Published:Updated:

சம்மர் ஸ்பெஷல்!

சம்மர் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
சம்மர் ஸ்பெஷல்!

சம்மர் ஸ்பெஷல்!

சம்மர் ஸ்பெஷல்!

சம்மர் ஸ்பெஷல்!

Published:Updated:
சம்மர் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
சம்மர் ஸ்பெஷல்!

கோடை விடுமுறை என்றதும்  சட்டென உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? உங்க ஹாலிடே பிளான் என்ன ஃப்ரெண்ட்ஸ்? 

சம்மர் ஸ்பெஷல்!

அர்ஸிதா: ‘‘எனக்கு ஸ்கேட்டிங்ல கலக்கணும்னு ஆசை. அதுக்காக, அப்பாகிட்டே கேட்டு இந்த ஸ்கூட்டர் ஸ்கேட் வாங்கினேன். ஸ்கேட், ஸ்கேட், ஸ்கேட். இந்த சம்மர் லீவு ஃபுல்லா ஸ்கேட் பண்ணிட்டே இருக்கப்போறேன்!’’

சம்மர் ஸ்பெஷல்!

ராகுல்: ‘‘ஒரு தீம் பார்க்ல நாள் முழுக்க விளையாடணும்கிற என்னோட ஆசை, போன வருஷம் நிறைவேறிச்சு. நீச்சல் அடிச்சது, ஜெயன்ட் வீலில் சுத்தினது என இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க முடியாத சந்தோஷம் அதுதான்!’’

சம்மர் ஸ்பெஷல்!

ஜெகன்: ‘‘எனக்கு ஸ்விம்மிங்னா ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஏரியில், நண்பர்களோடு சேர்ந்து காலையில் இருந்து சாயந்திரம் வரைக்கும் நீச்சல் அடிச்சுட்டே இருப்பேன். லீவுனா நீச்சல், நீச்சல்னா லீவு!’’

சம்மர் ஸ்பெஷல்!

வசீகரன்: ‘‘ஹோம்வொர்க் இல்லே,  டெஸ்ட் இல்லே. ஃப்ரெண்ட்ஸ்கூட விளையாடிட்டே இருப்பேன். கார்ட்டூன்ஸ் பார்த்துட்டே இருப்பேன்.  சோட்டா பீம் மாதிரி சண்டை போடுவேன். இதான், என்னோட பிளான்!’’

சம்மர் ஸ்பெஷல்!

அபிநயா: “லீவுனா ஞாபகம் வர்றது வில்லேஜ் பாட்டி வீடுதான். நான் வந்திருக்கேன்னு பாட்டி நிறைய பலகாரம் செஞ்சு தருவாங்க. பஜ்ஜி, சுண்டல், குழிப் பணியாரம்னு நண்பர்களோடு சேர்ந்து வீட்டுத் தோட்டத்தில் உட்கார்ந்து சுடச்சுட சாப்பிடுவோம். நல்லவேளை இப்போ வந்து கேட்டீங்க. இன்னும் டூ டேஸ்ல கிளம்பிருவேன்!’’

சம்மர் ஸ்பெஷல்!

பவித்ரன்: “லீவு விட்டா போதும். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து சைக்கிள் காம்பெடிஷன் வெச்சு விளையாடுவோம். நிறையத் தடவை வின் பண்ணியிருக்கேன். டெல்லி எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ்னு எங்க சைக்கிளுக்கு பேர் வெச்சுக்கிட்டு செம ஸ்பீடா பறக்கிறதே ஜாலி!’’

சம்மர் ஸ்பெஷல்!

யாழினி: ‘‘லீவுன்னா நிறைய நிறைய ஐஸ்க்ரீம்! அம்மாகிட்டே கேட்டா, சளி பிடிச்சிக்கும்னு சொல்லி வாங்கித் தர மாட்டாங்க. நான், நைஸா தாத்தா, பாட்டிகிட்டே வாங்கிச் சாப்பிடுவேன்.’’

சம்மர் ஸ்பெஷல்!

சாய் அன்விதா: “லீவுல, பக்கத்தில் இருக்கிற பார்க்தான் என்னோட டூரிஸ்ட் ஸ்பாட். காலையிலும் சாயந்திரமும் அங்கே போய்டுவேன். ஊஞ்சலில் ஆடிக்கிட்டே இருப்பேன். ஊஞ்சல், ரொம்ப ஸ்பீடா மேலே போய் வர்றப்போ, பறக்கிற மாதிரியே இருக்கும்.’’

தொகுப்பு:ச.ஆனந்தப்பிரியா, பா.நரேஷ், கோ.இராகவிஜயா படங்கள்: சூ.நந்தினி, க.சர்வின்