Published:Updated:

IPL 2022: திலக் வர்மா - மும்பை அணியின் நம்பர் 4 பொசிஷன்! இனி இந்த இளம் வீரருக்குத்தானா?

IPL 2022 | திலக் வர்மா

நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தன் முதல் ஐ.பி.எல் போட்டியில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார் திலக். ஆனால் களத்தில் அவர் காட்டிய முதிர்ச்சி அபாரமானது. முதல் போட்டிக்கான எந்தவித பதற்றமும் திலக்கிடம் கொஞ்சமும் இல்லை.

IPL 2022: திலக் வர்மா - மும்பை அணியின் நம்பர் 4 பொசிஷன்! இனி இந்த இளம் வீரருக்குத்தானா?

நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தன் முதல் ஐ.பி.எல் போட்டியில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார் திலக். ஆனால் களத்தில் அவர் காட்டிய முதிர்ச்சி அபாரமானது. முதல் போட்டிக்கான எந்தவித பதற்றமும் திலக்கிடம் கொஞ்சமும் இல்லை.

Published:Updated:
IPL 2022 | திலக் வர்மா

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் ஒரு மாயக்களம். இத்தொடரில் நிரூபித்துவிட்டால் தேசிய அணிக்கான கதவுகள் மிக எளிதாக திறந்துவிடும் என்பது வீரர்களின் மனநிலையாக மட்டுமல்ல களநிலவரமும் அதுவே. அதை தன் முதல் போட்டியிலேயே நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் இளம் வீரர் திலக் வர்மா அதுவும் மும்பை போன்ற நட்சத்திரங்களால் சூழப்பட்டிருக்கும் ஒரு அணியில். யார் இந்த திலக் வர்மா?

Tilak Varma
Tilak Varma

2002-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹைதராபாதில் பிறந்தவர் நம்பூரி தாக்கூர் திலக் வர்மா. அவரின் தந்தை எலக்ட்ரீசியன் பணி செய்துவந்தவர். தொடக்கத்தில் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த திலக், பின்னர் சலாம் பயாஷ் என்பவரிடம் முறையான பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினார். ஆனால் திலக்கின் தந்தையால் அவரது கிரிக்கெட் செலவுகளை சமாளிக்கமுடியாமல் போகவே பயிற்சியாளர் சலாம் பயாஷ் தகுந்த நேரத்தில் செய்த உதவி திலக்கின் கிரிக்கெட் வாழ்விற்கு பேருதவியாய் அமைந்தது. டாப் ஆர்டர் இடதுகை பேட்டரான திலக் வர்மா ஆப்-ஸ்பினும் வீசக் கூடியவர். U-14, U-16 தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்படவே 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹைதராபாத் அணிக்காக 2018-ம் ஆண்டு முதல்தர போட்டிகளை ஆடத்தொடங்கிய திலக் 2019-ல் லிஸ்ட்-ஏ மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். 2020-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் வெறும் 3 இன்னிங்ஸில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டாலும் அவற்றில் மிக சிறப்பாக செயல்பட்டார் திலக். அதிலும் இறுதிப்போட்டியில் அவர் அடித்த 38 ரன்கள் இந்திய அணிக்கு பேருதவியாய் அமைந்தது.

2021-ம் ஆண்டு சையது முஷ்டாக் அலி தொடரில் 5 இன்னிங்ஸில் வெறும் 116 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும் விஜய் ஹசாரே தொடரில் 5 இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்தார் திலக் (இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம்). 2021-22 சையது முஷ்டாக் அலி தொடரின் சண்டிகருக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய அவர் அதே தொடரின் காலிறுதி ஆட்டத்தில் குஜராத் பௌலர்களுக்கு எதிராக 75 ரன்கள் விளாசி தன் அணியை அரையிறுதிக்கு இட்டுச் சென்றார். அதேபோல 2021-22-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் ஹரியானாக்கு எதிரான போட்டியில் 9.2 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய திலக் டெல்லிக்கு எதிரான போட்டியில் சதமடிக்கவும் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2022-ம் ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ரூ. 20 லட்சமாக இருந்த அவரின் தொடக்க விலை ரூ. 1.7 கோடி வரை சென்றது. அந்தளவுக்கு ஒவ்வொரு ஐ.பி.எல் அணிகள் ஒவ்வொன்றும் திலக்கை வாங்கிட அத்தனை ஆர்வம் காட்டியிருந்தன. இதுகுறித்து திலக் அளித்த பேட்டியில் தன் பயிற்சியாளர் சலாம் பயாஷை பற்றியே தொடங்கியிருந்தார். "எனது கிரிக்கெட் பயணத்தில் பயிற்சியாளர் சலாம் பயாஷின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. எனக்கு தேவையான அனைத்தையுமே அவர்தான் செய்துகொடுத்தார் "

Tilak Varma
Tilak Varma

நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தன் முதல் ஐ.பி.எல் போட்டியில் 22 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும் அவர் களத்தில் காட்டிய முதிர்ச்சி அபாரமானது. முதல் போட்டிக்கான எந்தவித பதற்றமும் திலக்கிடம் கொஞ்சமும் இருந்திருக்கவில்லை. அதுவும் கலீல் பந்தில் அடித்த அந்த ஃபிளிக் ஷாட் மற்றும் நாகர்கோட்டி பந்தில் அடித்த "Through the line" பவுண்டரி ஆகியவை அத்தனை சிறப்பு.

பேட்டிங் மட்டுமின்றி பௌலிங்கும் செய்யக்கூடியவர் என்பதால் மும்பை அணியின் நிரந்தர ஆல்-ரவுண்டராகும் வாய்ப்பு திலக்கிற்கு பிராகாசமாக உள்ளது. கடந்த காலங்களில் மும்பை அணிக்கான நம்பர் 4 பொஷிசனில் ஆடிய ராயுடு, இஷன் கிஷனைப்போல திலக் வர்மாவும் சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism