Published:Updated:

பேட்டிங்கிலும் கலக்கும் சாய் கிஷோர். ஐ.பி.எல் ஏலத்தில் 5 கோடி பார்சேல்..!

Sai Kishore
News
Sai Kishore

குறிப்பிட்ட 4 அணிகள் தவிர்த்து, வேறு எந்த ஐ.பி.எல் அணிகளுக்குப் போனாலும் இவர் பிரதான ஸ்பின்னராக இருக்க வாய்ப்பிருக்கிறது!

சுழற்பந்துவீச்சில் தொடர்ந்து கலக்கி, தமிழ்நாடு அணியின் மேட்ச் வின்னராக கடந்த சில ஆண்டுகளாக வலம் வந்துகொண்டிருக்கும் சாய் கிஷோர், இப்போது பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கர்நாடக அணிக்கெதிரான விஜய் ஹசாரே டிராபி காலிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார் அவர். கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்பின்னராக இருக்கும் அவருக்கு இந்த ஐ.பி.எல் ஏலத்தில் நிச்சயம் பெரிய கிராக்கி இருக்கும். ஏன்? எதற்காக இவரை ஐ.பி.எல் அணிகள் வாங்கவேண்டும்? இந்த வீடியோவில் பாருங்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிக்கொண்டிருக்கும் சாய் கிஷோருக்கு வாய்ப்புகள் கிடைக்கவேயில்லை. வழக்கமாகவே தமிழக வீரர்களுக்கு அங்கு அதிகமாக வாய்ப்பு கிடைக்காது. அதனால், ரசிகர்கள் சாய் கிஷோரை விளையாட வைக்காததற்கும் சூப்பர் கிங்ஸை விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
R.Sai Kishore
R.Sai Kishore

ஆனால், சொல்லப்போனால் ஜடேஜா இருக்கும் ஒரு அணியில், அதேபோன்ற இன்னொரு இடது கை ஸ்பின்னருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். அடுத்த முறையும் சென்னைக்குச் சென்றாலும், அவருக்கு அதேதான் நிலை. ஒரு 4 அணிகள் தவிர்த்து, வேறு எந்த ஐ.பி.எல் அணிகளுக்குப் போனாலும் இவர் பிரதான ஸ்பின்னராக இருக்க வாய்ப்பிருக்கிறது! அவை எந்தெந்த அணிகள். மேலிருக்கும் வீடியோவில் விரிவாகக் காணுங்கள்.