FA பக்கங்கள்
விளையாட்டு
Published:Updated:

கிராமத்து விளையாட்டுக்கள்

கிராமத்து விளையாட்டுக்கள்
News
கிராமத்து விளையாட்டுக்கள்

கிராமத்து விளையாட்டுக்கள்

‘நீங்க சின்ன வயசுல விளையாடிய விளையாட்டுக்களை மறுபடியும் விளையாட ரெடியா?’’ என எங்க டீச்சர்களிடம் கேட்டு, அவங்களுக்குள்ள தூங்கிட்டு இருந்த சின்ன வயசை உசுப்பிவிட்டோம். உற்சாகமாகக் களத்தில் குதிச்சாங்க.

தாயம்!

கிராமத்து விளையாட்டுக்கள்

‘‘விளையாட்டுனா, தாயம்தான்.  தண்ணிகூட குடிக்காம விளையாடுவேன்’’ என ஆவலாக வந்தார் சந்திரலேகா மிஸ்.

‘‘தாயத்தில் ஜெயிச்ச புளியங்கொட்டைகளை ஒரு சின்ன மூட்டையா கட்டி ரொம்ப நாளைக்கு வெச்சிருந்தேன்’’ என ஃப்ளாஷ்பேக்கில் மூழ்கினார் மாலதி மிஸ். 

பல்லாங்குழி!

கிராமத்து விளையாட்டுக்கள்

எங்களுக்கு எல்லாம் தமிழ் இலக்கணம், செய்யுள்களைத் தெளிவாகச் சொல்லித்தரும் தமிழ் மிஸ் ஜெயலஷ்மி, பல்லாங்குழி ஆட்டத்தில் பின்னி எடுத்தாங்க. மாலினி மிஸ்ஸும் போட்டி போட்டு விளையாடி, சோழிகளை  அள்ளினாங்க.

நொண்டி விளையாட்டு!

கிராமத்து விளையாட்டுக்கள்

நொண்டி ஆட்டத்துக்குதான் செம ரெஸ்பான்ஸ். நான், நீ எனப் போட்டி போட்டுக்கிட்டு நிறைய டீச்சர்ஸ் வந்தாங்க. கூட்டத்தை கன்ட்ரோல் பண்ண, பிரின்ஸிபால் வரவேண்டியதாப்போச்சு.

கல்லாங்காய்!

கிராமத்து விளையாட்டுக்கள்

‘‘ஒண்ணாங்கா, ரெண்டாங்கா, மூணாங்கா, நாலாங்கா, அஞ்சாங்கா என இந்த விளையாட்டில் நிறைய இருக்கு. உருண்டையான கற்களைத் தேடி எடுக்கிறதில் பெரிய போட்டியே நடக்கும். இந்த விளையாட்டு சம்பந்தமா சில பாட்டுகள்கூட இருக்கு” எனத் தகவல்களை அள்ளிக்கொட்டிய சுபா நடராஜன் மிஸ், காய்களையும் அழகாக அள்ளினார்.

கிட்டிப் புள்!

கிராமத்து விளையாட்டுக்கள்

‘‘கிரிக்கெட்டுக்கு தாத்தாவான கிட்டிப்புள் விளையாட்டுதான் என்னோட சாய்ஸ். பாய்ஸ் மட்டுமே ஆடும் இந்த விளையாட்டை என் அண்ணன், அவர் ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து செமயா விளையாடுவேன்.” என கிரவுண்டில் இறங்கி, அடித்து நொறுக்கினார் கவிதா நாகர் மிஸ்.   

பரமபதம்!

கிராமத்து விளையாட்டுக்கள்

‘‘இப்போ, நீங்க செல்போனில் விளையாடும்  டெம்பிள் ரன் மாதிரியான விளையாட்டுக்கு கொஞ்சமும் குறையாத த்ரில், பரமபதம் விளையாட்டுல இருக்கு’’ எனச் சொல்லி, எங்களையும் ஆடவைத்தார்    கவிதா மிஸ்.

- செ.பொன்கீர்த்தனா, கு.ஸ்நேகா, சக்தி பிரியா.