Published:Updated:

"போட்டியில் வெற்றி பெற்றால் பிரவுனி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்வோம்!"- சூர்யகுமார் யாதவ்

ரிஷப் பண்ட், சூர்யகுமார், இஷன் கிஷன்

தனது நெருங்கிய நண்பர்களான இஷன் கிஷன், ரிஷப் பண்ட் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

Published:Updated:

"போட்டியில் வெற்றி பெற்றால் பிரவுனி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்வோம்!"- சூர்யகுமார் யாதவ்

தனது நெருங்கிய நண்பர்களான இஷன் கிஷன், ரிஷப் பண்ட் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

ரிஷப் பண்ட், சூர்யகுமார், இஷன் கிஷன்

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியுடன் இருப்பதற்காக உடற்பயிற்சி மற்றும் சரியான டயட்டை பின்பற்றுவார்கள். அண்மையில் பேசிய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், தனது சக வீரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான இஷன் கிஷன், ரிஷப் பண்ட் ஆகியோரின் டயட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இஷன் கிஷன், ரிஷப் பண்ட் இருவரும் டயட் பிளான்களை ஏமாற்றி வித்தியாசமான காமினேஷனில் விதவிதமான உணவுகளை சாப்பிடுவார்கள் என்று கூறினார்.

Suryakumar Yadav
Suryakumar Yadav

"பன் (Bun) போன்ற உணவு பொருள்களை ஐஸ் கிரீமுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் ரொட்டியில் (bread) சாக்லேட் ஐஸ்கிரீமைப் போட்டு அதன் மீது Nando's sauce வைத்து சாப்பிடுவார்கள். இதை அவர்கள் பர்கர் (Burger) என்று கூறுவார்கள். இதை என்னிடம் கொடுத்து இவ்வாறு சாப்பிட்டால் நாளை ஆட்டத்தில் நிறைய ரன்கள் எடுக்கலாம் என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். இப்படிப் புதிது புதிதாகக் கண்டுபிடித்து சாப்பிடுவார்கள். இருவரும் உணவு விஷியத்தில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வர்கள். மாசற்ற மனது கொண்டவர்கள், அவர்களுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஜாலியாகச் செலவழிக்கலாம்" என்று கூறினார்.

மேலும், "இஷன் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர். சோகமான நேரங்களில் ஆட்டத்தில் தோல்வியைச் சந்திக்கும் நேரத்தில் எனது மனதைச் சட்டென்று மாற்றிவிடுவார். என் பயிற்சியாளர் எப்போதும் அவருடன் சேர்ந்துதான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று கூறுவார். நாங்கள் இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்யும்போது இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிரவுனி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்வோம் என்று பேசிக் கொள்வோம்" என்று கூறியிருந்தார்.