Published:Updated:

அன்புள்ள அஞ்சல்!

அன்புள்ள அஞ்சல்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்புள்ள அஞ்சல்!

அன்புள்ள அஞ்சல்!

“நீங்க கடைசியாக யாருக்கு கடிதம் எழுதினீங்க?”

அன்புள்ள அஞ்சல்!

உங்களில் பலரும் ‘கடிதமே எழுதியது இல்லை’ என்பீர்கள். ஆனால், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் நாங்கள், வாரந்தோறும் எங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதுவோம். நாங்கள் என்றால், பள்ளியில் படிக்கும் அனைவருமே. கடிதம் எழுதுவது ஒரு வாரம்கூட தவறியதே இல்லை. எங்கள் பெற்றோரும் திரும்ப பதில் எழுதுவார்கள். அதைப் படிப்பதே தனி சுகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்புள்ள அஞ்சல்!

அஞ்சல் நிலையத்தில் ‘ஜவஹர்லால் நேரு தபால்தலை சேகரிப்பு மன்றம்’ என்ற ஒரு திட்டத்தில் உறுப்பினராக இருந்து அரிய ஸ்டாம்புகளைச் சேகரித்து வருகிறோம். கடந்த ஜனவரி 3-ம் தேதி கடிதம் எழுதுவதை வளர்க்கும் வகையில் Hot air balloon ஒன்றில் போஸ்ட்மேனுடன் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை மிதந்து சென்றது ஜாலியான அனுபவம். ஒவ்வோர் ஆண்டும் உலக அஞ்சல் தினமான அக்டோபர் 9 அன்று கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல் நிலையத்தில் நடத்துகிறோம்.

இதையெல்லாம் படிக்கும்போது உங்களுக்கும் கடிதம் எழுத கை பரபரக்கிறதா? உடனே உங்களுடைய நண்பருக்கோ, பெற்றோருக்கோ கடிதம் எழுதுங்க.

- ஆர்.சி.தருண், வி.வி.விஷ்வந்த்ரா.