Published:Updated:

கிரிக்கெட் பாடம் நடத்தப்போறோம்!

-ஒரு நாள் ஆசிரியர்கள்..

கிரிக்கெட் பாடம் நடத்தப்போறோம்!

-ஒரு நாள் ஆசிரியர்கள்..

Published:Updated:

த்தனை நாளைக்குத்தான் டீச்சர்ஸ் பாடம் நடத்த, பசங்க கேட்டுட்டு இருக்கிறது? நமக்குப் பிடிச்ச விஷயத்தை நாம அவங்களுக்கு சொல்லிக்கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம்.  அதை எங்க ஸ்கூல்ல இதைச் செஞ்சு காட்டினோம்.

கிரிக்கெட் பாடம் நடத்தப்போறோம்!

டீச்சர்களுக்கு பாடம் நடத்த, ஒரு நாள் டீச்சர்களாக வந்தாங்க கனகசபாபதி, கணேஷ் மற்றும் சஞ்சய்.

கிரிக்கெட் பாடம் நடத்தப்போறோம்!

மூணு பேரும் வகுப்பறைக்குள் நுழைந்ததும், எல்லா டீச்சர்ஸும் எழுந்து நின்னு, ‘குட் மார்னிங்’ சொல்ல, வெட்கத்தில் பூரிச்சுப் போய்ட்டாங்க.

‘‘நாங்க கிரிக்கெட் பாடம் நடத்தப்போறோம்.  கவனமா கேட்கணும், அங்க இங்க பார்த்துட்டு இருக்காம ஒழுங்கா கவனிங்க. பாடம் முடிஞ்சதும் கேள்வி கேட்போம்” என்றார் கணேஷ்.

பௌலிங் என்றால் என்ன? அதன் வகைகள், பௌலிங்கில் சிறந்த இந்திய வீரர்கள் யார் யாருங்கிற விவரங்களை ஆக்‌ஷனோடு சொன்னார் கனகசபாபதி. பேட்டிங் பற்றி பாடம் நடத்திய சஞ்சய், எந்தப் பந்தை எப்படி அடிக்கணும்னு விளக்கினார்.

கிரிக்கெட் பாடம் நடத்தப்போறோம்!

கிரிக்கெட் விதிமுறைகளைப் பத்தி பாடம் நடத்தினார் கணேஷ். பிறகு, மாணவர்களாக இருக்கும் ஆசிரியர்களிடம் கேள்விகள்  கேட்டார்கள். சில ஆசிரியர்கள், ‘‘கிரிக்கெட்னா, ஒரு பந்தை பல பேர் துரத்திட்டுப்போய் அடிப்பாங்களே அதுவா?’’னு பீதியைக் கிளப்பினார்கள். சிலர், தோனிக்கே டிப்ஸ் கொடுக்கிறா மாதிரி ஆச்சர்யம் குடுத்தாங்க.

பாடம் முடிஞ்சு கிளம்பும்போது, எல்லா ஆசிரியர்களும் எழுந்து நின்னு ‘‘தேங்க் யூ சார்”னு சொன்னதும், மூணு பேர் முகங்களிலும் மறுபடியும் வெட்கமோ வெட்கம்!

- ஐஸ்வர்யா, திவ்யதர்ஷினி, ராஜ்மி.