‘‘தெருவில் போகிற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டுப் போறாங்களே ஏன்?’’
‘‘அவர்தான் இந்தத் தெரு வாட்ச்மேன்!’’


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தலையிலிருந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா?’’
‘‘தெரியலையே, என்ன காரணம்?’’
‘‘தலையில் முடி இருக்கிறதுதான்!’’

அண்ணன்: ‘‘ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிடுறே?’’
தம்பி: ‘‘டாக்டர்தான் ‘அரை மூடி’ சாப்பிடச் சொன்னார்!’’


‘‘அந்தப் பூனை ஏன் குழந்தைகள் பள்ளிக்கூடத்தையே சுத்திச் சுத்தி வருது?’’
‘‘அது, எலிமெண்டரி ஸ்கூலாம்!’’

‘‘என் அம்மா, அப்பா எல்லோரும் எப்பவும் டாக்டர் அட்வைஸ்படியே நடப்பாங்க.’’
‘‘அட, நடக்கிறதுக்குக்கூடவா டாக்டர் அட்வைஸ் பண்றாரு?’’


மகன்: ‘‘அப்பா, லஞ்சத்துக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்?”
அப்பா: ‘‘ஒண்ணும் இல்லையே”
மகன்: ‘‘பின்னே ஏன் மழையால் மாமூல் வாழ்க்கை பாதிப்புனு பேப்பர்ல நியூஸ் போட்டிருக்காங்க?”