Published:Updated:

ஆர்சிபி டாப் 2-ல் இல்லை! கோலிக்கு வினையாகும் `நம்பர் 3'... காலம் கடந்து உதயமாகும் சன்ரைசர்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேன் வில்லியம்சன் - விராட் கோலி
கேன் வில்லியம்சன் - விராட் கோலி ( IPL )

கோலி-டிவில்லியர்ஸ் என இரண்டு பேரும் கையிலேந்தி ஓடிய பெங்களூர் அணியின் பேட்டன் இப்போது மேக்ஸ்வெல்லின் கைக்கு மாற்றிவிடப்பட்டிருக்கிறது. அவர் மட்டுமே ஓடி அணியை கரை சேர்க்க முடியுமா?

ஐபிஎல்-இல் மோசமாக ஆடிக்கொண்டிருக்கும் அணிகள் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்த பிறகு, வெறித்தனமாக செயல்படுவதை செய்வதை பார்க்க முடியும். எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் ரிசல்ட்டை நினைத்து ஆட வேண்டாம். எந்த அழுத்தமும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை ஆடுவோம் என்கிற ஒரு சௌகரியமே அப்படிப்பட்ட அணிகளுக்கு ஒரு தெம்பை கொடுத்து சிறப்பாகச் செயல்பட வைக்கும். அப்படியான ஒரு செயல்பாட்டைத்தான் நேற்று பெங்களூர் அணிக்கு எதிராகக் கொடுத்திருக்கிறது சன்ரைசர்ஸ். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்திற்குள் வர வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்கிய பெங்களூர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது.

பெங்களூர் அணியின் பந்துவீச்சை பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை. மிகச்சிறப்பாக வீசி சன்ரைசர்ஸ் அணியை 141 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியிருந்தனர். டார்கெட் 142 தான். பெங்களூர் அணியின் 'Fab 4' பேட்டர்களால் எளிதில் சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர்தான் இது. ஆனாலும், நேற்று சொதப்பியிருக்கிறார்கள்.

கேப்டன் கோலியை பொறுத்தவரைக்கும் எப்போதும் ப்ளேயிங் லெவனில் மாற்றங்களை செய்து கொண்டே இருப்பார். வீரர்களுக்கு அணியில் நிலையான இடம் இருக்கவே இருக்காது என்பதே அவர் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. கடந்த சீசனில் ப்ளேஆஃப்ஸில் எலிமினேட்டர் சுற்றில் போய் ப்ளேயிங் லெவனில் நான்கு மாற்றங்களைச் செய்திருந்தார். ரசிகர்கள், கமென்டேட்டர்கள், விமர்சகர்கள் என அத்தனை பேரையும் வெடவெடக்க வைத்த மூவ் அது. எதிர்பார்த்ததை போலவே அந்தப் போட்டியில் ஆர்சிபி தோற்று வெளியேறியது.

இந்த சீசனில் கேப்டன் கோலியிடமிருந்து அப்படியான அதிர்ச்சிகரமான முடிவுகள் எதுவும் வெளிப்படவில்லை.

கோலி
கோலி
IPL
கடந்த மூன்று போட்டிகளாக ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் ஒரே அணியோடு களமிறங்கி வருகிறார். அதிசயம்... அற்புதம்!

ஆனால், ப்ளேயிங் லெவனில் விட்டதை பேட்டிங் ஆர்டரில் சரிகட்ட முயல்கிறார். ஆம், சன்ரைசர்ஸுக்கு எதிரான தோல்விக்கு கோலி பேட்டிங் ஆர்டரில் செய்த குளறுபடிகளும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

பெங்களூர் அணியை பொறுத்தவரைக்கும் இந்த சீசனில் பேட்டிங் ஆர்டரில் நம்பர் 3 செட் ஆகாமலயே இருந்தது. கடந்த சீசனில் கோலிதான் நம்பர் 3 இல் இறங்கி கொண்டிருந்தார். ஆனால், படிக்கலுடன் ஓப்பனிங் இறக்க சரியான ஆள் இல்லாததால் இந்த சீசனில் ஓப்பனிங்கிற்கு ப்ரமோஷன் வாங்கிக் கொண்டார். அவர் விட்டுச்சென்ற நம்பர் 3 இடம் பிரச்னையாக மாறியது.

பெங்களூர் அணியை பொறுத்தவரைக்கும் இந்த சீசனில் பேட்டிங் ஆர்டரில் நம்பர் 3 செட் ஆகாமலயே இருந்தது. கடந்த சீசனில் கோலிதான் நம்பர் 3 இல் இறங்கி கொண்டிருந்தார். ஆனால், படிக்கலுடன் ஓப்பனிங் இறக்க சரியான ஆள் இல்லாததால் இந்த சீசனில் ஓப்பனிங்கிற்கு ப்ரமோஷன் வாங்கிக் கொண்டார். அவர் விட்டுச்சென்ற நம்பர் 3 இடம் பிரச்னையாக மாறியது.

இந்த சீசனின் முதல் பாதியில் பெங்களூர் அணிக்கு நம்பர் 3 பொசிஷனில் இறங்கியவர்களின் பட்டியல்:
கோலி | IPL 2021
கோலி | IPL 2021

Vs மும்பை - ரஜத் பட்டிதர்

Vs சன்ரைசர்ஸ் - ஷபாஷ் அகமது

Vs கொல்கத்தா - ரஜத் பட்டிதர்

Vs ராஜஸ்தான் - ஷபாஷ் அகமது (பேட்டிங் இறங்கவில்லை. ஆனால், ஆர்டர்படி இவர்தான் இருந்தார்)

Vs சென்னை - வாஷிங்டன் சுந்தர்

Vs டெல்லி - ரஜத் பட்டிதர்

Vs பஞ்சாப் - ரஜத் பட்டிதர்

மொத்தம் 7 போட்டிகள். 7 போட்டிகளில் நம்பர் 3 பொசிஷனில் மட்டும் 6 மாற்றங்கள். எந்த பேட்டருக்கும் தன்னை அந்த பொசிசனில் நிலைப்படுத்திக் கொள்ள சரியான தொடர் வாய்ப்பை கொடுக்கவே இல்லை. கிடைத்த வாய்ப்புகளில் அவர்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

இந்த சீசனில் ரஜத் பட்டிதர், ஷபாஷ் அகமது, வாஷிங்டன் சுந்தர் (காயம் காரணமாக சீசனிலிருந்து விலகிவிட்டார்) மூன்று பேரும் இல்லாமல் புதிதாக ஸ்ரீகர் பரத் என்பவரை நம்பர் 3 இல் ஆட விக்கெட் கீப்பர் பேட்டராக அணிக்குள் கொண்டு வந்தார்.

டேன் கிறிஸ்டியன்
டேன் கிறிஸ்டியன்
IPL

இந்த இரண்டாம் பாதியில் பெங்களூர் அணி ஆடியிருந்த முதல் 4 போட்டிகளில் பரத்தான் நம்பர் 3 இல் இறங்கியிருந்தார். மும்பை மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டியில் 32, 44 என ஸ்கோர் செய்து தன்னை அந்த இடத்தில் கொஞ்சம் நன்றாகவே நிலைப்படுத்திக் கொண்டார். இந்தச் சமயத்தில்தான் கோலி ஒரு ட்விஸ்ட் கொடுத்தார். செட் ஆக தொடங்கிய பரத்துக்கு பதில் டேன் கிறிஸ்டியனை நம்பர் 3 இல் இறக்கத் தொடங்கினார். பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டி சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டி இரண்டிலுமே கிறிஸ்டியன் தான் நம்பர் 3 இல் வந்தார். ஏன்? எதற்கு? எப்படி? எந்தக் கேள்விகளுக்கும் விடையில்லாத விநோத முடிவு இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் ரொம்ப நேரம் க்ரீஸில் நிற்கவில்லைதான். வந்த வேகத்தில் அவுட் ஆகிவிட்டு செல்கிறார்தான். ஆனாலும் காரணமே இல்லாமல் அந்த மாற்றம் எதற்கு? அவர் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டு செல்லும்போது அங்கே பெங்களூர் அணிக்கு தேவையில்லாத ஒரு விக்கெட் அழுத்தம் ஏறுகிறது. எதிரணிக்கு கிறிஸ்டியனின் விக்கெட் மூலம் ஒரு மொமண்டம் கிடைக்கிறது.

கிறிஸ்டியன் இடையில் வருவதால் பேட்டிங் ஆர்டர் இன்னும் நீள்கிறது என நினைக்கலாம். நம்பர் 4 இல் பரத் அடுத்து 5, 6 இல் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என தொடர்கிறது. ஆனால், அப்படியான நீட்சிக்கான தேவை என்ன இருக்கிறது? இந்த முடிவு அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல்லும் டிவில்லியர்ஸும் க்ரீஸுக்குள் வருவதை கொஞ்சம் தாமதப்படுத்தியே விடுகிறது. அது எதிரணிக்குத்தான் சாதகமாக முடிகிறது.

RCB | IPL 2021
RCB | IPL 2021

சன்ரைசர்ஸுக்கு எதிராக கடைசி 5 ஓவர்களில் பெங்களூர் அணிக்கு வெற்றி பெற 44 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. டிவில்லியர்ஸ் க்ரீஸில் நின்றார். அப்படியும் பெங்களூர் அணியால் 39 ரன்களை மட்டும்தான் எடுக்க முடிந்தது. காரணம், டிவில்லியர்ஸ் ஸ்ட்ரைக் செய்ய தேவையான பந்துகளே அவருக்குக் கிடைக்கவில்லை. 15 வது ஓவரில் உள்ளே வந்த டிவில்லியர்ஸ் நேற்று மொத்தமே 13 பந்துகளைத்தான் சந்தித்திருந்தார். டெத் ஓவர்களில் இன்னும் கொடுமை. உம்ரான் மாலிக் மற்றும் ஹோல்டர் வீசிய 18, 19 ஓவர்களில் தலா ஒரு பந்தை மட்டுமே டிவில்லியர்ஸ் எதிர்கொண்டிருந்தார். கடைசி 3 ஓவர்களில் மொத்தமே 6 பந்துகளை மட்டும்தான் எதிர்கொண்டிருந்தார். அவர் இன்னும் சில பந்துகளைக் கூடுதலாக எதிர்கொண்டிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். பெங்களூர் அணி வென்றிருக்கும் வாய்ப்பும் இருந்திருக்கும். முதல் இரண்டு இடத்திற்குள் முன்னேறியிருக்கும் வாய்ப்பும் இருந்திருக்கும். கவாஸ்கர் எப்போதுமே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு சொல்வார்.

டி20 போட்டியை பொறுத்தவரைக்கும் உங்கள் அணியின் சிறந்த பேட்டர்கள் அதிக பந்துகளை எதிர்கொள்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
கவாஸ்கர்

கவாஸ்கரின் இந்த தியரியை பெங்களூர் அணிக்கு அப்ளை செய்து பார்ப்போம்.

அந்த அணியின் ஆல்டைம் பெஸ்ட்டான டிவில்லியர்ஸ் இந்த இரண்டாம் பாதி சீசனில் (6 போட்டிகள்) 50 பந்துகளை மட்டுமே சந்தித்திருக்கிறார். இந்த 50 பந்துகளில் 69 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக்ரேட் 138. ஆனால், முதல் பாதி சீசனில் (7 போட்டிகள்) 126 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார். அடித்த ரன்கள் 207. ஸ்ட்ரைக் ரேட் 164. இந்த எண்களிலிலிருந்தே வித்தியாசத்தை உணர முடியும்.

டிவில்லியர்ஸ் அதிக பந்துகளை எதிர்கொள்ளும்போது இன்னும் சிறப்பாக ரன்களை ஸ்கோர் செய்கிறார். ஸ்ட்ரைக் ரேட்டும் எகிறுகிறது.

டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ்
IPL

டிவில்லியர்ஸ் அதிக பந்துகளைச் சந்திக்க இடையூறாக இருப்பது அந்த நம்பர் 3 இல் நடக்கும் கபடி ஆட்டமே. கோலி நம்பர் 3 இல் ஓர் அதிரடி பேட்டர் வேண்டும் என நினைத்தால் ஒன்றுமே செய்ய தேவையில்லை. படிக்கல், கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என நான்கு பேரும் வரிசையாகவே இறங்கிவிடலாம். மேக்ஸ்வெல் நல்ல ஃபார்மில் இருக்கிறார். டிவில்லியர்ஸுக்கும் அவருக்குத் தேவையான கூடுதலான சில பந்துகள் கிடைக்கும். எப்படியும் இந்த 4 வீரர்களை மட்டுமேதான் அணி நம்பியிருக்க போகிறது. இவர்கள் அடிப்பதுதான் அணியின் ஸ்கோர் என்கிற போது இடையில் வேறு பேட்டர்களை திணிப்பதற்கான அவசியமே இல்லையே!

IPL-ல் என்னதான் நடக்கிறது? நான்காவது இடத்துக்கான போட்டியில் 4 அணிகள்... யார் உள்ளே, யார் வெளியே?!

அப்படித் திணிப்பதால் மேக்ஸ்வெல் மீதுதான் அதிக சுமையும் அழுத்தமும் ஏறுகிறது. கோலி, படிக்கல் இருவருமே ஸ்ட்ரைக் ரேட்டில் அடி வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். டிவில்லியர்ஸுக்கு அவர் எதிர்பார்க்கும் நேரம் கிடைப்பதில்லை. இடையில் சிக்கியிருப்பது மேக்ஸ்வெல்தான். அவரால்தான் இந்த சீசனில் பெங்களூர் பிரச்னையில்லாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது. சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 25 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தார். ரஷீத் கானின் பந்துகளை வெளுக்கும் அளவுக்கு உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். படிக்கல் 78 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய ஆட்டத்திற்கு மேக்ஸ்வெல் இப்படி அடித்ததால்தான் பெங்களூர் அணி நெருங்கி வந்து தோற்றது. இல்லையேல் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

SRH | IPL 2021
SRH | IPL 2021
கோலி-டிவில்லியர்ஸ் என இரண்டு பேரும் கையிலேந்தி ஓடிய பெங்களூர் அணியின் பேட்டன் இப்போது மேக்ஸ்வெல்லின் கைக்கு மாற்றிவிடப்பட்டிருக்கிறது. அவர் மட்டுமே ஓடி அணியை கரை சேர்க்க முடியுமா?

சன்ரைசர்ஸ் அணியும் நேற்று சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. கீ பௌலரான ரஷீத் கான் 4 ஓவர்களில் 39 ரன்களை கொடுத்த போதும் மற்ற பௌலர்கள் இணைந்து 141 ரன்னை டிஃபண்ட் செய்திருக்கின்றனர். 153 கி.மீ வேகத்தில் இந்த சீசனின் அதிவேகமான டெலிவரியை வீசிய இளம் வீரர் உம்ரான் மாலிக் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இண்டண்ட்டோடு ஆடிவந்த ஒரே வீரரான ஹோல்டர் நேற்று 19 வது ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் டிவில்லியர்ஸை க்ரீஸில் வைத்துக் கொண்டு 13 ரன்களை டிஃபண்ட் செய்திருந்தார். லோ ஃபுல் டாஸ்களையும் ஓயிட் அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்ப் டெலிவரிக்களையும் சிறப்பாக வீசியிருப்பார்.

டீசன்ட்டான பேட்டிங், தரமான பந்துவீச்சு. இதுதான் சன்ரைசர்ஸ் அணியின் வழக்கமான மேஜிக். அது நேற்று பெங்களூர் அணிக்கெதிராக சரியாக வெளிப்பட்டது. பச்... It's too late!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு