தம்பிங்களோடு தகராறு

‘‘நம்ம நாட்டுல அக்காவா பிறக்கிறது எவ்வளவு பெரிய தியாகம் தெரியுமா? இந்தத்  தம்பிங்க பண்ற அட்ராசிட்டியை லிஸ்ட் போட்டா, நாலு ‘பாகுபலி’ படம் எடுக்கலாம்’’ எனப் புலம்புகிறார்கள், எங்க ஸ்கூல் அக்காஸ். இதோ சாம்பிளுக்கு நாலு...

தம்பிங்களோடு தகராறு

பிரியதர்ஷினி: ‘‘10 பிஸ்கட்டை ரெண்டாப் பிரிக்கச்சொன்னா, பைவ் அண்டு ஃபைவ்னுதானே பிரிக்கணும்? என் தம்பி அர்ஜூன், சிக்ஸ் அண்டு ஃபோர்னு பிரிப்பான். மேத்ஸ்ல வீக்னு நினைக்காதீங்க. சரி, இந்தப் பிரிக்கிற வேலையே வேண்டாம்னு ரெண்டு பிஸ்கட் பாக்கெட், ரெண்டு சாக்லேட்னு வாங்கி வந்தாலும் பிரச்னை தீராது. அவன் பாக்கெட்டைச் சாப்பிட்டு, என் பாக்கெட்டில் பங்கு கேட்பான். அப்பவும் அதே சிக்ஸ், ஃபோர் ஃபார்முலாவைச் சொன்னா கடுப்பு வருமா... வராதா?’’

தம்பிங்களோடு தகராறு
தம்பிங்களோடு தகராறு

ஐஸ்வர்யா: ‘‘பேச்சு பேச்சா இருக்கணும்னு வடிவேல் அங்கிள் எவ்வளவு சொல்லியிருக்கார். ஆனாலும், என் தம்பி விஷால் ப்ரணவ், திருந்தவே மாட்டான். எனக்குக் கொஞ்சம் வாய் நீளம்தான். அதுக்காக, அவனும் வாயாலதானே சண்டை போடணும். அது என்ன கையை நீட்டுறது? நான் ரெட்டைஜடை போடுறது, இவன் பிடிச்சு இழுக்கவா? இந்த அநியாயத்தைக் கேட்க அக்காவுக்கு எல்லாம் அக்காவா, ஒரு அக்கா எப்போதான் பிறப்பாங்களோ?’’ 

தம்பிங்களோடு தகராறு
தம்பிங்களோடு தகராறு

பவித்ரா: ‘‘என் தம்பி பேரு திருமுருகன். பேசாம அவனுக்கு திருவிநாயகன்னு வெச்சிருக்கலாம். பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டினு கலந்துக்கிட்டு, கஷ்டப்பட்டு நான் வாங்கி வர்ற பரிசுகள் எல்லாத்தையும் அலுங்காம எடுத்துவெச்சுப்பான். கேட்டா, தேம்பித் தேம்பி அழுவான். சின்னப் பையன்தானே, கொடுத்துருனு அம்மாவும் சொல்வாங்க. நானும் கொடுத்துருவேன். என்னோட இந்தக் கதையைக் கேட்டு யாராவது ‘தியாகி பவித்ரா’னு பட்டம் கொடுத்துராதீங்க. ஏன்னா, அதையும் அவன்தான் எடுத்துப்பான்!’’    

தம்பிங்களோடு தகராறு
தம்பிங்களோடு தகராறு

ஜனனி: ‘‘காலையில் கண் விழிக்கிறதில் ஆரம்பிச்சு, ராத்திரி தூங்கப்போகுற வரைக்கும் தம்பியோடு தகராறுதான். நான் குளிக்கப்போகுறப்போதான் அவனும் குளிக்கப்போவான். நான் டி.வி பார்க்கும்போதுதான் அவனும் வேற சேனல் பார்க்க வருவான். எப்படியோ போய்த்தொலைனு ரெஸ்ட் எடுக்கப்போனா, கட்டில்ல இடம் பிடிக்கத் தகராறு செய்வான். தூங்கின பிறகு கனவிலும் வந்து நிற்பான் பாருங்க... அப்போதான் பயங்கரக் கடுப்பா இருக்கும்!’’

தொகுப்பு: அ.காவ்யா, தி.ரேஷ்மி.

தம்பிங்களோடு தகராறு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு