ங்கள் பள்ளிக்கு வரும் வழியில், பூ விற்கும் மகாதேவி அக்கா இருக்கிறார். பூக்கள்கூட வாடிவிடும். ஆனால், மகாதேவி அக்கா, காலையில் இருந்து மாலை வரை மலர்ந்த பூவாகச் சிரித்துக்கொண்டே இருப்பார். எங்களின் முதல் விஐபி பேட்டியை அவரிடம் ஆரம்பித்தோம்.

பூ... பூ... அன்பு!

‘‘என்னது... பேட்டியினா என்னது?’’ எனப் புரியாமல் கேட்டார் அக்கா.

விஷயத்தைச் சொன்னதும், ‘‘போட்டோ பிடிப்பீங்களா? வேண்டாம் கண்ணுங்களா’’ என வெட்கத்தோடு விலகப் பார்த்தவரை, அன்புப் பிடியில் வளைத்து, பேட்டியை ஆரம்பித்தோம்.

‘‘அக்கா, உங்களுக்கு பூ கட்ட யாரு கத்துக்கொடுத்தாங்க?’’

‘‘நானேதான் கத்துக்கிட்டேன்.’’

பூ... பூ... அன்பு!

‘‘எத்தனை மணிக்கு உங்க வேலையை ஆரம்பிப்பீங்க?’’

‘‘காலையில் அஞ்சு மணிக்கு எழுந்திருப்பேன். மார்க்கெட்டுக்குப் போய் பூக்களை வாங்கிட்டு வந்து, வேலையை ஆரம்பிப்பேன்.’’

‘‘ஒரு நாளைக்கு எவ்வளவு லாபம் வரும்?’’

‘‘பெருசா ஒண்ணும் இல்ல கண்ணுங்களா... 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் கிடைக்கும்.’’

‘‘யாராவது ரொம்பப் பேரம் பேசினால், கோபம் வருமா அக்கா?’’

பூ... பூ... அன்பு!

(சிரிப்புடன்) ‘‘பொருள் வாங்குறவங்க பேரம் பேசுவாங்கதான். அதுக்காக, கோபப்பட்டா, வியாபாரம் பண்ண முடியாது. சின்னப் பிள்ளைங்க உங்ககிட்டே பொய் சொல்லக் கூடாது. சில பேர் ரொம்ப அநியாயத்துக்கு குறைச்சலா கேட்கிறப்போ, கோபம் வந்துடும். உடனே, சமாளிச்சுக்கிட்டு பக்குவமா பேசுவேன். ஏன்னா, ஜனங்கதான் எங்க முதலாளிங்க.’’

‘‘உங்ககிட்டே இருக்கிற பூக்கள் மாதிரியே நீங்களும் அழகாப் பேசுறீங்க அக்கா’’ எனச் சொன்னதும், பூவாகச் சிரித்தார்.

பிறகு, பூ கட்டுவது எப்படி எனச் சொல்லிக்கொடுத்தார். நாங்கள் கிளம்பும்போது ஆளுக்கு ஒரு ரோஜாவை அன்போடு கொடுத்தார்.

- வர்ஷினி, ஹர்ஷினி, நிவேஷ், தன்வின், அன்பு வர்ஷனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு