Published:Updated:

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

Published:Updated:
புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!
புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

பேனா, பென்சில், ஹோம்வொர்க், கிளாஸ் ரூம், லன்ச் டைம் என இந்த வருட ஸ்கூல் இன்னிங்ஸ் ஆரம்பிச்சாச்சு. சிலருக்கு அதே ஸ்கூல், அதே ஃப்ரெண்ட்ஸ். சிலருக்கு புது ஸ்கூல், புது ஃப்ரெண்ட்ஸ். ‘உங்களோட ஆரம்ப அனுபவத்தை ஷேர் பண்ணுங்க’ எனச் சில சுட்டிகளிடம் கேட்டோம்.

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் சேதுராஜன் பத்மா மெட்ரிக் பள்ளியின் எட்டாம் வகுப்பு ரோஜர் கோன்சால்வஸ் மற்றும் விக்னேஸ்வரன் இருவரும் தோஸ்த்துகள். ‘‘இந்த வருஷம் எங்களுக்கு கிடைச்ச கிப்ஃட், புது சைக்கிள். கியர் சைக்கிளில் ஸ்கிட் அடிச்சு சீன் போடணும்னு  ரொம்ப நாள் ஆசை. அப்பா, எனக்கு சைக்கிள் வாங்கித் தர்றதா சொன்னதும், ஓடிப்போய் இவன்கிட்டே சொன்னேன்” என்கிறார் ரோஜர் கோன்சால்வஸ்.

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இதைக் கேட்ட என் அப்பா, ‘விக்னேஷ், நீயும் சைக்கிள் வாங்கிக்க’னு சொல்லி ஸ்வீட் ஷாக் கொடுத்தார். அப்புறம் என்ன? ரெண்டு பேரும் ஒரே நாளில், ஒரே கலரில் சைக்கிள் வாங்கிட்டோம். என்னதான் ஊர் முழுக்க சைக்கிளில் சுத்தினாலும், ஸ்கூலுக்கு வந்து ஒரு கெத்து காட்டினாதான் மாஸ்’’ என்றார் விக்னேஸ்வரன்.

இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் துர்காதேவிக்கு கிடைச்ச சர்ப்ரைஸ், புது க்ளாஸ் டீச்சர். ‘‘ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் க்ளாஸ் எடுத்த ஆக்னெல்லா மேம், அவங்க சிரிப்பாலே என்னைக் கவர்ந்துட்டாங்க. என்னைப் பயமுறுத்திட்டு இருந்த இங்கிலீஷ், இப்போ பிடிச்ச சப்ஜெக்ட்டா மாறிடுச்சு.ஆக்னெல்லா மேம்  அவ்வளவு அழகா, பொறுமையா சொல்லித் தர்றாங்க. ஸ்கூல் ஸ்டார்ட் ஆகி கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ளே, 50 நியூ வேர்ட்ஸ் கத்துக்கிட்டேன். தேங்க்ஸ் அண்ட் ஐ லவ் யூ ஆக்னெல்லா மேம்’’ என ஆசிரியரைக் கட்டியணைக்கிறார்.

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

மதுரை, சொக்கிகுளம் செவன்த் டே மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்புக்கு புதிதாக வந்திருக்கிறார்  சிவபிரகாஷ். ‘‘இங்கே வந்து சேரும்போது கொஞ்சம் பயமா இருந்துச்சு. க்ளாஸ் ரூம்ல என்டர் ஆனதுமே எல்லோரும் எந்திரிச்சு நின்னு கிளாப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் புதுசா வர்றேன்னு மிஸ் மூலம் முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு, சூப்பர் வெல்கம் பண்ணிட்டாங்க. ஒரே நிமிஷத்துல எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க’’ என்கிறார்.

புது சைக்கிள்... புது ஃப்ரெண்ட்ஸ்!

இதே பள்ளியில் ஏழாம் வகுப்புக்கு புதிதாக வந்திருப்பவர், ஜனார்த்தனன். ‘‘புது ஸ்கூல், புது ஏரியா என ரொம்பவே தயக்கமா இருந்துச்சு. நான் ரொம்ப அமைதியான பையனாச்சா...’’ எனச் சொல்லும்போதே, ‘‘சும்மா சொல்றான் சும்மா சொல்றான். லன்ச் டைம் முடியிறதுக்குள்ளே எங்களை ஓட்ட ஆரம்பிச்சுட்டான். நாங்களும் புதுப் பையனாச்சேனு இப்போ விட்டிருக்கோம். அடுத்த வாரம் இந்தப் பக்கம் வந்துடாதீங்க. ஒரே அடிதடியா இருக்கும்’’ என்றபடி ஜனார்த்தனன் மீது தாவினார்கள் புது நண்பர்கள்.

உஷாராகி ஓடி வந்துட்டோம்ல!

- மு.ராகினி ஆத்ம வெண்டி, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்