Published:Updated:

Pro Kabaddi 2022: பலம் சேர்க்கும் பவன் குமார்; இது தமிழ் தலைவாஸ் 2.0 - இந்த சீசனிலாவது சாதிக்குமா?

Pawan ( Tamil Thalaivas )

பவன் குமாரை மட்டும் சார்ந்திருக்காமல் பிற வீரர்களும் வெற்றிக்காக உழைத்திட வேண்டும். ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்படுவது தமிழ் தலைவாஸுக்கான சவாலாக இருக்கும்.

Published:Updated:

Pro Kabaddi 2022: பலம் சேர்க்கும் பவன் குமார்; இது தமிழ் தலைவாஸ் 2.0 - இந்த சீசனிலாவது சாதிக்குமா?

பவன் குமாரை மட்டும் சார்ந்திருக்காமல் பிற வீரர்களும் வெற்றிக்காக உழைத்திட வேண்டும். ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்படுவது தமிழ் தலைவாஸுக்கான சவாலாக இருக்கும்.

Pawan ( Tamil Thalaivas )
புரோ கபடி 9-வது சீசன் நேற்று முதல் பெங்களூரில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இன்று தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளப் போகிறது. புரோ கபடி லீகின் 5-வது சீசனில் அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி அதிகமாகத் தோல்விகளை மட்டும் சந்தித்துள்ளது. அதுவும் கடந்த சீசனில் தனது மோசமான ஆட்டத்தால் புள்ளி பட்டியலில் 11வது இடத்தை மட்டுமே பிடித்தது.

கபடி ஜாம்பவான்களான அஜய் தாகூர், சுஜித் சிங், மந்திப்சிலர், ஜஸ்வந்த் சிங், ராகுல் சவுத்ரி ஆகியோர் தமிழ் தலைவாஸை வழிநடத்தியிருக்கின்றனர். ஆனால் மோசமான ஆட்டத்தால் கடந்த சீசனங்களில் ஒரு முறை கூட தமிழ் தலைவாஸ் அணி ப்ளேஆஃப்ஸிற்குத் தகுதிப்பெறவில்லை. இந்த சீசனில் புதிய பயிற்சியாளரான உதயகுமாருடன் புதிய உத்வேகத்துடன் பவன் குமார் தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கப் போகிறது. புரோ கபடி சீசன்களில் ஆகச்சிறந்த ரைடர் பவன் குமார். பெங்களூர் புல்ஸ் அணியில் அதிரடி காட்டிய பவன், 8-வது சீசனில் 300 க்கும் மேற்பட்ட புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த சீசனிலும் அதிக புள்ளிகள் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள் ஏலத்தில் பவனை 2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது. 7-வது சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ்க்கு எதிராக ஒரே ஆட்டத்தில் 39 ரைட் புள்ளிகளைப் பெற்று புரோ கபடி லீகில் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் பவன்குமார்.
Pawan
Pawan
Tamil Thalaivas

ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் எடுத்த அதிகப்படியான ரைட் புள்ளிகள் இதுவே. கடந்த மூன்று சீசன்களில் சிறந்த ரைடர் மற்றும் டிஃபெண்டராக அதிரடி காட்டியுள்ளார். இந்தியன் ரயில்வே அணியின் கேப்டனாக விளையாடி கோப்பையை வென்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் உள்ளார். பவன் குமார் தனது சிறந்த ரைடுகளை வெளிப்படுத்தினாலே தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப்ஸூக்கு முன்னேறிவிடும். தமிழ் தலைவாஸ் அணியின் பெரும் நம்பிக்கையாக பவன் குமாரே இருக்கிறார்.

அடுத்து அஜிங்க்யா , ஹிமான்ஷுசிங் ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் தூண்களாகக் களமிறங்கப் போகிறார்கள். கடந்த சீசனில் ஹிமான்ஷுசிங்  89 டேக்கிள் புள்ளிகளைப் பெற்று சிறந்த ஆட்டத்தை விளையாடினார். அஜிங்க்யா சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் மாஸ் காட்டியுள்ளார். கடந்த சீசனை ஒப்பிடுகையில் சிறந்த பார்மில் களமிறங்கப் போகிறார். இருவரும் இதேபோன்ற ஆட்டத்தை இந்த சீசனில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்து தமிழ் தலைவாஸின் இளம் படை வீரர்களான விஸ்வநாத் சாகர், சச்சின் நரேந்திரன் இருக்கிறார்கள். தமிழக வீரர் விஸ்வநாத் உள்ளூர் போட்டிகளில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீசனிலும் ஆல் ரவுண்டராக விளையாடுவார். கேலோ இந்தியா தொடரில் மிகச் சிறப்பாக ஆடி நரேந்திரன் பார்மில் இருக்கிறார். தமிழ் தலைவாஸ் இல் டிஃபண்டர்களாக பலம் கொடுக்க ஆஷிஷ், அன்கிட், மோஹித் களமிறங்க உள்ளனர். இவர்களுடன் தமிழக வீரர் அபிஷேக்கும் டிஃபன்சில் பலமாக இருப்பார். 

இளம் வீரர்களை நம்பியே தமிழ் தலைவாஸின் டிஃபன்ஸ் இருக்கிறது. அகிலேஷ் கடந்த சீசனில் பல புள்ளிகளை பெற்று ஃபார்மில் இருக்கிறார். பிரச்னை என்னவென்றால் அதிக அட்வான்ஸ் டேக்கிள் செய்வது. கடந்த சீசனில் ஆஷிஷ், அன்கிட், மோஹித், அபிஷேக் அகியோர் பல அட்வான்ஸ் டேக்கிள் செய்து எதிரணிகளுக்குத்தான் புள்ளிகளைக் கொடுத்தார்கள். மோசமான டிஃபன்ஸ் ஆட்டத்தால் சில நேரங்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டத்தின் முடிவே மாறிவிடுகிறது. கடந்த எல்லா சீசன்களிலும் இப்பிரச்னை இருந்தது. டிஃபன்ஸில் இன்னும் கவனம் செலுத்தினால் மட்டுமே தமிழ் தலைவாஸுக்கு வெற்றிகள் கிட்டும். அனுபவமுள்ள மூத்த வீரர்கள் அணியில் இல்லாதது தமிழ் தலைவாஸுக்குக் கூடுதல் சவால்களைக் கொடுக்கும்.

Tamil Thalaivas
Tamil Thalaivas
Tamil Thalaivas
பவனைத் தாண்டி சிறந்த அனுபவமுள்ள பேக்கப் வீரர்கள் இல்லை. பவன் விளையாடவில்லை என்றால் தமிழ் தலைவாஸ் திணறக்கூடும்.

பவன் குமாரை மட்டும் சார்ந்திருக்காமல் பிற வீரர்களும் வெற்றிக்காக  உழைத்திட வேண்டும். ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்படுவது தமிழ் தலைவாஸுக்கான சவாலாக இருக்கும். கடந்த சீசன்களின் மோசமான பெர்ஃபார்மென்ஸை மறந்து இந்த சீசனிலிருந்து புதிய பயணத்தைத் தமிழ் தலைவாஸ் தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்

ரைடர்கள்:

பவன் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு சிங்

டிஃபன்ட்டர்கள்:

சாகர், சாஹில், எம்.அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிஃப் ரப்பானி (வங்காளதேசம்), அர்பித் சரோஹா, அங்கித்

ஆல்ரவுண்டர்கள்:

தனுஷன் லக்ஷ்மமோகன் (இலங்கை), விஸ்வநாத்.வி, கே.அபிமன்யூ