Published:Updated:

"சுரேஷ் ரெய்னா கடவுளைப் போல என் வாழ்க்கையில் நுழைந்தவர்!" - கார்த்திக் தியாகி சொல்லும் பிளாஷ்பேக்

சுரேஷ் ரெய்னா, கார்த்திக் தியாகி

2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி (Kartik Tyagi), "சுரேஷ் ரெய்னா ஒரு கடவுளைப் போல என் வாழ்வில் நுழைந்தவர்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

"சுரேஷ் ரெய்னா கடவுளைப் போல என் வாழ்க்கையில் நுழைந்தவர்!" - கார்த்திக் தியாகி சொல்லும் பிளாஷ்பேக்

2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி (Kartik Tyagi), "சுரேஷ் ரெய்னா ஒரு கடவுளைப் போல என் வாழ்வில் நுழைந்தவர்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

Published:Updated:
சுரேஷ் ரெய்னா, கார்த்திக் தியாகி

21 வயதான வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளுக்காக விளையாட ஆரம்பித்து, பின்னர் ரஞ்சி மற்றும் அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடிய இளம் வயது கிரிக்கெட்டர். இவர் தற்போது நடக்கும் ஐபிஎல் தொடரில் ₹4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார்.

அண்மையில் சுரேஷ் ரெய்னா குறித்துப் பேசிய கார்த்திக் தியாகி, "சுரேஷ் ரெய்னா ஒரு கடவுளைப் போல என் வாழ்க்கையில் நுழைந்தவர்" என்றும் தனது ஆரம்பக் காலங்களில் அவர் தனது ஆட்டத்தைப் பார்த்துப் பாராட்டிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

இது குறித்துப் பேசிய கார்த்திக் தியாகி, "நான் எப்போதும் ஒன்றைச் சொல்வேன். என் 16 வயதிற்குட்பட்ட ஆட்டத்திற்குப் பிறகு, சுரேஷ் ரெய்னா ஒரு கடவுளைப் போல என் வாழ்க்கையில் நுழைந்தார். ஏனென்றால் நான் ரஞ்சி டிராபிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்கினர். அதற்கு காரணம் அவர்தான். நான் 14 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும், பின்னர் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாட ஆரம்பித்தேன். அப்போது ஒரு சீசனில் நான் 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தபோது தேர்வாளர்கள் என்னைக் கவனிக்கத் தொடங்கினர். பின்னர் நான் அங்கிருந்து மாநில ரஞ்சிக் கோப்பை முகாமுக்கு வந்தேன். அப்போது எனக்கு வயது 16. மற்றவர்கள் என்னைவிட சிறந்த வீரர்களாக இருந்தனர். அங்கு சுரேஷ் ரெய்னாவும் வந்திருந்தார். நான் மிகவும் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் அவர் தனது பயிற்சி முடிந்து வெளியே செல்லவிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக, அவர் மைதானத்திற்கு வந்தார். அவர் என்னை அணுகி அணியில் என்னுடைய ரோல் என்ன என்றுக் கேட்டார். நான் ஒரு பந்துவீச்சாளர் என்று அவரிடம் சொன்னேன். பின்னர் அவர் எனக்கு நெட் பிராக்டீசில் பந்துவீச வாய்ப்பளித்தார். அவர் எனது ஆட்டத்தைப் பார்த்து 'உங்கள் பந்துவீச்சு எனக்குப் பிடித்திருந்தது, எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்' என்று கூறினார். சுரேஷ் ரெய்னா போன்ற ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தைக் கவனித்து என்னைப் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.

கார்த்திக் தியாகி
கார்த்திக் தியாகி

மேலும், "இவ்வளவு பெரிய வீரர் என்னைப் பாராட்டியதைக் கண்டு சற்று அதிர்ச்சியடைந்த நான், ஒரு கணம் அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தேன். நான் நன்றாக பந்துவீசுகிறேன் என்று அவர் சொன்னபோது, ​​அதனால் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அதன்பிறகு, உ.பி.யின் ரஞ்சி அணியில் எனது பெயர் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனது ரஞ்சி வாழ்க்கை அங்கிருந்துதான் தொடங்கியது. பின்னர் நான் அண்டர்-19 அணிக்கு முன்னேறி இறுதியில் உலகக் கோப்பையில் விளையாடினேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism