Published:Updated:

என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது?

- பாய்ஸ் vs கேர்ள்ஸ்

“என்னது, பாய்ஸ் பற்றி கேர்ள்ஸும், கேர்ள்ஸ் பற்றி பாய்ஸும் சொல்லணுமா? ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான் மாதிரி எங்களுக்குள்ளே தகராறு. இப்படித் தூண்டி விட்டால், ரணகளம் ஆகிடுமே பரவாயில்லையா?” என்று டெரர் ஓப்பனிங் கொடுத்தார் வினீத்.

மதுரை, சொக்கிகுளம் பகுதியில் இருக்கும் ‘செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி’ (Seventh Day Adventist Matriculation School), மதிய இடைவேளையின் சாப்பாட்டு பிஸியில் இருந்தது. திறந்த லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து கமகம மணம். விஷயத்தைச் சொன்னதும், ஈரக் கைகளோடு ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டது.

தெளிவாக காண படத்தை க்ளிக் செய்யவும்

என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது?

‘‘இந்த கேர்ள்ஸ், நாங்க பண்ற சேட்டைகளை எல்லாம் பண்ணுவாங்க. ஆனா, மிஸ்கிட்டே திட்டுவாங்குறது நாங்க மட்டும்தான். ஏன்னா, கரெக்ட்டா மிஸ் வர்ற நேரம் பார்த்து, நல்ல புள்ளைங்க மாதிரி உட்கார்ந்துருவாங்க. ஆஸ்கர் அவார்டு எல்லாம் இவங்க நடிப்புக்கு முன்னாடி தூசி” என்றார் முகம்மது ஆஷிக்.

‘‘ஆஸ்கர் அவார்டு ஆரம்பிச்சதே இவங்களைப் பார்த்துதான். டிவி-யில் மேட்ச் பார்த்தோ, நண்பர்களோடு ஊரைச் சுற்றியோ, சண்டேயை வேஸ்ட் பண்ணிடுவாங்க. மறுநாள் கிளாஸுக்கு வந்து மிஸ்கிட்டே, ‘வயிறு வலி, கரன்ட் கட், எங்க வீட்டுல மட்டும் பூகம்பம் வந்துச்சு’னு விதவிதமா பொய் சொல்றதைக் கேட்கணுமே. இந்த மூளையை படிக்க யூஸ் பண்ணலாம்” என்றார் அக்‌ஷயா.

‘‘நாங்க, வகுப்புக்கு வெளியே, பரந்தவெளியில இயற்கைப் பாடங்களையும் படிக்கிறோம். ஆனா இவங்க, நாலு சுவருக்குள்ளே, ஸ்கூல் பாடங்களை எழுதறாங்க. அதனால, முதல் ஆளா ஹோம்வொர்க் முடிச்சுடுறாங்க. சின்சியர் சிகாமணி பெயர் வாங்குறதுக்காக, மிஸ் கேட்கலைன்னாலும் ஞாபகப்படுத்தி, எங்கள் சாபத்தை வாங்கிக்கிறாங்க” என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார் ஸ்ரீராம்.

‘‘எப்படி எல்லாம் சப்பைக்கட்டு கட்டுறாங்க பார்த்தீங்களா? மிஸ் இல்லாத நேரத்துல இவங்க பண்ற கலாட்டாவையும் கூச்சலையும் தாங்க முடியாது. காதுக்குள்ளே ஜெனரேட்டர் ஓடுற மாதிரி இருக்கும். இவங்க சத்தம் போடுறதால, ஒட்டுமொத்த கிளாஸுக்கும் பனிஷ்மென்ட் கொடுத்துருவாங்க. பசங்ககிட்டே பிடிக்காத விஷயம், நிக் நேம் வெச்சுக் கூப்பிடுறது. இதனால, அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமேனு யோசிக்கிறதே இல்லை” என்றார் சுஜி.

என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது?

‘‘நாங்க ஜாலிக்காக நிக் நேம் வெச்சுக் கூப்பிட்டுக்கிட்டாலும், எதையும் டேக் இட் ஈஸியா நினைப்போம். கேர்ள்ஸ் அப்படி இல்லை. சின்னச்சின்ன விஷயத்துக்குக்கூட கோவிச்சுப்பாங்க. இது, அவங்ககிட்டே பிடிக்காத விஷயம். அதனாலே, ஏதாவது ஜாலியா பேசலாம்னு நினைச்சாலும் ‘எதுக்கு வம்பு?’னு சும்மா இருந்துடுவோம்” என்றார் வினீத்.

‘‘என்னடா, எல்லாமே மைனஸா சொல்றாங்களே, பாய்ஸ்கிட்டே பிடிச்ச விஷயங்களே இல்லையானுதானே யோசிக்கிறீங்க. அதுவும் இருக்கு. ஆனா, அதை இவங்க முன்னாடியே சொன்னா, இவங்ககிட்டே இருக்கிற கொஞ்சம் சின்சியரும் போயிடும். தனியா சொல்றோம்” என்றார் வசந்த சூரியா.

‘‘அதையேதான் நாங்களும் சொல்றோம். கேர்ள்ஸ்கிட்டே கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. அதை வெளிப்படையா சொன்னா, தரையில கால் படாமல் மிதக்க ஆரம்பிச்சுடுவாங்க. நாங்களும் தனியாச் சொல்றோம்” என்றார் நிர்ஜித்

நல்ல விஷயங்களை நாலு பேருக்குத் தெரியும்படி சொல்லணும். அதனால், அவங்க சொன்னதை பபிளுக்குள் சொல்லி இருக்கோம். படிச்சிக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்!

- மு.ராகினி ஆத்ம வெண்டி

படங்கள்: நா.விஜயரகுநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு