பிரீமியம் ஸ்டோரி

ஜெர்மனியில் உள்ள டுபின்ஜென் (Tubingen) நகரில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் செம ஜாலியான நிகழ்ச்சி, ‘ரப்பர் டக் ரேஸ்’.

செம ஜாலி ரேஸ்!
செம ஜாலி ரேஸ்!

1999 முதல் இந்த ரப்பர் வாத்துகளுக்கான பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காகவும், வேடிக்கை பார்ப்பதற்காகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்து குவிகிறார்கள். இந்த நகரில் உள்ள ‘நெக்கர்’ (Necker) என்ற நதியில் நடக்கும் இந்தப் பந்தயத்தில், ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான ரப்பர் வாத்துக்களை விடுவார்கள். 45 நிமிடங்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், எந்த வாத்து எல்லையை முதலில் அடைகிறதோ, அதுவே வின்னர். வெற்றிபெறும் ரப்பர் வாத்தின் உரிமையாளருக்கு, பரிசுப் பொருட்கள் வழங்கி, ஆட்டம் பாட்டத்துடன் அந்த இடமே அமர்க்களப்படும்.

 - என்.மல்லிகார்ஜுனா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு