Published:Updated:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

த்ரில் த்ரில் தீம் பார்க்!
News
த்ரில் த்ரில் தீம் பார்க்!

த்ரில் த்ரில் தீம் பார்க்!

த்ரில் த்ரில் தீம் பார்க்!

ம்மர் லீவ் கொண்டாட்டங்களில், எல்லோருடைய லிஸ்ட்டிலும் முதல் இடத்தில் இருப்பது தீம் பார்க். நாங்களும் சூப்பரான தீம் பார்க் போனோம். அங்கே, நாங்க செய்த கலாட்டாக்களைப் படிப்பதற்கு முன், தீம் பார்க் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் படிச்சுட்டு வாங்க!

த்ரில் த்ரில் தீம் பார்க்!

தீம் பார்க், என்பது இப்போது உருவான ஒன்றல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, குழந்தைகள் விளையாட பொழுதுபோக்குப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. உலகின் பழைமையான பொழுதுபோக்குப் பூங்கா, 1133-ம் ஆண்டு இங்கிலாந்தில் ‘பார்த்தலோமியா கண்காட்சி’ என்ற பெயரில் அமைக்கப்பட்டது.

த்ரில் த்ரில் தீம் பார்க்!

அதிக அளவில் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் விதவிதமான ராட்டினங்கள், வாகனங்கள் பொழுதுபோக்குப் பூங்காக்களில் இடம்பிடித்தன.

த்ரில் த்ரில் தீம் பார்க்!

டென்மார்க் நாட்டில் 1583-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பேக்கென்  பார்க்’ இன்றும் செயல்பட்டுவருகிறது. இதுவே, நடைமுறையில் உள்ள மிகப் பழைமையான பொழுதுபோக்குப் பூங்கா.

மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, பொழுதுபோக்குப் பூங்காக்கள் இன்னும் சுவாரஸ்யம் மிக்கதாக ஆனது. ‘ரோலர்கோஸ்டர்கள்’ இதன் பிறகே பிரமாண்டமாக உருவாகின.

த்ரில் த்ரில் தீம் பார்க்!

இங்கிலாந்தில் ‘பிளாக்பூல்’, அமெரிக்காவில் ‘கோனி தீவுகள்’, ‘லேக் காம்பௌன்ஸ்’, நியூயார்க், நியூஜெர்சி, அட்லான்டிக் சிட்டி எனப் பல புதிய பொழுதுபோக்குப் பூங்காக்கள், 1850-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகமாக உருவாகின.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்படும் பூங்காக்களாகத் தீம் பார்க்குகள் உருவாகின. அப்படி, அமெரிக்காவின் இண்டியானாவில் 1946-ல் தொடங்கப்பட்ட ‘சான்டாகிளாஸ் லேண்டு’ உலகின் முதல் தீம் பார்க்.

த்ரில் த்ரில் தீம் பார்க்!

உலகின் மிகப் பிரபலமான தீம் பார்க், டிஸ்னிலேண்டு. டிஸ்னியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைவைத்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில்தான் முதலில் ‘டிஸ்னிலேண்டு’ தீம் பார்க் உருவாக்கப்பட்டது. பிறகு, பாரிஸ், ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, ஹவாய் தீவுகள் என, உலகம் முழுவதும் பல பகுதிகளில் டிஸ்னிலேண்டு தீம் பார்க்குகள் அமைக்கப்பட்டன.

அப்பு கர்:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

1984-ம் ஆண்டு அமைக்கப்பட்ட அப்பு கர் தான் இந்தியாவின் முதல் தீம் பார்க். ‘அப்பு’ என்ற யானைதான் இந்தப் பூங்காவின் சின்னம். ‘கர்’ என்றால், இந்தியில் வீடு என்று அர்த்தம்.

கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸ்:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

வழக்கமான தீம் பார்க் கொண்டாட்டத்தோடு, நாதங்கி மகால், ஷௌஷா அரங்கம் என இரண்டு அரங்கங்களில் கண்ணைக் கவரும் ஒளி அமைப்புடன் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

எஸ்ஸெல்வேர்ல்டு:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

ஆசியாவின் மிகப் பெரிய தண்ணீர் தீம் பார்க் எனும் புகழுக்கு உரியது.

ஆட்லேப்ஸ் இமேஜிக்கா:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பறப்பது, கடற் கொள்ளையர்களின் த்ரில் பயணம், ஐந்து விலங்குகள் இசையை வாசித்துக்கொண்டே தண்ணீர் தெளிப்பது எனச் சுட்டிகளுக்குக் கொண்டாட்டமான தீம் பார்க் இது.

ராமோஜி சினிமா நகரம்:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

தீம் பார்க்குக்கு உள்ளேயே ஒரு பெரிய சினிமா நகரம் இருப்பது இதன் சிறப்பு.

வொண்டர்லா:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

சிங்கங்களின் பாதுகாப்புடன் தீம் பார்க்கைச் சுற்றுவது, குரங்குப் பொம்மையோடு விளையாடுவது, காளான் ராட்டினத்தில் சுற்றுவது என வித்தியாசமான ரைட்ஸ் நிறைந்தது.

எம்ஜிஎம்:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

மிகப் பெரிய ரோலர் கோஸ்டர்கள், கப்பலே ஊஞ்சல்போல ஆடுவது என உங்களின் துணிச்சலுக்கு சவால் விடும் தீம் பார்க்.

பிளாக் தண்டர்:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

நீலகிரியின் குளிர்ச்சியான காற்று, பசுமையான மரங்கள் சூழ தண்ணீரில் ஆட்டம் போடலாம்.

கிஷ்கிந்தா:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

அலையடிக்கும் குளம், பொம்மை ரயில்கள், டிராகனின் முதுகில் சவாரி என நிறைய நிறையக் கொண்டாட்டம்தான்.

குயின்ஸ் லேண்டு:

த்ரில் த்ரில் தீம் பார்க்!

அலைகளோடு விளையாட்டு, 150 அடி உயரத்தில் வேகமாக இறங்கும் கேபின், கேபிள் காரில் ஏரி மேல் பயணம்செய்து உற்சாகமாகலாம். 

த்ரில் த்ரில் தீம் பார்க்!

தீம் பார்க் பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஓகே. சென்னை சுட்டிகள் எம்ஜிஎம் தீம் பார்க்கில் செய்த கலாட்டாக்களைப் படிக்க ரெடியா? தீம் பார்க் செல்லும் வேனிலிருந்தே ஆட்டம் பாட்டம் தொடங்கிவிட்டது. இனி... இந்த எட்டு பேர் குழுவின் அட்டகாசங்கள்.

‘‘நாம வண்டியில் போகும்போது, ஸ்பீட் பிரேக்கர்ல ஏறி இறங்கும்போது, வண்டி மேலேயும் கீழேயும் தூக்கிப் போடுறது ஜாலியா இருக்கும். அதுபோல, தீம் பார்க்ல டிராகன் ரைடு போகும்போது அப்படியே மேலேயும் கீழேயும் ஏறி இறங்கினப்போ ரொம்ப உற்சாகமா இருந்துச்சு. இன்னொரு முறை கூட்டிட்டுப் போகச் சொன்னா, எல்லா ரைடும் ஒரு முறைதான் போக முடியும்னு சொல்லிட்டாங்க’’ன்னு சோக முகம் காட்டினார் தீக்‌ஷிதா.

‘‘டிராகன் ரைடு, ஜெட் ரைடு, சிலந்தி ரைடு, வாட்டர் ரைடுனு தைரியமானவங்களுக்கான எக்கச்சக்க ரைடுகள் இங்கே இருக்கு. அதுலயும் சிலந்தி ரைடு, செம த்ரில்’’ என்ற சித்தார்த்தை, ‘‘அதனால்தான், இந்த வீரன் ஒரே ஒரு ரைடுல வந்தார்’’னு தீபக் கலாய்ச்சார்.

“காளை மாட்டை அடக்குறதுல நான் எவ்வளவு பெரிய வீரன் தெரியுமா? மூணு நிமிஷத்துக்கு மேல காளை மாட்டை அடக்கிப் பிடிச்சது செம ஜாலியா இருந்தது’’னு தீபக் சொல்ல...

“நிஜமான காளை மாட்டை அடக்கின மாதிரி என்னா பில்டப் விடுறான் பாரு. டிவி-யில வர்ற மாதிரி மாட்டு பொம்மை மேல ஏறி மூணு நிமிஷம் உட்கார்ந்து இறங்கிட்டு, வீரம்னு பெருமை பீத்துறான்”னு நேஹா கிண்டல் செய்ததும், தீபக் முறைக்க, தீக்‌ஷிதா இருவருக்கும் சமாதானம் செய்துவைத்தார்.

“நான் சின்னப் பொண்ணுங்கிறதால, அந்த ரைடுல சேர்க்க மாட்டேங்கிறாங்க. சீக்கிரமே நான் உன்னைவிட வளர்ந்து அதிக நேரம் காளையை அடக்குவேன்” என நேஹா சபதம் செய்தார்.

‘‘நேஹா, அமைதி அமைதி. கொலம்பஸ் கப்பல் அனுபவம் சூப்பர். நாங்க கடைசியில் உட்கார்ந்து இருந்ததுனால, இந்தக் கடைசில இருந்து அந்தக் கடைசிக்கு ஊஞ்சல் மாதிரி கப்பல் ஆடினது செம த்ரில்’’னு தன் தைரியத்தை மதுமிதா காட்ட, ‘‘அப்படி ஊஞ்சல் ஆடும்போது, நான் குடிச்ச கரும்பு ஜூஸ் வெளிய வந்துடுற மாதிரி ஆகிருச்சு’’னு ஜிக்நாஷ் சொல்ல, எல்லோரும் சிரித்தனர். 

‘‘தீம் பார்க்குக்கு வரப்போற எல்லோரும் நான் சொல்ற டிப்ஸை ஒழுங்கா கேட்டுக்கோங்க. எல்லா ரைடுமே கொஞ்ச நேரத்துக்குப் பயப்படுற மாதிரி இருக்கும். ஆனா, கண்ணை மூடிக்கிட்டு 10 செகண்டு அமைதியா இருந்துட்டா எல்லாமே செம த்ரில்தான். அப்படியும்  பயமா இருந்தா, கண்ணை மூடிக்கிட்டு நல்லா கத்துங்க. குஷியில கத்துறதா நினைச்சுக்குவாங்க, நாம பயப்பட்டது யாருக்குமே தெரியாது. நானும் வீரன் தான்னு ஊருக்குள்ள எல்லாரையும் ஏமாத்திடலாம்’’னு பொறுப்பாக டிப்ஸ் கொடுத்தார் ஹிதேந்திரநாத்.

என்ன... எல்லோரும் சொன்ன அவங்க எக்ஸ்பீரியன்ஸையும், டிப்ஸையும் கேட்டீங்கதானே உங்களுக்குப் பிடிச்ச தீம் பார்க்குக்குப் போங்க, ஜாலியா சம்மரைக் கொண்டாடுங்க.

- சுப.தமிழினியன், படங்கள்: பா.காளிமுத்து