அம்மா, அப்பாவுக்கு அப்புறம் நமக்கு ரொம்ப ஸ்பெஷல், நண்பர்கள். 'நட்பு பற்றி நாலே வார்த்தைகளில் சொல்லுங்க' எனச் சில நண்பர்களைப் பிடிச்சுக் கேட்டதும், ஐஸ்க்ரீமாக உருகி, உதிர்த்த வார்த்தைகள்...
லோகேஸ்வரன் – ஜெயப்பிரகாஷ்:

‘‘நான், நான்ஸ்டாப்பா பேசும் லொட லொட வாயன். பிரகாஷ் பேசினா, அவன் வாயில காதை வெச்சுதான் கேட்கணும். ஆனாலும், ஒண்ணா இருக்கோம் பாருங்க, இதுதான் நட்பு. எதிர் எதிர் குணம் இருந்தாலும், நட்பு ஒன்றாகவே இணைக்கும்.''
செந்தில் பாண்டி – கார்த்திகைச்செல்வி:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பயங்கர சேட்டைக்காரன் செந்தில்பாண்டி. ஆனா, என்கிட்டே அமைதியா நடந்துப்பான். அதுக்குக் காரணம், யாராவது கத்தினா எனக்குப் பிடிக்காது. நமக்குப் பிடிச்சவங்களுக்கு ஏற்ற மாதிரி நம்மை மாத்திக்கும் அன்புதான் நட்பு. நான், வெளியே போறேன்னு சொன்னா, பத்திரமா இருக்க ‘செந்திலை கூட்டிட்டுப் போ'னு என் பேரன்ட் அனுப்பிவைப்பாங்க.''
ப்யூலா - அபிநயா:

‘‘ஃப்ரெண்ஷிப்னா ஷேரிங்... ஷேரிங்னா ஃப்ரெண்ட்ஷிப். பிஸ்கட், ஸ்டோரி புக்ஸ், ஹோம்வொர்க்னு நாங்க ஷேர் பண்ணிக்காத விஷயமே இல்லை. அபிநயாவுக்கு ஜுரம்னா நான் சாப்பிட மாட்டேன். வேற எப்படிச் சொல்றதுனு தெரியலை.''
பவித்ரன் - ரோஷினி:

‘‘லாஸ்ட் வீக் ஸ்கூல்ல நடந்த பாட்டுப் போட்டியில், எனக்குத்தான் முதல் பரிசு. அதுக்குக் காரணம், பவித்ரன். நம்மகிட்டே இருக்கிற திறமையை ஊக்கப்படுத்தி, எதையும் எதிர்பார்க்காம நம்ம வெற்றிக்கு உதவும் அக்கறைதான் நட்பு. அதேமாதிரி, பாடம் சம்பந்தமா எந்த டவுட் வந்தாலும், பவித்ரனுக்குச் சொல்லிக்கொடுத்து, அவனையும் ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கவைப்பேன்.''
பிரதீப் – ராம்குமார்:

‘‘கிட்டிப்புள்களில் ஆரம்பிச்சு கிரிக்கெட் வரை விளையாடும் நட்பு எங்களோடது. பிரதீப் ஜெயிச்சா, நான் சந்தோஷப்படுவேன். நானும் ஜெயிக்கணும்னு அவன் விட்டுக் கொடுப்பான். இப்படி எல்லா விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து சந்தோஷப்படுறதுதான் நட்பு.''
இலக்கியா – நிவேதா:

‘‘லாஸ்ட் இயர்தான் நாங்க முதல் முறையா ஸ்கூல்ல சந்திச்சோம். ஒரே க்ளாஸ், ஒரே பெஞ்ச்னு ஆரம்பிச்சு யாராவது திடீர்னு காலை மிதிச்சுட்டா, ‘லக்கு, நிவி'னு கத்துற அளவுக்கு நட்பு. இப்போ, எங்க அம்மாக்கள் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. இதான் நட்பு. 200 பர்சென்ட் முழசா நம்மை அன்பினால் கரைச்சுக்கிறதுதான் நட்பு.''
டீனா - ஜோசப்:

‘‘எங்களுக்கு டோரா ரொம்ப பிடிக்கும். டோரா மாதிரியே இருக்கியேனு ஜோசப் சொல்வான். சோட்டா பீம், சாக்கோபார், ரைம்ஸ்னு எனக்குப் பிடிச்சதெல்லாம் ஜோசப்புக்கும் பிடிக்கும். அவனுக்குப் பிடிச்சதெல்லாம் எனக்குப் பிடிக்கும். அதான், ஃப்ரெண்ட்ஷிப்.''
தொகுப்பு: ச.ஆனந்தப்பிரியா, மு.ராகினி ஆத்ம வெண்டி படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், சூ.நந்தினி