பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

கிளாஸ் ரூம் கேம்ஸ்

கிளாஸ் ரூம் கேம்ஸ்
News
கிளாஸ் ரூம் கேம்ஸ்

கிளாஸ் ரூம் கேம்ஸ்

விதவிதமாக விளையாட,  விளையாட்டு மைதானம் தேவை இல்லை. ஓய்வு நேரத்தில் வகுப்பிலேயே விளையாடலாம் வாங்க.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

பஸ்: எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். 1-ல் இருந்து 100 வரை எண்கள் சொல்ல வேண்டும். அதில், ஒரே எண்ணைச் சொல்லிவிட்டால், இருவரில் யார் BUS என்று முதலில் சொல்கிறாரோ, அவர்தான் தொடர்ந்து விளையாட முடியும்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

எக்ஸ், ஓ: 3x3 கட்டம் போட்டு, இரண்டு பேர் ஆடும் விளையாட்டு. ஒருவர் x, மற்றொருவர் O. இருவரும் மாறி மாறி தங்கள் எழுத்தை எழுதுவர். யார் தொடர்ச்சியாகத் தன் எழுத்தை 3 முறை எழுதுகிறாரோ... அவரே வின்னர்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

ஆம், சீஸ்: இரண்டு பேர் கையைப் பிடித்து, அவர்கள் கட்டை விரலை மாற்றி மாற்றி வைப்பார்கள். ஒருவர் கட்டை விரலை, இன்னொருவர் அழுத்திவிட்டால், அழுத்தப்பட்ட கட்டை விரல் அவுட்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

ஹேண்ட் கிரிக்கெட்: ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு ரன். முதலில் ஒருவர் பேட்டிங் முடிவானதும், இருவரும் ஒரே சமயத்தில் கையை உதறி, சில விரல்களைக் காட்ட வேண்டும். அதைக் கூட்டி வரும் ரன்கள் (3 + 2) பேட்டிங் செய்பவருக்கு. இருவரும் ஒரே மாதிரி விரல்களைக் காட்டிவிட்டால் (3+3), பேட்டிங் செய்பவர் அவுட். இதே விதிமுறை அடுத்தவருக்கும் பொருந்தும்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

சைனீஸ் விஸ்பர்: ஒருவர் மற்றொருவரின் காதில் ஒரு வாக்கியத்தைச் சொல்ல, கேட்டவர் மற்றொருவரின் காதில் சொல்வார். இப்படியே போகும்போது யாராவது திக்கி, வாக்கியத்தை தவறாகச் சொன்னால், அவர் அவுட்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

பிங்கோ: 5x5 கட்டங்கள் போட்டு, 1 முதல் 9 எண்களையும் இடம் மாற்றி எழுதுவோம். ஒவ்வொருவரும் ஒரு எண் சொல்வார்கள். அந்த எண்களை அடித்துக்கொண்டே வர வேண்டும். எல்லா எண்களையும் முதலில் அடிப்பவர் வின்னர்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

வார்த்தை பில்டிங்: ஒருவர் ஒரு வார்த்தையைச் சொல்ல, அடுத்தவர் அதன் கடைசி எழுத்தில் தொடங்கும் வார்த்தையைச் சொல்ல வேண்டும். யாருக்கு வார்த்தை தெரியவில்லையோ, அவர் அவுட்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

பேனா ஃபைட்: ஒருவருடைய பேனாவை இன்னொருவர், தன் பேனாவால் (கேரம் போர்டில் விளையாடுவதுபோல) கீழே தள்ளிவிட வேண்டும். கீழே விழுந்த பேனாவுக்குச் சொந்தமானவர் அவுட்.

கிளாஸ் ரூம் கேம்ஸ்

ரெட் ஹேண்ட்: ஒருவர் கை மேல் ஒருவர் எனப் பலர், கையை வேகமாக வைப்பார்கள். வலி தாங்காமல் கையை எடுத்துவிட்டால், அவர்கள் அவுட்.

- பி.கீதாரேவதி, ஆர்.ஜெ.அமன்யா, பி.ஜி.அஸ்வதா, ரா.பி.அனுஷ்யா, எம்.தபஸ்னி.