Ipl-2021 banner
Published:Updated:

CSK v SRH: இன்று தீபக் சஹார் வேட்டை இருக்கிறது! | IPL 2021

Deepak Chahar
Deepak Chahar

சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில், சென்னைக்கு முக்கிய வீரராக தீபக் சஹார் இருப்பார். ஏன்? அந்தக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்று இரவு டெல்லியில் நடக்கும் IPL போட்டியில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் CSK முதலிடத்துக்கு முன்னேறும். இந்தப் போட்டியில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும், யாரெல்லாம் உள்ளே வருவார்கள்... இந்த வீடியோவில் காணுங்கள்.

முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராகத் தோற்றிருந்தாலும், அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐதராபாத் அணியோ நேர்மாறாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் ஓரளவு சிறப்பாகவே விளையாடியிருக்கிறார்கள். டெல்லிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில்தான் தோற்றிருக்கிறார்கள். அதனால், இன்று நிச்சயம் நன்றாக போராடுவார்கள்.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த போட்டியில் மிகவும் சோர்வாகக் காணப்பட்ட அம்பதி ராயுடு இன்று ஆடுவாரா தெரியவில்லை. அவருக்குப் பதிலாக உத்தப்பா அல்லது ஜெகதீசன் இருவரில் ஒருவர் ஆடலாம். அதேபோல், காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாத மொயீன் அலி இன்று மீண்டும் களமிறங்கலாம். அவருக்குப் பதில் யாரை வெளியில் எடுப்பது என்பதில்தான் தோனிக்குக் குழப்பம் ஏற்படும். இம்ரான் தாஹிர் டெல்லி பிட்சில் நல்ல தாக்கம் ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் பிராவோ இல்லாவிட்டால் டெத் பௌலிங் கொஞ்சம் பலவீனம் அடையலாம். இந்தப் போட்டியில் முக்கிய வீரராக தீபக் சஹார் இருப்பார். ஏன்? அந்த காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு