Published:Updated:

RR Analysis: சஞ்சு நல்லா ஆடணும், நல்லா லீட் பண்ணணும்... ராஜஸ்தான் சீசன் சாம்சன் கையில்!

கடந்த ஆண்டு அட்டகாசமாக சீசனைத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், இறுதியாக கடைசி இடத்தில் தொடரை முடித்தது. இந்த சீசன் முன்னேற்றம் காணவேண்டும் என்ற நோக்கில் சில அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். முக்கியமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்துவிட்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக்கி இருக்கிறார்கள். இந்த முடிவு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது?

சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேனாகவே இதுவரை தன் முழுத் திறனையும் நிரூபிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் இவர்மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால், ஓரிரு போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு ஓய்ந்துவிடுவார். இப்போது கேப்டன் என்ற பொறுப்பும் அவர்மீது ஏற்றப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் அவர் எப்படிக் கையாளப்போகிறார் என்பதே ராஜஸ்தான் ராயல்ஸின் சீசனைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயமாக இருக்கும்.

ஏற்கெனவே பென் ஸ்டோக்ஸ், ராகுல் திவேதியா போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கும்போது, கிறிஸ் மோரிஸ், ஷிவம் தூபே என இந்த முறையும் இரண்டு முக்கிய ஆல்ரவுண்டர்களை வாங்கியிருக்கிறது அந்த அணி. இவர்களின் வருகை எந்த அளவுக்கு அவர்களின் பிளேயிங் லெவனை பலமாக்கப்போகிறது?

புதிய வீரர்களின் வருகை ஒருபக்கம் இருந்தாலும், அணியின் மிகச் சிறந்த வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரை காயம் காரணமாக இழந்திருக்கிறது ராயல்ஸ். ஒருசில போட்டிகளையோ முழு தொடரையோ கூட அவர் தவறவிடலாம். இந்நிலையில், இந்த மிகப்பெரிய இழப்பை அவர்கள் எப்படி ஈடுகட்டப்போகிறார்கள்!

ராஜஸ்தான் அணியின் ஓப்பனர்களாக யார் ஆடவேண்டும்? பட்லர் எங்கு ஆடுவது அணிக்கு நல்லது? பிளேயிங் லெவனில் இருக்கவேண்டிய இந்திய பௌலர்கள் யார்... முழுமையான அலசல் வீடியோவில்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு