Published:Updated:

மதுரைக் குசும்பு தனி ரகம்!

மதுரைக் குசும்பு தனி ரகம்!

மதுரைக் குசும்பு தனி ரகம்!

மதுரைக் குசும்பு தனி ரகம்!

மதுரைக் குசும்பு தனி ரகம்!

Published:Updated:
மதுரைக் குசும்பு தனி ரகம்!

துரை என்றால் தமிழ். தமிழ் என்றால் மதுரை. சங்க காலம் முதல் வாட்ஸ்அப் காலம் வரை பல துறைகளில் ஜொலிக்கும் தமிழகத்தின் பிரபலங்கள் பட்டியலை எடுத்தால், பலரும் மதுரைக்காரர்களாக இருப்பார்கள். அப்படி ஒருவர்தான், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

மதுரைக் குசும்பு தனி ரகம்!

தமிழ்த்துறைப் பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களில் ஜொலிக்கும்  அவருடனான குபீர் சந்திப்பு இது...

‘‘இதுவரை எத்தனை மேடைகளில் பேசி இருக்கீங்க?’’

‘‘எம்.ஏ படிக்கையில, என் அப்பா பேசவேண்டிய மேடையில முதன்முதலில் பேசினேன். அப்ப இருந்து 36 வருஷமா பேசிட்டு இருக்கேன்.’’

‘‘பள்ளிக் காலத்துல மேடை நாடகம் போட்டு இருக்கீங்களா? அதுல மறக்க முடியாத ஒண்ணு...’’

‘‘நிறைய போட்டு இருக்கேன். ஒரு நாடகத்தில் பிராக்டிஸ் சரியா செய்யலை. கையை துப்பாக்கி போலக் காட்டி நடிச்ச ஒருத்தன், அரங்கேற்றத்தில் துப்பாக்கியை காணாமல், வெறும் கையைக் காட்டி சுட்டுருவேன்னு சொன்னான். நான் அதைச் சமாளிக்க, ‘வெறும் கையில சுடுறே’னு நக்கல் பண்ண, ‘அப்பவும் நீ சாவடா’னு சொல்லி எல்லோரையும் சிரிக்கவெச்சான்.’’

‘‘உங்களின் மறக்க முடியாத ஆசிரியர் யார்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரைக் குசும்பு தனி ரகம்!

‘‘அ, ஆ, கற்றுக்கொடுத்ததில் இருந்து கல்லூரி வரை எல்லாருமே மறக்க முடியாதவங்கதான். முதல் வகுப்பு படிக்கும்போது, ஓர் ஆசிரியை கையில் குடை பிடிச்சுட்டு, கண்ணாடி போட்டுட்டு வருவாங்க. அந்தக் காட்சியை இன்னும் மறக்கலை.’’

‘‘மதுரைக் குசும்பு பத்தி என்ன நினைக்கிறீங்க?’’

‘‘எல்லா ஊரிலும் குசும்புக்காரங்க இருக்காங்க.  ஆனா, மதுரைக்காரங்க தனி ரகம். எந்தப் பயமும் இல்லாம அடிச்சுவிடுவாங்க. பேருந்துகளில் LSS-னு ஒண்ணு உண்டு. லிமிட்டெட் ஸ்டாப்களில் மட்டுமே நிற்கும். அதில் ஏறும்போது, ‘இடையில நிக்காது, இடையில நிக்காது’னு கண்டக்டர் சொல்வாரு. அதுக்கு ஒருத்தர், ‘இடையில நிக்காதுன்னா, இது என்ன  பாலிஸ்டர் வேட்டியா?’னு கேட்டாரு. அவ்வளவு அக்குறும்பான குசும்புக்காரங்க நம்ம மதுரைக்காரங்க.’’

‘‘உங்களுக்கும் கமலுக்கும் உண்டான நட்பு பற்றி...’

மதுரைக் குசும்பு தனி ரகம்!


‘‘கமலஹாசனுக்கு தமிழ் மீது பற்று என்று சொல்வதைவிட, காதல் என்று சொல்லலாம். அதுவே, எங்கள் இருவருக்குமான நட்புக்குக் காரணமாச்சு. அவரும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவரது படங்களிலேயே பார்த்திருப்பீங்க. நாங்கள் சந்தித்தால், இலக்கியம், சினிமா, சிரிப்பு என நிறையப் பேசுவோம்.’’

‘‘‘குட்டிப் புலி’ படத்தில் நடிச்ச அனுபம் எப்படி இருந்தது?’’

‘‘அந்தப் படத்துக்கு 3 மணி நேரமே கால்ஷீட்.  கதாநாயகனைக் கடுப்பு ஏத்துற மாதிரி ஒரு சீன். அந்தப் பக்கம் போன ஒரு புள்ளைகிட்ட, அந்த சீன்ல காட்ட ஒரு கப் தேவைனு கேட்டேன். அந்தப் பாப்பா, கட்டை விரல் அளவுக்கு எடுத்துட்டு வந்துச்சு. அது, ஹிட்டான சீன்.’’

‘‘வீடு எங்கும் விநாயகரா இருக்கே, உங்களுக்கு விநாயகர்தான் பிடிக்குமா?’’

‘‘எனக்குப் பலரும் கொடுக்குற பரிசு விநாயகராகவே இருக்கு. என்னைவிட என் மகனுக்கு விநாயகர் மேலே  ஆர்வம் அதிகம்.’’

மதுரைக் குசும்பு தனி ரகம்!

‘‘உங்களுக்குப் பிடிச்ச காமெடியன் யார்?’’

‘‘அந்தக் காலத்து காமெடியன்கள் நாகேஷ், பாலையாவில் இருந்து இப்போ, இருக்கிற ‘புரோட்டா சூரி’ வரை பிடிக்கும்.  ‘புரோட்டா’ சூரியோடு ‘ரஜினி முருகன்,’ ‘மாப்பிள்ளை சிங்கம்,’ ‘மருது’ ஆகிய படங்களில் நடிச்சிருக்கேன்.’’

‘‘பேராசிரியரா நீங்க உங்க ஸ்டூடன்ட்ஸை எப்படி சமாளிக்கிறீங்க?’’

‘‘ஆசிரியராக இருக்கவேண்டிய நேரத்தில் ஆசிரியராகவும் நண்பனா இருக்கவேண்டிய நிமிடங்களில் நண்பனாகவும் இருப்பேன்!’’

- கு.சூர்ய பிரகாஷ், ர.சூர்யா, ஜெ.குருபிரசாத்,  பெ.சந்துரு, க.சத்யா, வ.ம.சுப்ரஜா, ந.ஜெ.திவ்யலட்சுமி, வே.சண்முகபிரியா, டி.வி.கெளசிக் பாபு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism