
மை ஸ்கூல்... மை என்ட்ரன்ஸ்!

‘‘உங்க ஸ்கூல் என்ட்ரன்ஸை உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாத்தச் சொன்னா எப்படி மாத்துவீங்க?’’
சேலம், ஹோலி ஃப்ளவர் மெட்ரிக் ஹையர் செகண்ட்ரி பள்ளி மாணவர்களிடம் கேட்டதும்... பென்சில், கிரையான்ஸோடு களத்தில் குதித்தார்கள். இதோ, அவர்களின் சேஞ்ச் ஃபார் ஸ்கூல் என்ட்ரன்ஸ்...

மோகன்ராஜ்: “பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடி, எப்பவும் என்ட்ரன்ஸ்ல இருக்கும்.”
சுனில் குமார்: “எங்க ஸ்கூல் பெயருக்கு ஏற்ற மாதிரி என்ட்ரன்ஸ் முழுக்க ஃப்ளவர்ஸ் வைப்பேன். கலர் பலூன்ஸ், ரிப்பன்ஸ் என அசத்துவேன்.’’

ரிங்கு குமாரி: “கார்ட்டூன்ஸ்... கார்ட்டூன்ஸ்... கார்ட்டூன்ஸ். கேட், சுவர் எல்லாம் கார்ட்டூன்ஸ்தான் என் சாய்ஸ்.’

ஜஸ்வந்த்: “நேஷனல் லீடர்ஸ் சிலைகளை வைப்பேன். அவங்களோட வாசகங்களை சுவரில் எழுதுவேன்.’’
விர்ஷாலி: ‘‘எங்க ஸ்கூல் மெயின் ரோட்லயே இருக்கு. எப்பவும் பரபரப்பா இருக்கு. நிறைய மரங்களை வெச்சு, தோட்டமா மாற்றி, எல்லா வண்டிகளையும் திருப்பி விட்ருவேன்.’’

மகேந்திரகுமார்: “எனக்கு, கிரிக்கெட் விளையாட ரொம்பப் பிடிக்கும். நிறைய, கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்பை எனக்குப் பிடிச்ச மாதிரி டிசைன் பண்ணுவேன்.’’
இனிகா: “சுத்தம் ரொம்ப முக்கியம். அதை கீப் - அப் பண்ற மாதிரி வாசகங்களை எழுதி வைப்பேன்.’’

பிங்கி: “எனக்கு சோட்டா பீம், பார்பி கேர்ள் ரொம்பப் பிடிக்கும். ஸோ, என்ட்ரன்ஸ் கதவை அவங்க திறக்கிற ஆட்டோமேட்டிக் டிசைன் பண்ணுவேன். பார்க்கவே ஜாலியா இருக்கும்.’’
ஜெய கீர்த்தனா: “பளிச் ஒயிட்ல சுவர். அதில், நம்ம பாரம்பரியம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள் வரைஞ்சு வைப்பேன்.’’

ஜெகநாதன்: “ஃபிஷ், பேர்ட்ஸ், அனிமல்ஸ் எல்லாமே எனக்குப் பிடிக்கும். அதையெல்லாம் கேட் ஃபுல்லா வரைவேன். ஏன் யாருமே பிளாக் கலரை விரும்புறது இல்லை? நான், பிளாக் கலரைத்தான் அடிப்பேன்.”
- ச.ஆனந்தப்பிரியா, படங்கள்: சூ.நந்தினி