Published:Updated:

பட்லரைக் குறிபார்த்த 156.2 கிமீ பந்து... வேகத்தால் அச்சுறுத்தும் ஆன்ரிச் நார்க்கியா யார்?! #Nortje

#Nortje
#Nortje

ஆன்ரிச் நார்க்கியாவுக்கு தன் சொந்த நாட்டு பெளலர் டேல் ஸ்டெய்ன்தான் ரோல் மாடல். ஆனால், இப்போது குருவை மிஞ்சிய சிஷ்யனாய் ஸ்டெய்னையே வேகத்தில் ஆச்சர்யப்படுத்துகிறார் நார்க்கியா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேட்ஸ்மேன்களின் பேரடைஸாகக் கருதப்படும் டி20 கிரிக்கெட்டில் பெளலர்களின் எழுச்சி பிரமிக்கவைக்கிறது. எப்போதும் பலமான பெளலிங் கூட்டணிகளுக்கு பேர் பெற்ற ஹைதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸைவிட இந்தமுறை பெளலிங்கில் திகில் கிளப்புகிறது டெல்லி கேபிடல்ஸ்.

ரபடா, நார்க்கியா, அஷ்வின், அக்ஸர் எனும் இந்த நால்வர் கூட்டணி எதிரணியின் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கிறது. இதில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருக்கும் ஆன்ரிச் நார்க்கியா முரட்டு வேகத்தால் மிரட்டியெடுக்கிறார். கிரிக்கெட்டில் அதிகவேகப்பந்தான 160கிமீட்டர் வேகத்தை ஐபிஎல்-ல் தொட்டுவிடுவார் போல நார்க்கியா. நேற்று ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தொடர்ந்து 150 கிமீட்டர் வேகத்துக்கு மேல் வீசி பட்லர், உத்தப்பா என இருவரையும் க்ளீன் போல்டாக்கினார் நார்க்கியா.

#Nortje
#Nortje

ஜோஸ் பட்லர் ஸ்ட்ரைக்கில் இருக்க இவர் வீசிய முதல் ஓவரில் மட்டும் தொடர்ந்து 150 கிமீட்டர் வேகத்துக்கு மேல் வீசிக்கொண்டேயிருந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தின் வேகம் 156.22 கிமீட்டர். புயல் வேகம் காரணமாக இந்தப் பந்து பட்லரின் பேட்டில் பட்ட அடுத்தநொடியே பவுண்டரிக்குப்போனது. ஆனால், அடுத்தப்பந்தில் பட்லர் போல்ட்.

2011-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் இதேபோன்று டெல்லி வெர்சஸ் ராஜஸ்தான் போட்டியில்தான் முதல்முறையாக 157.3 கிமீட்டர் வேகத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகப்பந்து வீசப்பட்டது. டெல்லியின் ஆரோன் ஃபின்ச் ஸ்ட்ரைக்கில் இருக்க, ராஜஸ்தானின் ஷான் டெய்ட் இந்த அதிகவேகப்பந்தை வீசினார். டெய்ட்டின் வேகத்தை நார்க்கியா இந்த ஐபிஎல்-ல் முறியடிப்பதற்கான எல்லா சாத்தியங்களும் கண்முன் தெரிகின்றன.

யார் இந்த நார்க்கியா?!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆன்ரிச் நார்க்கியாவுக்கு வயது 26. தென்னாப்பிரிக்காவின் பல விளையாட்டு கான்செப்ட்படி ரக்பி, கிரிக்கெட் என இரண்டும் விளையாடினார். ரக்பி விளையாடும்போது ஒருமுறை காலர்போன் உடைய, அதிலிருந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்தியாவின் ஐபிஎல் போன்று தென்னாப்பிரிக்காவில் 2018-ல் தொடங்கப்பட்ட ஸான்ஸி (Mzansi) சூப்பர் லீகில் கேப்டவுன் பிளிட்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் நார்க்கியா. காயம் காரணமாக அவரால் அந்த சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. ஆனால், விளையாடிய மூன்று போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதில் ஜாம்பவான் ஆம்லாவின் விக்கெட்டும் அடக்கம். இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் அணியான வாரியர்ஸ் அணிக்காக ஆடிய ஐந்தே போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பயிற்சியாளர் ஜாக்யூஸ் காலிஸை கவனிக்க வைத்தது.

#Nortje
#Nortje

காலிஸ், நார்க்கியாவை 2019 ஐபிஎல்-க்கு கொல்கத்தா அணிக்குள் கொண்டுவந்தார். ஆனால், காயம் காரணமாக அவரால் முழுத்தொடருமே விளையாடமுடியாமல் போனது. காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பல 5 விக்கெட் ஹால்களை எடுக்க, நார்க்கியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணியின் கதவுகள் திறந்தன. கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி அசத்தினார். இலங்கைக்கு எதிரான பர்ஃபாமென்ஸ் அவரை 2019 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்த்தது. ஆனால், கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்குப் பதிலாக கடைசி நேரத்தில் கிரிஸ் மோரிஸின் பெயர் சேர்க்கப்பட்டது.

IPL 2020: டெத் பௌலிங்கில் மிரட்டிய டெல்லி... நார்க்கியா வேகத்தில் பம்மிப் பதுங்கிய ராஜஸ்தான்! #DCvRR

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயத்தில் இருந்து மீண்டு வந்துகொண்டேயிருந்தார் நார்க்கியா. கடந்த சீசன் ஐபிஎல் முழுக்க விளையாடதாவர் என்பதோடு, கொல்கத்தா பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜாக் காலிஸ் விலகியதால், நார்க்கியாவின் பெயரும் கேகேஆர் அணியில் இருந்து விலக்கப்பட்டது. இதோடு கிட்டத்தட்ட நார்க்கியாவின் ஐபிஎல் கனவும் கலைந்தது.

2020-க்கான ஐபிஎல் ஏலத்தில் நார்க்கியாவை எந்த அணியும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான் கொரோனா காரணமாக டெல்லி அணியில் இருந்து கடைசி நேரத்தில் இங்கிலாந்து பெளலர் கிறிஸ் வோக்ஸ் விலக, அவருக்குப் பதில் நார்க்கியாவை டெல்லி அணிக்குள் எடுத்தார் ரிக்கி பான்ட்டிங். "எப்படி தூக்கினேன் பாத்தல்ல?" என ரிக்கி பான்ட்டிங்கை இப்போது கெத்தாக துபாயில் சுற்றவைத்துக்கொண்டிருக்கிறார் நார்க்கியா.

#Nortje | #DCvRR
#Nortje | #DCvRR

2020 ஐபிஎல்!

முதல் ஐபிஎல் தொடரிலேயே செயல்புயலாக மாறியிருக்கும் நார்க்கியாவுக்கு, பஞ்சாபுக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் விக்கெட்டே கிடைக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே-வுக்கு எதிரான அடுத்தப்போட்டியில் முரளி விஜய், கேதர் ஜாதவ் என முக்கிய(!!!) பேட்ஸ்மேன்களை டக் அவுட்டுக்கு அனுப்பிவைத்தார் நார்க்கியா.

கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் நரைனின் ஸ்டம்புகளைத் தகர்த்த நார்க்கியா, மார்கன் மற்றும் கம்மின்ஸ் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

ஆன்ரிச் நோர்க்கியாவுக்கு தன் சொந்த நாட்டு பெளலர் டேல் ஸ்டெய்ன்தான் ரோல் மாடல். ஆனால், இப்போது குருவை மிஞ்சிய சிஷ்யனாய் ஸ்டெய்னையே வேகத்தில் ஆச்சர்யப்படுத்துகிறார் நார்க்கியா.

நார்க்கியா, இன்னும் பல ஆச்சர்யங்களை நிகழ்த்துவார்... காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு