Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

Jadeja with Dhoni

வெற்றிகளைத் தாண்டி, நெருக்கடியைச் சமாளிப்பதுதான் ஜடேஜா முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். தோனிக்குப் பிறகான விக்கெட் கீப்பர் என்ற இடத்தை நிரப்பவே பண்ட் படாத பாடுபட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

வெற்றிகளைத் தாண்டி, நெருக்கடியைச் சமாளிப்பதுதான் ஜடேஜா முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். தோனிக்குப் பிறகான விக்கெட் கீப்பர் என்ற இடத்தை நிரப்பவே பண்ட் படாத பாடுபட்டார்.

Published:Updated:
Jadeja with Dhoni
ஐபிஎல் 2022 சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வலுவானதாகக் கருதப்படும் சென்னை அணியை 12 ஆண்டுகளாக வழிநடத்திய தோனி, கேப்டன் பதவியிலிருந்து விலக, புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஜடேஜா. 12 சீசன்களில், 4 கோப்பை வென்ற ஒரு சகாப்தம் போற்றும் தலைவனுக்குப் பிறகு இந்த அணியை ஜடேஜா எவ்வாறு வழி நடத்த போகிறார்? ஜடேஜா சந்திக்க நேரிடும் சவால்கள் என்னென்ன?

சிஎஸ்கேவின் ஆகச்சிறந்த ஆல்ரவுண்டராக 2012-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தன்னை நிரூபித்திருக்கிறார் ஜடேஜா. தோனி, ரெய்னாவைத் தாண்டி சி.எஸ்.கே-வை சீசன் சீசனாக தாங்கிய மூன்றாவது தூண். ஒரு கிரிக்கெட் வீரராக இந்த ஆல்ரவுண்டரின் மதிப்பை மறுப்பதற்கில்லை. ஷேன் வார்னே முன்பொரு முறை கூறியது போல், அவர் களத்தில் ஒரு ராக்ஸ்டார். துல்லியமான பீல்டர், விக்கெட்-டேக்கிங் பந்துவீச்சாளர் மற்றும் மிகச்சிறந்த லோயர் ஆர்டர் பேட்டர். ஆனால் கேப்டன்சி என்பது இவ்வனைத்தையும் தாண்டியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு முன்பாக ஜடேஜா ஒரு அணியை தலைமை ஏற்று வழி நடத்தியது அக்டோபர் 2007-ல் நடந்த வினு மங்கட் டிராபியில்தான். சௌராஷ்டிரா அண்டர்-19 அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். இது, அவரது சர்வதேச அறிமுகத்திற்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போட்டி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜடேஜா 13 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில், முக்கிய வீரராகத் தொடர்ந்து இருந்து வருகிறார். ஆனால் அவர் தான் விளையாடிய எந்த அணிகளின் தலைமைக் குழுவிலும் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அதற்காக ஜடேஜா சிறந்த கேப்டன் ஆகமாட்டார் என்று அர்த்தமில்லை. என்ன இருந்தாலும், அவருடைய அனுபவமும், ஆற்றலும் அணிக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும்.

ஐபிஎல் என்பது திறமைகளை கண்டறியும் ஒரு தளம்தான். இங்கு சிறந்த தலைவர்களும் உருவாகியுள்ள வரலாறு உண்டு. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரோஹித் ஷர்மா. ரோஹித் தவிர, இளம் வயதிலேயே அணியின் தலைமை என்ற பொறுப்பை ஏற்று ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட் என அனைவரும் மெருகேறும் ஒரு பயிற்சிக்கூடமாக ஐபிஎல் திகழ்கிறது. அப்படி இருக்க, ஜடேஜா தன்னை ஒரு நல்ல கேப்டன் என்று நிரூபிக்கும் சீசனாகக் கூட இது அமையலாம்.

Ravindra Jadeja
Ravindra Jadeja

இந்த ஆண்டு சென்னை அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையுமே வருங்காலத்தை கருத்தில் கொண்டதாகவே இருந்தது. ரெய்னா ஏலத்தில் கைவிடப்பட்டபோதும் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் அதைத்தான் கூறினார்.

அந்த வகையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்க ஒரு போட்டியாளராக இருந்திருக்கலாம். அவர்தான் மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தோனி ஓரிரு சீசன்களுக்கு களத்தில் இருக்கும் பட்சத்தில் அது இந்த 25 வயது இளைஞனை, சிறந்த கேப்டனாக வளர்க்க உதவியிருக்கும். ஐபிஎல் அரங்கில் மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் ஒரு புதிய கேப்டன் உருவாகி இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் ஆட்டத்தின் அடிப்படையிலும், அனுபவத்தின் அடிப்படையிலும், தோனிக்கு அடுத்தது ஜடேஜா என்ற தேர்வு கண்டிப்பாக சரியானதுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கேப்டன் என்ற முன் அனுபவம் இல்லை என்றாலும், அணியின் வெற்றிக்காக சக வீரர்களுடன் இனைந்து செயல்படும் ஒன்றிணைந்த மனப்பான்மை அவரிடம் உண்டு.
Jadeja with Dhoni
Jadeja with Dhoni

நிச்சயமாக தோனியின் உதவி கரமும் நிர்வாகத்துடனான புரிதலும் ஆரம்பகட்டத்தில் விஷயங்களை எளிதாக்கும். ஆனால் ஜடேஜாவுக்கு ஆதரவாக நிச்சயம் கைகொடுக்கப்போவது அவருடைய தற்போதைய வெறித்தனமான ஃபார்ம்தான். அவர் இந்த நேரத்தில் அவரது விளையாட்டில் உச்சத்தில் இருக்கிறார்.

அவரது பீல்டிங் மற்றும் பந்துவீச்சு எப்போதும் இருந்ததைப் போலவே சிறப்பாக உள்ளது. அவரது பேட்டிங், குறிப்பாக ஒயிட்-பால் கிரிக்கெட்டில், கடந்த சில ஆண்டுகளில் நீண்ட தூரம் வந்துள்ளது கவனத்திற்குரியது. ஒவ்வொரு கேப்டனும் அணியை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும். அதற்கு சக வீரர்களை கையாள ஒரு ஆளுமை வேண்டும். அது ஜடேஜாவுக்கு உள்ளது.

வெற்றிகளைத் தாண்டி, நெருக்கடியைச் சமாளிப்பதுதான் ஜடேஜா முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில், அவர் அமரப்போவது தோனி எனும் மாவீரன் அமர்ந்திருந்த அரியணையில். அதை நிரப்புவது சாதாரண காரியமில்லை. விக்கெட் கீப்பர் என்ற இடத்தை நிரப்பவே பண்ட் படாத பாடுபட்டார். ஜடேஜாவோ அதை விடப் பெரிய இடத்தை நிரப்பவேண்டும். அதுவும் நடப்பு சாம்பியன் அணியின் கேப்டனை! இந்த நெருக்கடியை அவர் சமாளித்துவிட்டால் வெற்றி எளிதாக வசப்பட்டுவிடும்.

தோனி சிறந்த விக்கெட் கீப்பராக, ஃபினிஷெராக, ஆகச்சிறந்த தலைவனாகத் திகழ்ந்தார். ஜடேஜாவும் ஏற்கெனவே பௌலிங்கிற்கும், சிக்ஸர்கள் பறக்கவிடும் அதிரடி பேட்டிங்குக்கும் பெயர்போனவர்தான். அவர் எட்டவேண்டியது இன்னும் ஒரே ஒரு மைல்கல் மட்டும் தான். அது, தன்னை ஒரு சிறந்த அணித்தலைவராக நிரூபிப்பது. ஆக, புது கேப்டன் வழிநடத்தும் நடப்பு சாம்பியன்களுக்கு இந்த சீசனும் கோப்பை கைகூடுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism