Published:Updated:

Pro Kabaddi: மீண்டும் சூப்பர் 10 அடித்த நரேந்தர் கண்டோலா; மீண்டும் தோற்றுப்போன தமிழ் தலைவாஸ்!

Narendar ( Pro Kabaddi )

ஹரியானாவிற்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் முழுக்க முழுக்க டிஃபன்ஸிவ் கேமையே ஆடியிருந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் அது கொஞ்சம் மாறியிருந்தது. ஓரளவுக்கு நன்றாகவே ரெய்டு புள்ளிகளைப் பெற்றனர். தலைகீழாக, டிஃபன்ஸ் இந்தப் போட்டியில் படுமோசமாக இருந்தது.

Published:Updated:

Pro Kabaddi: மீண்டும் சூப்பர் 10 அடித்த நரேந்தர் கண்டோலா; மீண்டும் தோற்றுப்போன தமிழ் தலைவாஸ்!

ஹரியானாவிற்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் முழுக்க முழுக்க டிஃபன்ஸிவ் கேமையே ஆடியிருந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் அது கொஞ்சம் மாறியிருந்தது. ஓரளவுக்கு நன்றாகவே ரெய்டு புள்ளிகளைப் பெற்றனர். தலைகீழாக, டிஃபன்ஸ் இந்தப் போட்டியில் படுமோசமாக இருந்தது.

Narendar ( Pro Kabaddi )

புரோ கபடி ஒன்பதாவது சீசனில் தமிழ் தலைவாஸ் தனது மூன்றாவது ஆட்டத்தில் யு மும்பா அணியை நேற்று எதிர்கொண்டது.

குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியைத் தமிழ் தலைவாஸ் அணி டை ஆக்கியிருந்தது. ஹரியானாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் மோசமாகத் தோற்றிருந்தது. வெற்றிக் கணக்கையே தொடங்காத நிலையில் தமிழ் தலைவாஸ் அணி யு மும்பாவுக்கு எதிராகக் களமிறங்கியது. இந்தப் போட்டியில் 39 - 32 எனத் தமிழ் தலைவாஸ் தோற்றிருக்கிறது. வெற்றி கணக்கைத் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியை அடைந்துள்ளது.
Narendar
Narendar
Pro Kabaddi

ஹரியானாவிற்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் முழுக்க முழுக்க டிஃபன்ஸிவ் கேமையே ஆடியிருந்தனர். ரெய்டு புள்ளிகளைச் சேர்க்கும் எண்ணமே தமிழ் தலைவாஸூக்கு இருந்திருக்கவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் அது கொஞ்சம் மாறியிருந்தது. ஓரளவுக்கு நன்றாகவே ரெய்டு புள்ளிகளைப் பெற்றனர். தலைகீழாக, டிஃபன்ஸ் இந்தப் போட்டியில் படுமோசமாக இருந்தது.

காயம் காரணமாக பவன் செராவத் இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. ஆனால் நரேந்தர் கண்டோலா ரெய்டுகளில் அதிரடி காட்டினார்.

குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் நரேந்தர் சூப்பர் 10 அடித்திருந்தார். இரண்டாவது முறையாக நேற்றைய போட்டியிலும் சூப்பர் 10 எடுத்து தமிழ் தலைவாஸ் அணிக்கு ரெய்டுகளில் பெரும் நம்பிக்கை அளித்தார். ரெய்டுகளில் PKL சீசன்களில் தமிழ் தலைவாஸ் அணியில் அறிமுக சீசனிலேயே அதிக சூப்பர் 10 எடுத்த வீரர் என நரேந்தர் கண்டோலா சாதனை படைத்தார்.

நம்பிக்கையோடு களம் இறங்கிய தமிழக வீரர் விஸ்வநாத் சில புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். நரேந்தர் மற்றும் விஸ்வநாத் தமிழ் தலைவாஸ் அணிக்கு ரெய்டுகளில் பலமாக ஆடிக் கொடுத்தனர். முதல் பாதி முடிவில் 16 -15 என முன்னிலையிலிருந்த தமிழ் தலைவாஸ் இரண்டாவது பாதி தொடக்கத்தில் ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தது. அதன்பின் யூ மும்பா அணியின் கையே ஓங்கி இருந்தது. சூப்பர் 10 எடுத்து குமான் சிங் யூ மும்பா அணி வெற்றிக்கு வித்திட்டார். யு மும்பா அணிக்கு சுரிந்தரும் பலமாக ஆடிக் கொடுத்தார். ஆட்டத்தின் கடைசி பத்து நிமிடங்களில் 33 - 23 என 10 புள்ளிகள் பின்னடைவில் தமிழ் தலைவாஸ் ஆடிக்கொண்டிருந்தது.

Pawan
Pawan
Tamil Thalaivas

அதன் பின் இரண்டாவது ஆல் அவுட் ஆகி கடைசிவரை அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு சிங் ஆகியோர் பெரிதும் சோபிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தது. அட்வான்ஸ் டேக்கில் மூலம் அபிஷேக் மோசமான ஆட்டத்தை ஆடினார். 8 தேவையில்லாத டேக்கிள்களைச் செய்தார். இந்த ஆட்டத்தில் டிஃபன்ஸ் மிக மோசமாக இருந்தது.

பயிற்சியாளர் உதய குமார் இளம் வீரர்களை ஊக்குவித்து அணியின் வெற்றிக்கு உழைத்திட வேண்டும். தமிழ் தலைவாஸின் டிஃபன்ஸ் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், கடந்த சீசன்களில் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறது தமிழ் தலைவாஸ். நல்ல லீடிங்கில் இருந்தாலும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் கை நழுவ விட்டு விடுகிறது. தற்போது பவன் குமார் இல்லாதது அணிக்குப் பலவீனமாக இருந்தாலும் நரேந்தர் கண்டோலா நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அவருக்குப் பலமாக அணியிலுள்ள மற்ற வீரர்களும் செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்ற ஒன்றைத் தமிழ் தலைவாஸ் யோசிக்கலாம். சீக்கிரம் காயத்திலிருந்து குணமடைந்து பவன் திரும்பினால் தமிழ் தலைவாஸுக்கு அது புது நம்பிக்கையாக இருக்கும்.

சீக்கிரம் வாங்க பவன்!