‘‘சாக்பீஸ்வெச்சு பிளாக் போர்டில் ஓவியம் வரையலாம், அந்த சாக்பீஸ்களையே கிராஃப்ட்டா மாற்றிக்காட்ட முடியுமா?”

மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் ஓவிய வகுப்பில் நுழைந்து கேட்டதும், சவாலுக்குத் தயாரானார்கள் மாணவர்கள். ஓவிய ஆசிரியர் இளங்கோ, அவர்களுக்கு

பிளாக் சார்ட், சாக்பீஸ்களைக் கொடுத்தார்.

ஹர்ஷனா: ‘‘கே.ஜி வகுப்பு படிக்கும்போது, எனக்கு கலர் சாக்பீஸ்னா ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு பாட வேளை முடிஞ்சதும், போர்டுக்குக் கீழே கிடக்கிற சாக்பீஸ் துண்டுகளை எடுத்துவெச்சுக்குவேன்.’’

பூரண விகாசினி: ‘‘நான் சுவத்துல கிறுக்கிடுவேன்னு, எங்க வீட்டுல சாக்பீஸைக் கையால தொடவே விட மாட்டாங்க.”

தீபிகா: ‘‘நான்தான் எங்க வீட்டுல கோலம் போடுவேன். ‘சாக்பீஸ்ல போடாதே’னு பாட்டி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.’’

முகுந்த்: ‘‘டிஃபரென்ட் கலர் பென், பென்சில்ஸ் வந்துட்டாலும் சாக்பீஸால எழுதுறது தனி அழகுதான்.’’

சாக்பீஸ் பற்றிய அவர்களின் நினைவு அரட்டையோடு, கைகள் பரபரப்பாக இயங்கின. வகுப்பில் இருந்த காகிதத் துண்டுகள், நூல் ஆகியவற்றைத் தங்களின் சாக்பீஸ் கிராஃப்ட் செய்ய துணைக்கு அழைத்துக்கொண்டார்கள்.

ஹர்ஷனா: ‘’எனக்கு, செடி ரொம்பப் பிடிக்கும். அதனால, சாக்பீஸையே வெச்சு தொட்டி செஞ்சு, அதுல செடி வரைஞ்சேன்.”

சிநேகா: ‘‘ரொம்ப சந்தோஷத்துல தொட்டி கலரிலேயே பூக்களுக்கும் சாக்பீஸை வைக்கிறே பாரு.”

தீபிகா: ‘‘நீ மட்டும் என்னவாம், புல் தரையில சாக்பீஸ் மரம் வளர்க்கிறே.’’

சிநேகா: ‘‘நானாச்சும் பரவாயில்லை. பூ வரையிறேன்னு ஏதோ கூடையை உருவாக்கிட்டு இருக்கா பூரணா.”

பூரணா: ‘‘ஹலோ, இது சூரியகாந்தி.’’

முகுந்த்: ‘‘அப்படியா, ரிம் இல்லாத சக்கரம்னு நினைச்சேன்.’’

வருண்: ‘‘நேத்து சைக்கிளில் ஏதோ ப்ராப்ளம்னு சொன்னியே இதுதானா?”

பூரணா: ‘‘ஸ்பைடர்மேன் பண்றேன்னு சொல்லிட்டு, ஸ்பைடர் வெப் பண்ணியிருக்கா சிநேகா.”

முகுந்த்: ‘‘அட, நீ வேற. எங்க பாட்டி சுடுற கம்ப்யூட்டர் முறுக்கு மாதிரியில இருக்கு.”

ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து சிரித்துக்கொண்டாலும், இலை இல்லாத பூக்கள், புகை இல்லாத ராக்கெட், நீரில்லா மீன், சிலந்தி இல்லாத வலை எனப் பல வகையில் சாக்பீஸ் கிராஃப்ட்டுகளை வரைந்து அசத்தினர்.

மனதுக்குள் எழுந்த கற்பனையை, சார்ட்டில் கொண்டுவந்த திருப்தி அவர்களின் முகங்களில் மிளிர்ந்தது.

படங்கள்: பா.பிரபாகரன்