Published:Updated:

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

‘‘ஒவ்வொரு அபார்ட்மென்ட்டும் ஒரு குட்டி தீம் பார்க் மாதிரிதான். நாங்க ஒண்ணு சேர்ந்தா, எப்பவும்  அட்வென்சர், ஆக்‌ஷன்தான்” என உற்சாகமாக ரவுண்டு கட்டினார்கள் அந்தச் சுட்டிகள்.

சென்னை, மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள ஆர்.சி.அபார்ட்மென்ட், ஞாயிற்றுக்கிழமையின் உற்சாகத்தில் இருந்தது.

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!
ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

‘‘சுட்டி விகடன்ல இருந்து வர்றீங்களா? எனக்குத் தெரிஞ்சு இந்த அபார்ட்மென்ட்டில் யாரும் எந்தச் சாதனையும் செய்யலையே. ஏன்டா பெஞ்சமின், சயின்டிஸ்ட் பேரை வெச்சுட்டு இருக்கிறதால உன்னை பேட்டி எடுக்க வந்திருக்காங்களோ?” என அருகில் இருந்தவனைச் சீண்டினான் ஹேமந்த்.

‘‘அது இல்லைடா, சிட்டியில் இருக்கிற அபார்ட்மென்ட் ஆட்கள், ஒருத்தரை ஒருத்தர் பேர்கூட தெரிஞ்சுக்க மாட்டாங்க. நீங்க எல்லாம் எப்படி? ஃப்ரெண்ட்ஷிப்பா இருப்பீங்களானு கேட்க வந்திருக்காங்க” என்றான் பெஞ்சமின்.

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

‘‘நல்லா மாட்டினீங்க. இன்னிக்கு ஃபுல்லா எங்க கூடவே இருங்க. எங்க ஃப்ரெண்ட்ஷிப் பற்றி  தெரியும். முதல்ல, டான்ஸ் கச்சேரியோடு ஆரம்பிப்போம். எங்க அபார்ட்மென்ட்டின் ஸ்டார் டான்ஸர்ஸ், பிரியதர்ஷினியும் நிவேதிதாவும். இவங்க டான்ஸ் கிளாஸுக்குப் போக ஆரம்பிச்சதில் இருந்து எங்க நிம்மதி போச்சு. ‘எங்க டான்ஸைப் பாருங்க’னு சின்னப் பசங்களை மிரட்டி உட்காரவெச்சு ஆடுவாங்க. அந்தக் கொடுமையை இன்னிக்கு நீங்களும் பாருங்க” என்று கலக்கல் இன்ட்ரோ கொடுத்தாள் பிரித்திகா.

அவள் காதை செல்லமாகத் திருகிய பிரியதர்ஷினி, ‘‘ஏதாவது புராஜெக்ட் பண்றதுக்கு ஹெல்ப் கேட்டு வருவே இல்லே. அப்போ இருக்கு உனக்கு” என்றாள்.

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

பரதநாட்டியம் ஆரம்பித்தது. 15 நிமிடங்கள் கடந்ததும், ‘‘போதும்... போதும் அடுத்த செஷனுக்குப் போவோம்” எனக் குரல்கள் எழுந்தன. அவர்கள் நாட்டியத்தை நிறுத்துவது போல தெரியவில்லை. உடனே எல்லோரும் எழுந்து, கன்னாபின்னா ஆட்டம் போட்டு நிறுத்தினார்கள்.

அப்போது கூட்டமாக வந்த ரோஹித், ‘‘அவங்க டான்ஸைப் பார்த்தீங்க. இப்போ, எங்க சண்டையைப் பாருங்க. டபிள்யூ டபிள்யூ எஃப் வீரர்கள் எல்லாம் இங்கே வந்துதான் டிரெய்னிங் எடுத்துட்டுப் போறாங்க” என்றான்.

அடுத்த நொடி, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!
ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

‘‘இந்தப் பசங்க எப்பவும் இப்படித்தான். டேய் நிறுத்துங்கடா. நம்ம ஃப்ரெண்ட்ஷிப் பற்றி உருப்படியா ஏதாவது சொல்வோம்” என சமாதானப் புறாவாக உள்ளே நுழைந்து, சண்டையை நிறுத்தினார் ராகஸ்ரீ.

‘‘இப்போ, மோஸ்ட் விஐபி-க்களை காட்டுறோம் வாங்க” என சுரக்‌ஷா சொன்னதும், ‘ஹேய்ய்ய்ய்” என எல்லோரும் குஷியாக கைதட்டினார்கள்.

அபிநயா, மோக்க்ஷிதா, அவந்திகா என மூன்று க்யூட் குட்டீஸ்களைத் தூக்கி வந்தார்கள்.

‘‘எங்க அபார்ட்மென்ட்டில் எந்தக் குழந்தையும் தவழ்கிற வரைக்கும்தான் வீட்டுக்குள்ளே இருக்கும். நடக்க ஆரம்பிச்சதும், எங்க கேங்ல சேர்ந்துடும். அந்தக் குழந்தைக்கு ராஜ மரியாதைதான்.  ஆளாளுக்குத் தூக்கிவெச்சுக் கொஞ்சுவோம். வீட்டுக்கும் தூக்கிட்டுப் போய்டுவோம். ஒருத்தர் வீட்டில் இருந்து இன்னொருத்தர் வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகிட்டே இருக்கும். அம்மாக்கள் பாடுதான் பாவம். தேட ஆரம்பிச்சாங்கன்னா, ஒவ்வொரு ஃப்ளாட்டா நடந்து நடந்து கரைஞ்சுடுவாங்க” என்றான் அவினேஷ். 

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

‘‘வெயில் ஓவரா இருந்துச்சுனா, யாராவது ஒருத்தர் ஃப்ளாட்ல ஒண்ணு சேர்ந்துடுவோம். கார்ட்டூன் பார்க்கிறது, டேப்லட்ல வீடியோ கேம் விளையாடுறதுனு அன்னிக்கி அந்த ஃப்ளாட் ரணகளம் ஆகிடும். ஃப்ரிட்ஜ், கிச்சனில் இருக்கிற சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாம் காலி பண்ணிடுவோம். எல்லோரையும் அனுப்பின பிறகு கணக்கு எடுத்துப் பார்த்தாதான் எவ்வளவு சேதாரம்னு தெரியும். ஆனாலும், யாரும் யாரையும் கோவிச்சுக்க மாட்டோம். நட்பில் இந்தச் சேதாரம்கூட இல்லைனா எப்படி?” என்றாள் பிரியதர்ஷினி.

‘‘ஈவ்னிங்ல ஒண்ணு சேர்ந்தோம்னா, புதுசு புதுசா ஒரு கேம் உருவாக்கி விளையாடுவோம். எங்க தாத்தா, பாட்டிங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட பூப்பறிக்க வருகிறோம், ஒரு குடம் தண்ணி ஊற்றி, நாடு பிடிக்கிறது... என கிராமத்து விளையாட்டுகளையும் விளையாடுவோம்” என்றாள் நிவேதிகா.

ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!

‘‘ஒண்ணா ஹோம் வொர்க் பண்றது, புராஜெக்ட் பண்றது, பேரன்ட்ஸ் ரெண்டு பேரும் ஆபீஸில் இருந்து லேட்டா வர்ற மாதிரியோ, திடீர்னு ஊருக்குப் போகிற மாதிரியோ சூழ்நிலை வந்தா, நண்பன் வீட்டிலேயே சாப்பிட்டுத் தூங்குறதுனு எங்க அபார்ட்மென்ட் ஃப்ரெண்ட்ஷிப்பைப் பற்றி சொல்லிட்டே போகலாம். அன்பு, நட்புக்கு அபார்ட்மென்ட்டில் எந்தக் குறையும் இல்லை” என்று நெகிழ்கிறார்கள் சுட்டிகள்.

 - சு.சூரியா கோமதி

படங்கள்: டி.வி.விவேகாநந்தன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு