Published:Updated:

செல்ஃபி வித் சேஃப்ட்டி

செல்ஃபி வித் சேஃப்ட்டி

செல்ஃபி வித் சேஃப்ட்டி

செல்ஃபி வித் சேஃப்ட்டி

Published:Updated:

பெரியவர்களை ஆட்டிப் படைத்த செஃல்பி ஆசை, இப்போது சிறியவர்களிடமும் பரவி வருகிறது. சமீபத்தில், மும்பையில் நடந்த அந்தச் சம்பவம், பார்த்தவர்களை உறையவைத்தது.

செல்ஃபி வித் சேஃப்ட்டி
செல்ஃபி வித் சேஃப்ட்டி

அந்தக் குட்டிப் பையன், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மேல் நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டான். ரயிலின் மீது கிடுகிடு என ஏறினான். அப்போது, அவனது தலைக்கு மேல் சென்றுகொண்டிருந்த 25,000 வோல்ட் உயர் அழுத்த மின் கேபிள் மீது கை பட்டுவிட்டது. அடுத்த நொடி, மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு உயிர் இழந்தான். 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்தப் பையனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் புதிய ஸ்மார்ட் போனை அப்பா வாங்கித் தந்திருந்தார்.

செல்ஃபி எடுப்பது ஜாலியான விஷயம்தான். ஆனால் அது, துயரமாக மாறலாமா? யாரும் எடுக்க முடியாத செல்ஃபியை எடுக்கும் எண்ணமே இத்தகைய அபாயத்தில் தள்ளுகிறது.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில், செல்ஃபி பற்றி ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். செல்ஃபி எடுப்பது ஒரு தொற்றுநோய் போல பரவி வருகிறது. செல்ஃபி பிரியர்களில் பெண்களே முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். தங்களது தோற்றம் இன்னும் பெட்டராகத் தெரிய, தாங்களே டிசைன் பண்ணும் வாய்ப்பு செல்ஃபியில் இருப்பதே இதற்கெல்லாம் காரணம்.

செல்ஃபி வித் சேஃப்ட்டி

ஆனால், செல்ஃபியில் ஆர்வம் காட்டுகிறவர்களை மனித வள அதிகாரிகள் எப்படிக் கணிக்கிறார்கள்

செல்ஃபி வித் சேஃப்ட்டி

தெரியுமா?. செல்ஃபி எடுக்கிறவர்கள், தங்களுடைய ஆளுமையில் நம்பிக்கை இல்லாமல், தன் தோற்றத்தின் மூலம் இமேஜ் கிரியேட் பண்ண நினைப்பவர்களாம். அவர்களின்  அஷ்டகோணல் படங்களைவைத்தே கேரக்டரை முடிவுசெய்வதாகவும், சுயக் கட்டுப்பாடு இல்லாதவர்கள் எனவும் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எனவே, செல்ஃபி எடுக்கும்போது சேப்ஃட்டியிலும் ஒரு கண் வையுங்கள். கூடவே மனக் கட்டுப்பாடும் இருக்கட்டும். சில லைக்குகளுக்காக அபாயமான உயரங்கள், இடிபாடுகள், ஆபத்தான விலங்குகள் பின்னணியில், செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்கவும்.

நின்றால் செல்ஃபி நடந்தால் செல்ஃபி, சாப்பிட்டால் செல்ஃபி என இருப்பதை விட்டு பாதுகாப்பாக எடுக்கலாமே செல்ஃபி.

படங்கள்: அ.குரூஸ்தனம்


31.10.15 இதழில் வெளியான டியாண்டோல் போட்டி முடிவு.

டியாண்டோல் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், ‘சட்டையின் கதை’ பற்றி ‘நச்’ கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா ` 250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.

செல்ஃபி வித் சேஃப்ட்டி

1. ரி.சு.ஜேஸ்மின் சிந்தியா, சென்னை-66
2. ர.நிஹா தஸ்னீம், வாலாஜாபாத்.
3. பி.ரமணா, வேலூர்.
4. அ.கமலேஸ்வரன், நந்திமாங்குடி.
5. ஜெ.நித்யஸ்ரீ, திருவாரூர்.
6. அ.நிவேத்ரா, கெங்குசெட்டிப்பட்டி.
7. கு.ராஜா, நத்தம்பாளையம்.
8. ஆ.சி.அரவிந்த், அவிநாசி.
9. பா.சஸ்மிதா, பெரியநாயக்கன்பாளையம்.
10. ஏ.அரிஷ்னா, பெருமாள்புரம்.