Published:Updated:

Pro Kabaddi 2022: `பிளே-ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்ற தபாங் டெல்லி; அடுத்தடுத்த ஆட்டங்கள் என்னென்ன?

புரோ கபடி லீக் 2022

தபாங் டெல்லி அணி 6-வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

Pro Kabaddi 2022: `பிளே-ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்ற தபாங் டெல்லி; அடுத்தடுத்த ஆட்டங்கள் என்னென்ன?

தபாங் டெல்லி அணி 6-வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

Published:Updated:
புரோ கபடி லீக் 2022

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி பெங்களூரில் தொடங்கிய 12  அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடிப் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு  நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸை 50 - 33 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இதனிடையே நேற்று தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக விளையாட, கடைசியில் 46-46 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி டிரா ஆனது.

புரோ கபடி லீக் 2022
புரோ கபடி லீக் 2022

ஆனால் தனது கடைசி லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 10 வெற்றி, 10 தோல்வி, 2 சமன் என்று 63 புள்ளிகளைப் பெற்றிருப்பதால் விதிகளின்படி, அந்த அணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் 6-வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தபாங் டெல்லி அணி தகுதி பெற்றிருக்கிறது. இந்த பிளே-ஆஃப் சுற்றில் டாப் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். எஞ்சிய 4 அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோதி அதிலிருந்து 2 அணிகள் அரை இறுதிக்குத் தேர்வாகும். நாளையுடன் லீக் சுற்று முடிகிறது. அதனைத் தொடர்ந்து நாக்-அவுட் சுற்று 13-ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் 15-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடைபெறவிருக்கின்றன.