகிரியின் கோனே கவுண்டனுரைச் சேர்ந்த கணபதி (20 கி.மீ்் நடைப் போட்டி), வேலூர், சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், (பளுதூக்கும் போட்டி), டேபிள் டென்னிஸ் போட்டியில் உலகத் தர வரிசையில் 70-ம் இடத்தில் இருக்கும் அச்சந்த ஷரத் கமல்  ஒலிம்பிக்கில் பங்கேற்றார்கள்.

ரியோ ஜாலம்
ரியோ ஜாலம்

திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 52 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். உயர எழும்பி, அந்தரத்தில் கரணம் அடித்து, தடுமாற்றம் இல்லாமல் சிலைபோல தரை இறங்கும், 'ப்ரோடுனோவா வால்ட்' (Produnova Vault) பிரிவில், உலகின் மூன்று பெண்களில் இவரும் ஒருவர். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், ‘உலகத் தரம் வாய்ந்த ஜிம்னாஸ்ட்' எனும் சிறப்பான கோல்டு பின் [Gold Pin] வென்றவர்.

ரியோ ஜாலம்

பல மாதங்கள் பயிற்சி, கடுமையான முயற்சி மூலமே ஒவ்வொரு வீரரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள். வெற்றிபெறுபவர்கள் யாராக இருந்தாலும் கரவொலி எழுப்பி வாழ்த்துவோம். தோல்வியைத் தழுவும் வீரர்களின் முயற்சிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். விளையாட்டுக்கும் வீரர்களுக்கும் நாம் செலுத்தும் மரியாதை இதுவே.

- எம்.எஸ்.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism