Published:Updated:

சண்டே மண்டே சண்டை!

சண்டே மண்டே சண்டை!
பிரீமியம் ஸ்டோரி
சண்டே மண்டே சண்டை!

ஜாலி கேள்விகள்!

சண்டே மண்டே சண்டை!

ஜாலி கேள்விகள்!

Published:Updated:
சண்டே மண்டே சண்டை!
பிரீமியம் ஸ்டோரி
சண்டே மண்டே சண்டை!

‘முட்டையில் இருந்து கோழியா... கோழியில் இருந்து முட்டையா?’

சண்டே மண்டே சண்டை!

இப்படி விடை தெரியாத கேள்விகள் இந்த உலகத்தில் நிறைய இருக்கு. அதிலும், நம்மைப் போல சின்னப் பசங்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களில் விடையே தெரியாமல் ஃபீலிங்கா இருக்கும். நீங்களும் ஃபீல் பண்ணியிருக்கீங்களா?

• சண்டே காலையில் 6 மணிக்கே முழிப்பு வந்துடுது. மண்டே 9 மணி ஆனாலும் தூக்கம் சொக்குதே... ஏன் ஃப்ரெண்ட்ஸ் ஏன்?

சண்டே மண்டே சண்டை!

• சண்டே, சாப்பிடச் சொல்லி அம்மா கூவிக் கூவி அழைச்சாலும் பசி எடுக்க மாட்டேங்குது. மண்டே ரெண்டாவது பீரியடுலேயே வயிறு பசி பசினு கூவுதே... ஏன் நண்பா ஏன்?

• சண்டே சாயந்திரம் 4 மணி ஆனதும் உலகமே இருளுது. மண்டே 4 மணிக்குத்தான் உலகம் பரபரப்பாகுதே... ஏன் தோழி ஏன்?

சண்டே மண்டே சண்டை!

• லைப்ரரியில் கதைப்புத்தகம் படிக்கும்போது, ஒரு நிமிஷத்துக்கு 10 நொடிகளாக டைம் சுருங்குது. கிளாஸில் பாடப்புத்தகம் படிக்கும்போது, ஒரு நிமிஷத்துக்கு 100 நொடிகளாக நீளுதே... ஏன் சிஸ்டர்ஸ் ஏன்?

• ஒரே ஒரு முறை கேட்டாலும் ஃபெவிகுயிக் போட்ட மாதிரி சினிமா பாட்டு மனசுல ஒட்டிக்குது. எத்தனை முறை படிச்சாலும் மேத்ஸ் ஃபார்முலா மண்டையில ஏற மாட்டேங்குதே... ஏன் பிரதர்ஸ் ஏன்?

சண்டே மண்டே சண்டை!

• கடைசி பெஞ்ச் பையன் சொல்ற ஜோக் தெளிவா கேட்குது. எதிரில் இருக்கிற டீச்சர் சொல்ற பாடம் ‘சிக்னல் வீக்’கா கேட்குதே... ஏன் ஃப்ரெண்ட்ஸ் ஏன்?

• இதுக்கெல்லாம் எந்த விஞ்ஞானியாவது விடை கண்டுபிடிச்சு சொல்லுங்க.

- க.சுதாகரன், பா.ஜனனி, ச.அநிருத்.