•  ‘‘சினிமா ஹீரோக்கள்தான் பஞ்ச் டயலாக் பேசணுமா? நாங்க பேசினா கேட்க மாட்டீங்களோ?’’ எனக் கையைப் பிடிச்சு இழுத்து, தெறிக்கத் தெறிக்க பஞ்ச் பேசும் ஒரு கேங், எங்க ஸ்கூலில் இருக்கு. இதோ, அவங்க உங்களை நோக்கி வர்றாங்க...  

•  மதியம் சாப்பிடுறது லன்ச்;‘நச்’னு சொன்னாதான் பஞ்ச்!

பஞ்சு பஞ்சா பஞ்ச்!

•  வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்லை; முயற்சி செஞ்சா எதுவும் கஷ்டம் இல்லை!
 

•  நான் படிக்கப் போறேன் இயல்-1; என் கையில இருக்கு ரீஃபில் பென்!
 

•  எனக்குப் பிடிக்கும்  நடிப்பு; கிருஷ்ணசாமியில் கிடைக்கும் படிப்பு!

•  எங்க அப்பா படிச்சது Municipality;எங்க ஸ்கூலில் பிடிச்சது punctuality!

•  விராட் கோலி அடிச்சா சிக்ஸ்;சளி புடிச்சா தடவுவோம் விக்ஸ்!

பஞ்சு பஞ்சா பஞ்ச்!

•  பணத்தை மட்டும் கரெக்ட்டா பேங்கில் போடுறீங்க; குப்பையை குப்பைத் தொட்டியில் போட்டா என்ன?

•  கடல்ல இருக்குது முத்து; ஆசிரியர்கள்தான் எங்க சொத்து!

•  கல்யாணத்துல வைப்பாங்க பேனரு; இங்கிலீஷ்ல இருக்கு கிராமரு!

•  மரத்துல சுத்திக்கிட்டு இருக்கிறது கொடி; வீட்டுல பேரன்ட்ஸ் சொல்றபடி படி!

பஞ்சு பஞ்சா பஞ்ச்!

•  வாழ்க்கை இருந்தால் போர் அடிக்கும்; வழுக்கை இருந்தால்  கிளார் அடிக்கும்!

•  வெளிக் கண்ணீரைத் துடைப்பது கர்ச்சீஃப்; மனக் கண்ணீரைத்  துடைப்பது ஃப்ரெண்ட்ஷிப்!

- இ.எஸ்.ஜனா, வி.சி.மணிபாலன், சி.வெங்கடேசன், ஜீ.வேலன், எஸ்.ஆர்.விஜய், அ.சந்தீப், எஸ்.க்ரிதீஷ், பிரதிக்‌ஷ், எஸ்.சித்தார்த்தன், ஆர்.வெங்கட்ராமன், எ.பிரின்ஸ் குமார், ஆர்.லோகேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு