ஸ்கிப்பிங்...

• நேராக நின்று முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் சீராக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

• புல் தரை, மண் தரையில் விளையாடுவது நல்லது. ஈரத் தரையிலும், டைல்ஸ் பதித்திருக்கும் இடங்களிலும் விளையாடுவதைத் தவிர்க்கவும்.

• ஸ்கிப்பிங் விளையாடும்போது, இறுக்கமான ஆடைகளை உடுத்தியிருக்கக் கூடாது.

• வெறும் வயிறோடு ஸ்கிப்பிங் ஆடக் கூடாது.

• முன்புறம் தாண்டுதல், பின்புறம் தாண்டுதல், ஓடிக்கொண்டே தாண்டுதல், பக்கவாட்டில் தாண்டுதல் என ஸ்கிப்பிங்கில் வகைகள் இருக்கின்றன.

• பலவீன உடல்வாகு உடையவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்பே ஸ்கிப்பிங்  ஆட வேண்டும்.

• 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் ஆடினால்,   2 கிலோமீட்டர் ஓடியதற்குச் சமம். உடலை வலிமையாக்கும். முதுகுத் தண்டுவடத்துக்கு     நல்ல பயிற்சி.

• உங்கள் தோளிலிருந்து தரை தொடும் அளவின் இரண்டு மடங்கான கயிறே, விளையாடுவதற்கு சரியான நீளம்.

• உடலின்  தேவையற்ற கொழுப்பைக் குறையச் செய்வதில் ஸ்கிப்பிங் முதன்மையானது.

• இருவர், மூவர் என ஆடும்போது,  மற்றவரைவிட அதிகமாகத் தாண்ட வேண்டும் என தனது சக்தியை   மீறி விளையாடக் கூடாது.

• போட்டிக்குத் தயார் செய்வதுபோல கடினமாக ஆடாமல், நண்பர்களோடு விளையாடுவதுபோல மகிழ்ச்சியோடு ஆட வேண்டும்.

- வி.எஸ்.சரவணன்

படம்: ஸ்ரீநிவாசன்

மாடல்: திஷா, சபரீஷ், சுவீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு