திருச்சிக்கு மலைக்கோட்டை போல, பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று, ரஞ்சன்குடி கோட்டை. ‘துருவக்கோட்டை’ எனவும் அழைக்கப்பட்ட இது, 17-ம் நூற்றாண்டில், நவாப் மன்னனால் கட்டப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல், அழிந்துகொண்டிருக்கும் பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோட்டையைக் கட்டிய மன்னனே இப்போது வந்தால் எப்படி இருக்கும்? அதை, ரஞ்சன்குடி கோட்டைக்குச் சென்று, ஒரு நாடகமாக நடித்தோம்.

பூமிக்கு வந்த நவாப்!

சொர்க்கத்தில் நவாப்: ‘‘மந்திரியாரே, எனக்கு இந்தச் சொர்க்க வாழ்க்கை போர் அடித்துவிட்டது. பூலோகம் சென்று, நான் கட்டிய துருவக்கோட்டையைப் பார்த்துவிட்டு வருகிறேன்.’’

பூமிக்கு வந்த நவாப்!

மந்திரி: ‘‘மன்னா, நானும் வருகிறேன்.’’

(இருவரும் பூலோகம் வருகிறார்கள்)

மன்னன்: ‘‘மந்திரியாரே, கோட்டைக்குச் செல்லும் வழியைக் கூறுங்கள்.’’

பூமிக்கு வந்த நவாப்!

மந்திரி: ‘‘மன்னிக்கவும் மன்னா. நீண்ட காலமானதால் வழி மறந்துவிட்டது. அதோ, ஒரு  பள்ளி மாணவன் வருகிறான். அவனிடம்  கேட்போம். (மாணவனைப் பார்த்து) தம்பி, துருவக்கோட்டைக்கு எப்படி செல்வது?’’

மாணவன்: ‘‘என்னது... துருவக்கோட்டையா?’’

மன்னன்: ‘‘அதுதான் தம்பி, ரஞ்சன்குடியில் இருக்குமே...’’

மாணவன்: ‘‘ஓ... இதுதாங்க.’’

பூமிக்கு வந்த நவாப்!

மன்னன்: ‘‘கோட்டையைக் காட்டச் சொன்னால், இடிந்த சுவரைக் காட்டுகிறாயே.’’

மாணவன்: ‘‘ஐயா, நீங்கள் கேட்ட ரஞ்சன்குடி கோட்டை இதுதான்.’’

மன்னன்: ‘‘ஐயோ! இதுவா என் கோட்டை?’’

மந்திரி: ‘‘கொடுமை மன்னா, எவ்வளவு அழகாக, உறுதியாகக் கட்டினீர்கள். பகைவர்களுக்கு கடும் சவாலாக இருந்த கோட்டை ஆயிற்றே. இங்குதான் பீரங்கி மேடை இருந்தது. இங்குதான் நீச்சல் குளம் இருந்தது. இங்குதான்...’’

மன்னன்: ‘‘மந்திரியாரே, நீர் வேறு என் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தாதீர். இந்த மக்களுக்கும் அரசுக்கும் என்ன ஆயிற்று? வரலாற்றுச் சின்னங்களை இப்படியா அலட்சியமாக வைத்திருப்பார்கள். இதற்கு நான் இங்கே வராமலே இருந்திருக்கலாம்.’’

பூமிக்கு வந்த நவாப்!

மாணவன்: மன்னா, கவலைப்படாதீர்கள். எல்லா மாணவர்களின் சார்பிலும் நான் சொல்கிறேன். எங்கள் காலத்தில் இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாப்போம். இது உறுதி.’’

மன்னன்: மிகவும் நன்றி தம்பி. நமது நாட்டின் எதிர்காலம் மட்டும் அல்ல, இதுபோன்ற வரலாற்றுக் காலங்களும் உன்னைப் போன்ற இளைய தலைமுறையை நம்பித்தான் உள்ளது. அதைக் காப்பாற்று. நாங்கள் சென்று வருகிறோம்.’’

- நி.சௌமியா. ஜெ.வாசுகி. எல்.ஷக்திராம், ஹர்ஷித், டி.கே.திருவேங்கடம், ரோஹித் அமுதன், விபின், தக்‌ஷா, ஹரிதா, நந்தா, ஸ்ரீநிதிஷ், ஹரிஷ்ராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு