பிரீமியம் ஸ்டோரி
சிரிப்போ சிரிப்பு!

அர்ஜூன்: ‘‘அம்மா, எங்க டீச்சருக்கு பர்த்டே வருது. கிஃப்ட் வாங்கணும்.’’
அம்மா: ‘‘ஒரு முறையாவது என் பர்த்டேவுக்கு கிஃப்ட் தந்திருக்கியாடா?’’
அர்ஜூன்: ‘‘நீ மார்க் போட மாட்டியே!’’

சிரிப்போ சிரிப்பு!
சிரிப்போ சிரிப்பு!

மகன்: ‘‘அப்பா, நான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தா என்ன செய்வீங்க?’’
அப்பா: ‘‘எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்டா.’’
மகன்: ‘‘அதனாலதான் கடைசி ரேங்க் எடுத்திருக்கேன்.’’

சிரிப்போ சிரிப்பு!

பக்கத்து வீட்டு அங்கிள்: ‘‘நிறுத்துங்க சார், ஏன் படிச்சுக்கிட்டு இருக்கிற பையனைப் போட்டு அடிக்கிறீங்க?’’
தந்தை: ‘‘சும்மா இருங்க சார், பரீட்சைக்குப் போகாம உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்கான்.’’

சிரிப்போ சிரிப்பு!

ராஜேஷ்: ‘‘என் வீட்டுக் கிளி, நான் பேசற மாதிரியே பேசும்’’
சந்தோஷ்: ‘‘கிளிகூட அசடு மாதிரி பேசுமா?’’

சிரிப்போ சிரிப்பு!

ஒருவர்: ‘‘ஆர்.ஜே.வேலை கிடைச்சும் ஏன் சோகமா இருக்கே?’’
இன்னொருவர்: ‘‘சம்பளம் கேட்டா, ‘கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ன்னு சொல்றாங்க.’’

சிரிப்போ சிரிப்பு!

டீச்சர்: ‘‘சரண்,  உனக்குப் பிடிச்ச ஊர் எது?’’
சரண்: ‘‘சுவிட்சர்லாந்து.’’
டீச்சர்: ‘‘எங்கே ஸ்பெல்லிங் சொல்லு.’’
சரண்: ஐயய்யோ... அப்படினா, கோவா!’’

சிரிப்போ சிரிப்பு!

ஆசிரியர்: ‘‘உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?’’
சுரேஷ்: ‘‘ஊர் சுத்துறவங்களப் பத்தி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு. விட்டுத்தள்ளுங்க சார்.’’

சிரிப்போ சிரிப்பு!

சுந்தரமூர்த்தி: ‘‘என் பையனுக்கு புக் படிக்கும் பழக்கம் அதிகம். போன வாரம் ‘Facebook’ வாங்க 10,000 ரூபாய் கொடுத்தேன்.’’
ராமமூர்த்தி: ‘‘உங்க பையன் நல்லா ஏமாத்திட்டான். அந்த ஃபேஸ்புக் 6,000 ரூபாய்தான். என் பையன் வாங்கினானே.’’

- எஸ்.அஷ்ரஃப் அலி, டி.வி.கெளஷிக் பாபு, எம்.விஷ்ணுவர்த்தன், ஆர்.ஹரிராம் பிரசாத், எம்.முஹமத் ஆசிக், ஜெ.குரு பிரசாத், எஸ்.சதாம் ஹுசேன்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு