Published:Updated:

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

Published:Updated:
சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

ண்டிகை நாட்களில் கரன்ட் இல்லாவிட்டாலும் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஓடுவதுபோலவே இருக்கும். அந்த அளவுக்குப் பார்த்துப் பார்த்துப் பழகிய பட்டிமன்றத்தை நாங்களும் நடத்த ஆசைப்பட்டோம். இதோ அந்த வெட்டிமன்றம்... ஸாரி, பட்டிமன்றம்.

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

நடுவர் லோகேஷ்வரன்: ‘‘வகுப்பில் தூக்கம் வரவில்லை என இங்கே வந்திருக்கும் பார்வையாளர்களே... என் பேச்சைக் கேட்க வரலைன்னா உனக்குத் திங்கிறதுக்கு எதுவுமே தர மாட்டேன் என மிரட்டி, தனது தோழர்களை அழைத்துவந்திருக்கும் பேச்சாளர்களே... அனைவருக்கும் வணக்கம். நமது வெட்டிமன்றத்தின் தலைப்பு, ‘லன்ச் நேரத்தில் லன்ச் சாப்பிடுவது டேஸ்ட்டா... கிளாஸ் நடக்கும்போதே எடுத்துச் சாப்பிடுவது டேஸ்ட்டா?’ என்பதுதான். முதலில் பேசவருகிறார் புனிதா.’’

புனிதா: நடுவர் அவர்களே... ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் என்ன? மோப்பம் பிடிப்பது மாதிரி அடிக்கடி உணவை எடுத்துச் சாப்பிட்டால், உணவு சாப்பிடுவதன் நோக்கமே மாறிவிடும். அதாவது, சக்தி இல்லாமல் போய்விடும். அதனால், லன்ச் நேரத்தில் அரட்டையடித்தவாறே சாப்பிடுவதுதான் டேஸ்ட் எனச் சொல்லி முடிக்கிறேன்.’’

நடுவர்: ‘‘சபாஷ்! அந்தத் திருக்குறளுக்குச் சரியான அர்த்தம் யாருக்குத் தெரியப்போகுது என்ற நம்பிக்கையில், உங்களுக்கு ஏற்ப மாற்றி சிறப்பாகப் பேசினீர்கள். அடுத்து பேசப்போறது யாருப்பா?’’

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

ஃபாஹிம்: நடுவர் அவர்களே... அரட்டை அடிச்சுகிட்டே சாப்பிடுவோம் என அவர் வாயாலேயே சொல்லிவிட்டார்.  சாப்பிடும்போது, சாப்பாட்டில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் உணவை முழுமையாக உடல் எடுத்துக்கொள்ளும் என்று மருத்தும் சொல்கிறது. லன்ச் டைமில், நம் கவனம் முழுக்க அரட்டையில் இருக்கும்போது, எப்படி உணவின் சுவை தெரியும்? அதனால்தான், வகுப்பின் அமைதியான சூழ்நிலையில், தலையை டெஸ்க்குக்குக் கீழே மறைத்து உணவைச் சாப்பிடுகிறோம். எனவே, அதுதான் டேஸ்ட்.’’

நடுவர்: சூப்பர், காலையில் அம்மா கொடுத்த உப்புமாவை, மதியம் டஸ்ட் பின்னில் கொட்டுவதுபோல, தனது கருத்தை அழகாகக் கொட்டிவிட்டார் ஃபாஹிம். அடுத்து ஜானவியைப் பேச அழைக்கிறேன்.’’

ஜானவி: ‘‘வணக்கம் நடுவர் அவர்களே... வகுப்பின் அமைதியான சூழ்நிலையில் சாப்பிடுவேன்னு இவர் சொல்றாரு. ஆனா, இவர் மனசு அமைதியா இருக்குமா? எங்கே டீச்சர் பார்த்துடுவாங்களோனு அரக்கப் பரக்கச் சாப்பிடுவார். அந்த உணவு எப்படி டேஸ்ட்டா இருக்கும்? நிறுத்தி, நிதானமாகச் சாப்பிடும்போதுதான் சுவை முழுமையா கிடைக்கும். ஆறின கஞ்சியா இருந்தாலும், அவசரப்படாமல் சாப்பிட்டால்தான் டேஸ்ட் என்பது அறிவில் ஆறிய கஞ்சியான உங்களுக்குத் தெரியும்னு சொல்லி, என் உரையை முடிச்சுக்கிறேன்.’’

நடுவர்: ‘‘இப்படி எல்லாம் புகழ்ந்து பேசினால், உங்கள் பக்கம் தீர்ப்பு சொல்லிவிடுவேன் என்று நினைக்காதீர்கள். நேர்மையில் நான் களிமண் உருண்டையைப்போல ஸ்ட்ராங்கானவன். எல்லோரின் பேச்சையும் கேட்டுவிட்டுத்தான் முடிவுக்கு வருவேன். அடுத்து, அபிஷேக் வாப்பா.’’

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

அபிஷேக்: ‘‘நடுவர் அவர்களே... ஆறின கஞ்சி என இவரே சொல்கிறார். சமைத்த உணவை எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்குத்தான் டேஸ்ட் இருக்கும். அதனால்தான், ரெண்டாவது பீரியடு பெல் அடிக்கும்போதே நாங்கள் ஆரம்பிச்சுடறோம். சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.’’

ஷர்மிளா: ‘‘உண்மைதான். தன்னோட லன்ச் பாக்ஸை மட்டும் அல்லாமல், அடுத்தவங்க பாக்ஸையும் எடுத்துச் சாப்பிடும் இவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.’’

நடுவர்: ‘‘உஷ்... சொந்த சோகத்தை சபையில் பேசியதால், எலிமினேட் செய்யப்படுகிறீர்கள். அடுத்து, விக்னேஷ் சீக்கிரம் பேசி முடித்தால், சாப்பிடப் போக வசதியாக இருக்கும்.’’

விக்னேஷ்: ‘‘நடுவரே... உன் உணவு, என் உணவு எனச்  சொல்வதே தவறு. எதிலும் பொதுவுடைமை வேண்டும். நாங்கள் எல்லோரின் உணவையும்  சாப்பிட்டு,  சமத்துவத்தை நிலைநாட்டுகிறோம். நீங்களே ஒரு சமத்துவவாதிதான் என்பதை நினைவுபடுத்தி விடைபெறுகிறேன்.’’

சூப்பர் டேஸ்ட் வெட்டி மன்றம்!

நடுவர்: ‘‘சரி, சரி... இலை போட்டுப் பரிமாறும் பாரம்பரிய முறையாக இருந்தால் என்ன? கையில் பிளேட் பிடித்துச் சாப்பிடும் பஃபே சிஸ்டமாக இருந்தால் என்ன? உணவின் டேஸ்ட், அதைச் செய்பவர் கையில்தான் இருக்கிறது. நம் உடல் ஆரோக்கியத்தை மனதில்வைத்து, அன்பையும் அக்கறையையும் கலந்து நம் அம்மாக்கள் உணவைத் தயாரிக்கிறார்கள். எனவே, கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும், மொத்தமாகச் சாப்பிட்டாலும் டேஸ்ட்டு டேஸ்ட்டுதான் எனத் தீர்ப்பு அளித்து விடைபெறுகிறேன்!’’