Published:Updated:

ஸ்மித், ஃபின்ச், மேக்ஸ்வெல் அவுட்... மீண்டும் பர்சேஸ் வேட்டைக்குத் தயாராகும் ப்ரீத்தி! #IPL2021

கிளென் மேக்ஸ்வெல்

ஒவ்வொரு அணியும்யார் யாரையெல்லாம் வெளியே அனுப்பியிருக்கிறது, யார் உள்ளே இருக்கிறார்கள், ஏலத்தில் வீரர்களை வாங்க எவ்வளவு பண இருப்பு ஒவ்வொரு அணியிடமும் இருக்கிறது?!

ஸ்மித், ஃபின்ச், மேக்ஸ்வெல் அவுட்... மீண்டும் பர்சேஸ் வேட்டைக்குத் தயாராகும் ப்ரீத்தி! #IPL2021

ஒவ்வொரு அணியும்யார் யாரையெல்லாம் வெளியே அனுப்பியிருக்கிறது, யார் உள்ளே இருக்கிறார்கள், ஏலத்தில் வீரர்களை வாங்க எவ்வளவு பண இருப்பு ஒவ்வொரு அணியிடமும் இருக்கிறது?!

Published:Updated:
கிளென் மேக்ஸ்வெல்

ஐபிஎல் 2021 ஏலத்துக்கு எல்லா அணிகளும் தயாராகிவிட்டன. 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐக்கு அனுப்பிவிட்டது. பல அணிகள் சில முக்கிய வெளிநாட்டு வீரர்களை கழற்றிவிட்டிருக்கிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தையே வெளியேற்றியிருக்கிறது. ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை பெங்களூரு அணியும், பஞ்சாப் கிளென் மேக்ஸ்வெல்லையும் வெளியே அனுப்பியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு அணியும் யாரையெல்லாம் வெளியே அனுப்பியிருக்கிறது, யாரெல்லாம் உள்ளே இருக்கிறார்கள், ஏலத்தில் வீரர்களை வாங்க எவ்வளவு பண இருப்பு ஒவ்வொரு அணியிடமும் இருக்கிறது?!

சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே வின்னர், ரன்னர் என எப்போதும் டாப் 4-க்குள் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாகக் கடந்த 2020 சீசனில் அவமானகரமானத் தோல்விகளை சந்தித்தது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என இரண்டு முக்கிய வீரர்களும் கடந்த சீசனில் விளையாடவில்லை. தோனியும் ஃபார்மில் இல்லை எனப்பல பிரச்னைகள். அதனால் இந்த ஆண்டு அணியை முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோரை கழற்றிவிட்டிருக்கிறது. ஷேன் வாட்சன் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் மொத்தம் 8 வீரர்கள் சென்னை அணியில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். இம்ரான் தாஹிர், கான் ஷர்மா, பிராவோ ஆகியோர் கழற்ற்விடப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களையெல்லாம் தக்கவைத்திருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.

#Raina #Dhoni
#Raina #Dhoni

தற்போதைய சிஎஸ்கே அணி : தோனி, ரெய்னா, டுப்ளெஸ்ஸி, ஜடேஜா, சாம் கரண், ஜெகதீசன், ரித்துராஜ் கெய்க்வாட், ஜோஷ் ஹேஸில்வுட், அம்பதிராயுடு, கேஎம் ஹாசிப், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், மிட்சல் சான்ட்னர், லுங்கி எங்கிடி, பிராவோ, தாஹீர், கான் ஷர்மா என 17 வீரர்களை தக்கவைத்திருக்கிறது சிஎஸ்கே.

அணியின் கையிருப்பு : வீரர்களை வெளியேற்றியதன் மூலம் சிஎஸ்கே அணியிடம் தற்போது புதிதாக வீரர்களை வாங்க 22.9 கோடி ரூபாய் மிச்சம் இருக்கிறது.

யாரையெல்லாம் வாங்கலாம்?! சென்னை அணிக்கு உடனடித் தேவை ஆஃப் ஸ்பின்னர். தோனிக்கு மாற்றாக அணிக்குத் தலைமையேற்கக்கூடிய ஒரு லீடர்ஷிப் மெட்ரீரியல்!

பெங்களூரு!

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 10 வீரர்களை வெளியேற்றியிருக்கிறது. ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ், மொயின் அலி, டேல் ஸ்டெய்ன், இசுரு உடனா என முக்கிய வெளிநாட்டு வீரர்களோடு, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங் மான், பவான் நெகி ஆகியோரையும் கழற்றிவிட்டிருக்கிறது.

இதற்கிடையே டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்த டேனியல் சாம்ஸ், ஷர்ஷல் பட்டேல் என இருவரையும் டிரேட் முறையில் பெங்களூரு அணி வாங்கியிருக்கிறது.

அணியின் தேவை : கோலி, டிவில்லியர்ஸ், தேவ்தத், ஜோஷ் ஃபிலிப் என ஏகப்பட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களோடு இருக்கும் பெங்களூருவுக்கு ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை.

அணியின் கையிருப்பு : பஞ்சாப் அணிக்கு அடுத்து பெங்களூரு அணிதான் 35.7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வேட்டையாட காத்திருக்கிறது.

மும்பை!

ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸில் அதிர்ச்சிகரமான நீக்கங்கள் எதுவும் இல்லை. மலிங்கா ஓய்வுபெற்றுவிட்டதால் அவர் அணியில் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் மெக்லீனிகன், நாதன் கூல்ட்டர் நைல், ஜேம்ஸ் பேட்டின்சன் என வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் கழற்றிவிடப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி கிட்டத்தட்ட எல்லா வீரர்களையுமே தக்கவைத்திருக்கிறது மும்பை.

மலிங்கா, Mumbai Indians
மலிங்கா, Mumbai Indians

அணியின் தேவை : வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வெளியேற்றியிருப்பதால் மீண்டும் அந்த இடத்தை நிரப்ப வேகப்பந்து வீச்சாளர்களை மும்பை தேடும் என எதிர்பார்க்கலாம்.

கையிருப்பு : 15.35 கோடி

கொல்கத்தா!

தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணி கழற்றிவிடும் என எல்லோரும் எதிர்பார்க்க அவரை தக்கவைத்திருக்கிறார்கள். இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டாம் பேன்ட்டன், கிறிஸ் கிரீன், ஹேரி கர்னி ஆகியோரை கழற்றிவிட்டிருக்கிறது மார்கன் தலைமையிலான கேகேஆர்.

அணியின் தேவை : தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தாலும் இன்னொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவர்களுக்குத் தேவை.

கையிருப்பு : 10.85 கோடி

பஞ்சாப்!

இந்தமுறையும் ஐபிஎல் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தாவின் கைகளே அடிக்கடி உயரும் என எதிர்பார்க்கலாம். மேக்ஸ்வெல், காட்ரெல், நீஷம், முஜீப் என முக்கிய வெளிநாட்டு வீரர்களை வெளியேற்றியிருக்கிறது பஞ்சாப்.

தேவை : மேக்ஸ்வெல் வெளியே போய்விட்டதால் அவருக்கு மாற்றாக இன்னொரு ஆல்ரவுண்டர் அணிக்குத் தேவை

கையிருப்பு : எல்லா அணிகளையும் விட அதிகபட்சமாக 53.2 கோடி ரூபாயை கைவசம் வைத்திருக்கிறது பஞ்சாப்.

ராஜஸ்தான்!

கேப்டன் ஸ்மித்தை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தாலும் மிகவும் குறைந்த வீரர்களையே அணியில் இருந்து வெளியேற்றியிருக்கிறது ராஜஸ்தான். ஸ்மித், டாம் கரண், ஓஷேன் தாமஸ், வருண் ஆரோன் என நான்கு வீரர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

தேவை : இங்கிலாந்து வீரர்களையே பெரும்பாலும் நம்பியிருக்கும் ராஜஸ்தான் இந்தமுறை கரீபியின் தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன்கள் மீது கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.

கையிருப்பு : 34.85 கோடி

டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி!

ரிக்கி பான்ட்டிங் பயிற்சியின் கீழ் விளையாடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் வெளியே போய் இருக்கிறார்கள். இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய், அலெக்ஸ் கேரி, சந்தீப் லாமிசேன், கீமோ பால் ஆகியோர் அணியில் இல்லை. மற்றபடி பெரிய மாற்றங்கள் டெல்லியில் இல்லை!

தேவை : பன்ட்டுக்கு மாற்றாக இன்னொரு விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் அணிக்குத் தேவை.

கையிருப்பு : 12.80 கோடி

ஐதராபாத்!

ஐதராபாத் அணி கிட்டத்தட்ட தனது அணியில் எந்த கீறலும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன் வெளிநாட்டு வீரர்களைத்தவிர பெரிதாக எந்த பிரபல வீரரும் அணியில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

தேவை : கேன் வில்லியம்சனுக்கு கைகொடுக்க இன்னொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்தான் ஐதராபாத்தின் தேவை.

கையிருப்பு : 10.75 கோடி