Published:Updated:

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

-வீக்கெண்ட் வில்லேஜ் ரவுண்ட்

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

-வீக்கெண்ட் வில்லேஜ் ரவுண்ட்

Published:Updated:
பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

‘இப்போதெல்லாம் வில்லேஜிலும் கிரிக்கெட்தான் விளையாடுறாங்க. பழைய விளையாட்டுகளை மறந்தே போய்ட்டாங்க’ என்று பலரும் சொல்கிறார்களே, அது உண்மையா எனத் தெரிஞ்சுக்க நினைச்சோம். துருப்பூர் மாவட்டம், மருதுரை கிராமத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமை ரவுண்டு அடித்தோம்.

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

‘அண்ணே, ஓரம் போங்க... ஓரம் போங்க’ என்று பின்னாடி சத்தம் வந்தது. மிரண்டு திரும்பினால், டயரை ஓட்டியவாறு மூன்று பேர்.

‘‘கோவை எக்ஸ்பிரஸ், டெல்லி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் எல்லாம் ரோட்டுல போய்ப் பார்த்திருக்கீங்களா? இதோ போகுது பாருங்க” என்றான் கிருபாகரன்.

“நாங்களும் கிரிக்கெட் விளையாடுவோம். ஆனா, பழைய விளையாட்டுகள் எதையும் மறக்கலை. எங்க பின்னாடியே வந்து பாருங்க. இன்னும் என்னவெல்லாம் விளையாடுறோம்னு தெரியும்’’ என்றான் தரன்.

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

வேகமாகச் சென்ற அந்த எக்ஸ்பிரஸ் வண்டிகள், ஆற்றங்கரையில் நின்றது. அங்கே தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த நண்பர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.

‘‘காலையில் இங்கே வந்தோம்னா, ரெண்டு மணி நேரமாவது சினிமா கதை, ஸ்கூல்ல நடந்ததுனு ஜாலியா பேசிக்கிட்டே மீன் பிடிப்போம்’’ என்றான் கிருபாகரன்.

‘‘பிடிச்ச மீன்களை வீட்டுக்கு எடுத்துப்போய் கொடுக்க ஆசைதான். ஆனா, வீட்டுக்கு எடுத்துட்டுப் போறதுல என்ன பிரச்னைனா, ‘இவ்வளவு நேரம் அங்கேதான் இருந்தியா?’னு கேட்டுத் திட்டுவாங்க. அதனால, தூண்டில்ல சிக்கின மீனை பெரும்பாலும் மீண்டும் ஆத்துலயே விட்டுருவோம்’’ எனச் சிரித்தான் பிரகாஷ்ராஜா.

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

‘‘அட ஊதுங்கடா சங்கு, ‘கோலி’ விளையாட்டுல நான்தான் கிங்கு’’ எனப் பாடிக்கொண்டே வந்த முகேஷ்குமார், “யாருடா கோலி விளையாட வர்றீங்க?’’ எனக் கேட்டதும், ஆற்றில் உள்ள மீன்களுக்கு டாட்டா  காட்டிவிட்டு கிளம்பினார்கள்.

அவர்கள் மும்முரமாக கோலி விளையாடிக்கொண்டிருந்தபோது, கில்லியோடு வந்தான்  கார்த்தி. உடனே, ‘அண்ணன்களுக்கு நம்ம திறமைகளைக் காட்டுறதுக்காக, கோலி விளையாட்டுக்கு பிரேக் விட்டுட்டு கில்லி ஆடுவோம்’’ என்றான் ஸ்ரீதரன்.

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

“நீங்க கில்லி விளையாடி இருக்கீங்களாண்ணே? கில்லி ஆடுறது சாதாரண விஷயம் இல்ல. கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் முகத்துல பட்டுத் தெறிச்சுடும்.நான் எத்தனையோ வீரத்தழும்புகளை வாங்கி இருக்கேன்.முக்கியமா இதை நோட் பண்ணிக்கங்க. கிரிக்கெட்னா தோனி மாதிரி, கில்லின்னு சொன்னா, இந்த ஊர்ல நான்தான்’’னு கெத்தாகச் சொன்னான் கார்த்தி.

‘‘போதும்டா, ரொம்ப அலட்டாதே. என்னை மாதிரி பச்சைக்குதிரை தாண்டுவியா நீ?’’ எனச் சவால்விட்டான்  பிரகாஷ்ராஜா.

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

உடனே கில்லிக்கு பேக்-அப் சொல்லிவிட்டு, பச்சைக்குதிரை ஏறினார்கள்.

‘‘உங்க ஊர்ல கேர்ள்ஸே இல்லியா?அவங்க எல்லாம் எங்கே போய்ட்டாங்க?’’ எனக் கேட்டோம்.

‘‘எல்லோருக்கும் அக்கா, தங்கச்சிங்க இருக்காங்க. எந்தத் தெருவுல எத்தனை மணிக்கு நாங்க சுத்திட்டு இருந்தோம்னு அப்பா, அம்மாகிட்டே சொல்றதே அவங்கதானே. வாங்க அவங்களைப் பார்ப்போம்’’ என அழைத்துச் சென்றார்கள்.

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

ஒரு கோயில் அருகே தன் தோழிகளோடு நொண்டி விளையாடிக்கொண்டிருந்த ரூபிணி, ‘‘பசங்களைவிட பாரம்பரிய விளையாட்டுக்களை மறக்காமல் இருக்கிறது  நாங்கதான். ‘பல்லாங்குழி,’ ‘கல்லாங்காய்,’ ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி,’ ‘பூப்பறிக்க வருகிறோம்’னு நிறைய விளையாடுவோம்’’ என்றாள்.

‘‘இப்போ, பரீட்சை நேரமா இருக்கு. லீவுல வாங்க. ஒருநாள் ஃபுல்லா விளையாடிக் காட்டுறோம்’’ என்றாள் லாவண்யா.

பாரம்பரிய விளையாட்டை மறக்காதவங்க நாங்க!

‘‘ஆஹா... நல்லா போய்ட்டு இருக்கும்போது, எக்ஸாமை ஞாபகப்படுத்தி டென்ஷன் பண்ணிட்டாங்களே. இதுக்குத்தாண்ணே, நாங்க இங்கே வர மாட்டோம்னு சொன்னோம். கேட்டீங்களா?’’ என முகேஷ்குமார் சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.

- பா.நரேஷ், படங்கள்: க.சத்தியமூர்த்தி