Published:Updated:

IPL 2021: இதோ புதிய RCB உருவாகிறது - சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

Sunrisers
Sunrisers

இத்தனை காலம் ராயல் சேலஞ்சர்ஸ் என்னென்ன பிரச்னைகளை சந்தித்து வந்ததோ அதையெல்லாம் இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது வார்னரின் அணி. இப்போது பெங்களூரு கூட அதையெல்லாம் சரிசெய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால், சன்ரைசர்ஸ் சுதாரித்துக்கொள்ளுமா?

முதலில் கொல்கத்தா, அடுத்து பெங்களூர், இப்போது மும்பை... விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத். அதிலும் இரண்டு போட்டிகளில் நல்ல நிலையில் இருந்தும் வெற்றியைக் கோட்டைவிட்டிருக்கிறது. 3 தோல்விகள் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது ஆரஞ்ச் ஆர்மி. அந்த அணி RCB-யாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுபற்றிய முழு அலசல் இந்த வீடியோவில்...

இத்தனை காலம் ராயல் சேலஞ்சர்ஸ் என்னென்ன பிரச்னைகளை சந்தித்து வந்ததோ அதையெல்லாம் இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது வார்னரின் அணி. இப்போது பெங்களூரு கூட அதையெல்லாம் சரிசெய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால், சன்ரைசர்ஸ் சுதாரித்துக்கொள்ளுமா?

பெங்களூருக்கு எதிராக 150 ரன்கள்தான் இலக்கு. 16 ஓவர் முடிவிலேயே 115 ரன்கள் எடுத்துவிட்டது அந்த அணி. மூன்றே விக்கெட்டுகள்தான் போயிருந்தன. ஆனால், கடைசி 4 ஓவர்களில் 35 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்றது. இன்னும் மோசம் என்னவெனில், வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது!

அதேபோல், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் (டார்கெட் 151) பவர்பிளேவின் முடிவில் விக்கெட்டே இழக்காமல் 53 ரன்கள் எடுத்தது. இருந்தாலும் மிடில் ஓவர்களில் படுமோசமாக விளையாடி போட்டியைத் தோற்றது. வார்னர், பேர்ஸ்டோ இருவரை மட்டுமே நம்பியிருக்கும் அவர்கள் பேட்டிங்கில், பல பிரச்னைகள். அணியின் தலைமையிலும் சில தவறுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவை என்ன? சன்ரைசர்ஸ் அணியில் என்ன பிரச்னை? முழுமையாக இந்த வீடியோவில் காணுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு