மாணவன்: ‘‘சார், என்னோட நோட்புக் தொலைஞ்சுபோச்சு!’’ ஆசிரியர்: ‘‘ஏதாவது அடையாளம் இருக்கா?’’
மாணவன்: ‘‘இவ்வளவு மோசமான ஹேண்ட் ரைட்டிங்கை என் சர்வீஸ்ல பார்த்ததே இல்லைனு நீங்ககூட சொன்னீங்களே!’’

ஹரிஷ்: ‘‘சார், நீங்க சொன்ன மாதிரி எல்லா கேள்விகளையும் படிச்சுட்டேன். ஆனா...’’
ஆசிரியர்: ‘‘அப்புறம் என்ன டவுட்டு?’’
ஹரிஷ்: ‘‘வெறும் கேள்விகளைப் படிச்சு என்ன சார் செய்யப்போறோம்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்டக்டர்: ‘‘தம்பி, பஸ் பாஸ் கேட்டா, பேப்பரைக் காட்டுறியே.’’
சிறுவன்: ‘‘எட்டாவது வரைக்கும் ‘ஆல் பாஸ்’னு சொன்னாங்களே!’’

தினேஷ்: ‘‘தோசை சாப்பிட்டு பல் உடைஞ்சுபோச்சா... எப்படி?’’
திவ்யா: ‘‘ஏன்னா, அது கல்தோசை!’’


பிரின்ஸிபால்: ‘‘அக்ஷரா, உன்னைப் பத்தி நாலு டீச்சர்ஸ் கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டாங்க’’
அக்ஷரா: ‘‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, அதையெல்லாம் நம்பலாமா மேடம்?’’


ராகுல்: ‘‘என் தங்கை டி.வி மாதிரி!’’
நண்பன்: ‘‘அப்படினா?’’
ராகுல்: ‘‘ஓயாம அவ பேசிக்கிட்டே இருப்பா, நான் பார்த்துக்கிட்டே இருப்பேன்.’’


ராகுல்: ‘‘நான் சினிமாவுக்குப் போகலாம்னு சொல்ல, என் தங்கச்சி பீச்சுக்குப் போகலாம்னு சொல்ல, பயங்கர சண்டை!’’
நண்பன்: ‘‘அப்புறம், எங்கே போனீங்க?’’
ராகுல்: ‘‘ஆஸ்பத்திரிக்குத்தான்!’’
- பி.ஜனனி, சு.விஸ்வநாத், ர.பவித்ரா.