Published:Updated:

ஊர் சந்தையில் உற்சாக உலா!

ஊர் சந்தையில் உற்சாக உலா!
பிரீமியம் ஸ்டோரி
ஊர் சந்தையில் உற்சாக உலா!

ஊர் சந்தையில் உற்சாக உலா!

ஊர் சந்தையில் உற்சாக உலா!

ஊர் சந்தையில் உற்சாக உலா!

Published:Updated:
ஊர் சந்தையில் உற்சாக உலா!
பிரீமியம் ஸ்டோரி
ஊர் சந்தையில் உற்சாக உலா!
ஊர் சந்தையில் உற்சாக உலா!

‘குதிரைவாலி... குதிரைவாலி’ என்று கடைக்காரர் பேசுவதைக் கேட்டு, ஆகாஷும் நந்துவும் குழம்பிவிட்டார்கள்.

“டேய் நந்து, என்னடா இது குதிரை வாலையுமா விற்பாங்க?’’ என ஆகாஷ் அதிர்ச்சியாக, “அதானே, ப்ளூ கிராஸ்ல இருந்து வந்துருவாங்களே” என்றான் நந்து.

சென்னை, தியாகராயர் நகரில் இருக்கும் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடந்த, ஊர் சந்தை நிகழ்ச்சியில்தான் இந்த கலாட்டா. ‘செம்மை’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பு மாதம்தோறும் நடத்தும் பண்பாட்டுத் திருவிழா இது. கோடை வெயிலுக்கு இதமாக, மரங்கள் சூழ்ந்த நிழலில் தர்பூசணிப் பழத்துண்டுகளைச் சுவைத்தபடி, புதிய நண்பர்களுடன் ஜாலியாகக் கொண்டாடினர்.

ஊர் சந்தையில் உற்சாக உலா!

நந்துவும் ஆகாஷும் அந்தக் கடையில் எட்டிப் பார்க்க, அந்தக் கடைக்காரர் அரிசியை தராசில் நிறுத்துக்கொண்டிருந்தார்.

“என்னது, குதிரைவாலிங்கிறது அரிசியா?” என்று ஆச்சரியத்தோடு கடைக்காரரிடம் கேட்க, “ஆமாம். இதெல்லாம் நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகள்” என்றார்.

அரிசிக் கடைக்குப் பக்கத்தில், கருப்பட்டி கடலைமிட்டாய்க் கடை இருந்தது. ‘‘இதைச் சாப்பிட்டுப் பாருங்க. பிடிச்சிருந்தா அப்பாவை வாங்கித் தரச் சொல்லுங்க” என்றார் கடைக்காரர். சாக்லேட்டுகளின் சுவைக்கு சவால் விடுவதுபோல இருந்தது, அதன் புதுவிதமான சுவை.

ஊர் சந்தையில் உற்சாக உலா!

எண்ணெய்க் கடை, சிறுதானியக் கடை, வெண்ணெய்க் கடை என, அவர்கள் பார்த்திராத புதுப்புது கடைகளாக இருந்தன. கடை என்றால், சூப்பர் மார்க்கெட்டுகளில், கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி இருக்கும்  பொருட்களை வாங்குவது என்றே பழகியிருந்த இருவருக்கும் இது முற்றிலும் புது அனுபவம்.இங்கு, வரிசையாக மூட்டைகளில், மரப்பெட்டிகளில் பொருட்களைவைத்து, அவற்றைப் பற்றி விளக்கம் சொல்கிறார்கள். கொஞ்சம் சாம்பிள் கொடுத்து, டேஸ்ட் பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள்,

எதிரே வந்த குட்டிப் பையன், கையில் ஒரு பொம்மையோடு வந்தான். அதை, இவர்கள் இதற்குமுன் பார்த்ததே இல்லை. “இது என்ன?” எனக் கேட்க, “மரப்பாச்சி” என்றான்.

“நீங்க விளையாடும் நிறைய டாய்ஸ் பிளாஸ்டிக்கில் செய்தவை. அதை சின்னக் குழந்தைகள் வாயில் வைத்துக் கடிக்கும்போது, உடலுக்கு பாதிப்பு வரும். ஆனால், மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள் எந்தத் தீங்கையும் தராது. இதையெல்லாம் பார்க்கிறதுக்குதான் உங்களை அழைச்சிட்டு வந்தேன்” என்றார் பையனின் அப்பா.

ஊர் சந்தையில் உற்சாக உலா!

பொருட்கள் விற்பனை மட்டுமல்ல, விளையாட்டுகளும் உண்டு. உறியடிக்கும் போட்டியில் பானையைக் கயிற்றில் கட்டி, மேலே இழுத்து, ஜூட் சொன்னவுடன், வரிசையில் நின்றுகொண்டிருந்த முதல் சிறுவனே அடித்து உடைத்துவிட்டான். காலரைத் தூக்கிவிட்டபடி, “ஒரு வருஷமா நான் சிலம்பம் கத்துக்கிட்டு இருக்கேன். தம்மாத்தூண்டு பானையை உடைக்க முடியாதா?” என்றான் கெத்தாக.

இன்னொரு இடத்தில், மண்ணில் செய்த விதவிதமான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுட்டிகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ச்சிசெய்தனர். மண்ணில் செய்யப்பட்ட கப் அண்ட் சாஸரை அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய சுட்டிப் பெண், “இனிமேல் இதில்தான் காபி குடிப்பேன்” என்று க்யூட்டாக போஸ் கொடுத்தார்.

ஊர் சந்தையில் உற்சாக உலா!

திடீரென ஓடிவந்த பையன், “அங்கே ஒரு அங்கிள் மண்ணுல கப் செய்யச் சொல்லிக் கொடுக்குறார்” என்று சொல்ல, அத்தனை பேரும் அந்த இடத்தை நோக்கி ஓடினார்கள்.

மண் குடுவைகள், விளக்குகள், சிறு கிண்ணங்கள் செய்துகொண்டிருந்த தேவராஜ் என்பவரிடம், “அங்கிள், அந்த மெஷின்ல நாங்களே செய்யலாமா?” எனக் கேட்டார் ஒரு சுட்டி. அவரும் கற்றுக்கொடுக்க, குட்டிக் கரங்களால் க்யூட்டாக உருவாகின மண் பாத்திரங்கள்.

சுடச்சுட பரிமாறப்பட்டன இயற்கை உணவுகள். உளுந்துக் களி, தினை லட்டு, தேன் நெல்லிக்காய் என இதுவரை ருசித்திராத உணவுகளை ஒரு வெட்டு வெட்டினர். சற்று நேரத்தில், பறை இசை கேட்டதும் எல்லோரும் அங்கே  ஓடினர். பறை ஆட்டம், நாடகம், நடனம் எனக் கிராமியக் கலைகள் அரங்கேறின.

ஊர் சந்தையில் உற்சாக உலா!

“நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள், எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன என்றே தெரிவதில்லை. அதனால், உற்பத்தியாளர்களும் வாடிக்கையாளர்களும் சந்திக்கும்போது நல்ல உறவு உருவாகும். குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதே முதன்மையான நோக்கம்” என்கிறார், செம்மை அமைப்பின் பொறுப்பாளர் பொ.ராஜேஸ்வர்.

‘‘தீம் பார்க், மால் ரவுண்ட்ஸ்ல கிடைக்கிற உற்சாகத்தைவிட இது சூப்பரா இருக்கு. உடம்புக்கும் நல்லதுங்கிறப்போ, ஒவ்வொரு மாதமும் விசிட் அடிப்போம்” என்ற சுட்டிகளின் குரலில் அவ்வளவு குதூகலம்!

செய்தி, படங்கள்: ஜெ.விக்னேஷ்