பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

பலே மாயச் சதுரம்!

பலே மாயச் சதுரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பலே மாயச் சதுரம்!

பலே மாயச் சதுரம்!

ணிதத்தில் மாயச் சதுரங்கள் பிரபலமானவை.எப்படிக் கூட்டினாலும் ஒரே எண் வரும்படியாக இவை அமைக்கப்படும். கணிதமேதை ராமானுஜன் இப்படி ஒரு மாயச் சதுரத்தை உருவாக்கினார். அவருடைய மாயச் சதுரம் போல நானும் உருவாக்க ஆசைப்பட்டேன். என்னுடைய பிறந்தநாளை (22.8.1998) முதல் வரிசையில் வைத்து, இந்த மாயச் சதுரத்தை உருவாக்கினேன்.

பலே மாயச் சதுரம்!
பலே மாயச் சதுரம்!

கீழே சொல்லி இருப்பது போல கூட்டிப் பாருங்கள், மாயச் சதுரத்தின் ஆச்சர்யத்தைத் தெரிந்துகொள்வீர்கள்.

• ஒவ்வொரு வரிசையையும் நீளவாக்கிலும், குறுக்காகவும் கூட்டினால், 147 வரும்.

• இந்தச் சதுரத்தின் மூலை விட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டினாலும் 147 வரும்.

• முக்கோண வடிவில் குறியிடப்பட்ட எண்களைக் கூட்டினாலும் 147 வரும்.

• வட்ட வடிவில் குறியிடப்பட்ட எண்களைக் கூட்டினாலும் 147 வரும்.

• சதுரத்தின் மையத்தில் இருக்கும் சின்னச் சதுரத்தில் உள்ள நான்கு எண்களைக் கூட்டினாலும் 147 வரும்.

இதுபோல நீங்களும் உங்கள் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து மாயச் சதுரத்தை உருவாக்கலாமே!

- இ.ஹரிஹரன்