Published:Updated:

IPL 2022: கிரிக்கெட் சில சமயங்களில் இத்தனை கொடுமையாகத்தான் இருக்கும் - ஓடியன் ஸ்மித்திற்கான மெசேஜ்!

ஓடியன் ஸ்மித் ( Hotstar )

டி20 க்கள் பேட்டர்களின் கேமாக முழுமையாக மாறிவிட்ட நிலையில் பௌலர்களின் நிலைமை படுமோசம்தான். விராட் கோலி முதல் மிட்செல் ஜான்சன் வரை பெரும்பாலானவர்கள் இதேமாதிரியான சூழல்களைக் கடந்தே வந்திருக்கின்றனர்.

IPL 2022: கிரிக்கெட் சில சமயங்களில் இத்தனை கொடுமையாகத்தான் இருக்கும் - ஓடியன் ஸ்மித்திற்கான மெசேஜ்!

டி20 க்கள் பேட்டர்களின் கேமாக முழுமையாக மாறிவிட்ட நிலையில் பௌலர்களின் நிலைமை படுமோசம்தான். விராட் கோலி முதல் மிட்செல் ஜான்சன் வரை பெரும்பாலானவர்கள் இதேமாதிரியான சூழல்களைக் கடந்தே வந்திருக்கின்றனர்.

Published:Updated:
ஓடியன் ஸ்மித் ( Hotstar )
ராகுல் திவேதியா பஞ்சாபிற்கு எதிராக மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார். கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற சூழலில், இரண்டு பந்துகளையுமே வானை கிழிக்கும் சிக்சர்களாக்கி மிரளச் செய்திருக்கிறார். அசாத்தியமான ஒரு இலக்கை அநாயாசமாக நிறைவு செய்திருக்கிறார்.
ராகுல் திவேதியா
ராகுல் திவேதியா
GT

திவேதியாவிற்கு இது முதல் முறையும் அல்ல. ஏற்கனவே, 2020 சீசனில் இதே பஞ்சாப் அணிக்கு இதே மாதிரியான இக்கட்டான சூழலில் காட்ரெல் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்திருந்தார். சாத்தியமே இல்லை எனும் சூழலிலிருந்து திவேதியாவின் ருத்ரதாண்டவத்தால் ராஜஸ்தான் அணி அந்த போட்டியை வென்றிருக்கும். பஞ்சாப்புக்கு எதிரான இந்தப் போட்டியில் ஓடியன் ஸ்மித் அந்த கடைசி ஓவரை வீசி திவேதியா சம்பவங்களையெல்லாம் நிகழ்த்தி முடித்த சமயத்தில்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் ஓடியன் ஸ்மித்திற்காக வருத்தப்பட வேண்டும். கிரிக்கெட் சில சமயங்களில் இத்தனை கொடுமையானதாகத்தான் இருக்கும்
சைமன் டூலி

என கமெண்டேட்டர் சைமன் டூலி கூறியிருப்பார். ஐ.பி.எல் -லை பொறுத்தவரைக்கும் ஓடியன் ஸ்மித் மட்டுமல்ல. இதற்கு முன்பே பல பௌலர்களும் இதே கொடுமையை அனுபவித்திருக்கிறார்கள். சாத்தியமே இல்லாத சூழலில் பேட்ஸ்மேன்கள் சாமியாட்டம் ஆடி அசாத்தியங்களை செய்திருக்கின்றனர். அப்படியான சில நிகழ்வுகளை பற்றிய அலசல் இங்கே..

அசாத்தியமான ஃபினிஷிங் என்றவுடனேயே தோனிதான் அனைவருக்கும் நினைவில் வருவார். இப்போது ராகுல் திவேதியா அடித்த அடிக்கும் தோனிக்குமே ஒரு சம்பந்தம் இருக்கிறது. கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்கள் தேவை என்ற சூழலில் ராகுல் திவேதியா இரண்டு சிக்சர்களை அடித்திருக்கிறார்.

இப்படி கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்சர் அடித்து அணியை வெல்லை வைத்திருக்கும் வீரர்கள் யார் என தேடிப்பார்த்தால் மொத்தமே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அதில், இரண்டாம் நபர் ராகுல் திவேதியே. எனில் முதல் நபர்? அது மகேந்திர சிங் தோனி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2016 சீசனில் தோனி அந்த சம்பவத்தை நிகழ்த்தியிருந்தார். 2016 தோனிக்கு அவ்வளவு சிறப்பான சீசன் கிடையாது. ஏனெனில் அந்த சீசனில் சென்னையே கிடையாது. தோனி புனே அணிக்கு கேப்டனாகியிருந்தார். புனே அணிக்கு அந்த சீசன் ரொம்பவே சுமாராக அமைந்திருந்தது. ப்ளே ஆஃப்ஸ் கூட சென்றிருக்கவில்லை. தோனியும் சுமாராகவே ஆடியிருந்தார்.

தோனி
தோனி

இந்நிலையில்தான் அந்த சீசனின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாபிற்கு எதிராக தோனி ஒரு வெறித்தனமான ஆட்டத்தை ஆடியிருந்தார். கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற சூழலில் அக்சர் படேலுக்கு அந்த ஓவரை கொடுத்தார்கள். தோனி லெக்ஸ்பின் மற்றும் இடதுகை ஸ்பின்னிற்கு எதிராக திணறுவார் என்பதால் இந்த ஐடியா. ஆனால், அவர்கள் திட்டமிட்டது நடக்கவில்லை. தோனி அடித்த அடியில் பந்துகள் சிதறின. அக்சர் படேல் விதவிதமாக முயன்றும் ஒன்றும் வேலைக்காகவில்லை.

கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற சூழலில் இரண்டு பந்துகளையுமே தோனி சிக்சராக்கியிருப்பார். புனே ப்ளே ஆஃப்ஸுக்கு செல்லாவிட்டாலும், தோனி ரசிகர்களுக்கு அது ஒரு மறக்கமுடியாத ஆட்டமாக அமைந்திருந்தது.
Piyush Chawla
Piyush Chawla
Hotstar

எதிர்பார்த்திடவே செய்யாத சூழலில் பேட்ஸ்மேன்கள் செய்த சம்பவத்தில் இதை சேர்க்காமலேயே விட முடியாது. 2014 சீசனின் இறுதிப்போட்டி அது. அந்த சீசனின் ட்ரெண்ட்டிங். அணியான பஞ்சாப்புக்கும் ஏற்கனவே சாம்பியனாகியிருந்த கொல்கத்தா அணிக்கும் இடையே இந்த போட்டி நடந்திருந்தது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 199 ரன்களை எடுத்திருக்கும். விருத்திமான் சஹா வியப்புக்குரிய வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடியிருப்பார். கொல்கத்தா சேஸ் செய்தபோது அந்த அணியும் சிறப்பாகவே ஆடியது. ஆனால், விக்கெட்டுகளையும் சீராக இழந்ததால் கடைசிக்கட்டத்தில் அடிக்க ஆள் இல்லை. பியூஸ் சாவ்லாவும் நரைனுமே இருந்தனர். 19 வது ஓவரை வேகப்புயல் ஜான்சன் வீசினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தை பியூஸ் சாவ்லா ஒரு அட்டகாசமான சிக்சராக மாற்றியிருப்பார். ஷார்ட் பிட்ச் டெலிவரியை ஸ்கொயர் லெகில் லாவகமாக அடித்து அத்தனை பேரையும் மிரள செய்தார். அவானாவின் கடைசி ஓவரிலும் ஒரு பவுண்டரியை அடித்து கொல்கத்தாவை சாம்பியனாகவே ஆக்கியிருப்பார்.

சாவ்லா ஜான்சனை அடித்த அந்த ஒரு சிக்சர் ஐ.பி.எல் இன் அனல் தெறி மொமண்டுகளில் ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பட்டியலில் பொல்லார்டின் பெயர் இல்லையென்றால் குற்றமாகிவிடும். பொல்லார்ட் எத்தனையோ முறை இப்படியான சம்பவங்களை செய்திருந்தாலும் இது கொஞ்சம் கூடுதல் பரபரப்பாக அமைந்த சம்பவம். 2020 சீசனின் தொடக்கத்தில் பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் மும்பை அணி 200+ ஸ்கோர் செய்ய வேண்டிய சூழல்.

Kieron Pollard
Kieron Pollard

டாப் ஆர்டர் விக்கெட்டுகள் ஏமாற்ற இஷன் கிஷனும் பொல்லார்டுமே நின்று ஆடியிருப்பார். அதிலும், கடைசி 5 ஓவர்களில் இவர்கள் ஆடிய ஆட்டம் அதற்கு முன் கண்டிராததாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 88 ரன்களை அடித்திருப்பர்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷன் கிஷன் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அவுட் ஆக, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற சூழல். உடானா வீசிய அந்த பந்தை பொல்லார்ட் பவுண்டரியாக்கி ஆட்டத்தை டை செய்து சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றிருப்பார்.

சூப்பர் ஓவரில் சென்று மும்பை தோற்றது தனிக்கதை என்றாலும் பொல்லார்ட் மற்றும் இஷன் கிஷனின் அந்த ஃபினிஷிங் ஒரு பென்ச்மார்க்தான்.

சென்னை அணி இதேமாதிரியான அசாத்தியமான சூழலிலிருந்து அதிக முறை மீண்டு வந்த அணியாக இருக்கிறது. தோனி, ஜடேஜா, ப்ராவோ என ஒவ்வொருவருமே எக்கச்சக்க சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றனர். இவர்களின் வரிசையில் ஆல்பி மோர்கலும் முக்கிய இடம்பிடித்திருக்கிறார். 2012 சீசனில் பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் 200+ சேஸிங்கின் போது போட்டி கையைவிட்டு சென்று கொண்டிருந்த சூழலில் 19 வது ஓவரில் மோர்கல் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தார். அந்த ஓவரில் மூன்று சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிக்களோடு மோர்கல் 28 ரன்களை சேர்த்திருப்பார். பந்து மைதானத்தை விட்டே வெளியே எல்லாம் பறந்திருக்கும். இந்த ஓவர் கூடுதல் ஸ்பெசலாக நினைவில் இருப்பதற்கு மோர்கல் மட்டுமில்லை இந்த ஓவரை வீசியவரும் கூட ஒரு காரணமே.

அந்த ஓவரை வீசியது ரன் மெஷினான விராட் கோலி. உண்மையிலேயே விராட் கோலி அன்றைக்கு ரன் இறைக்கும் மெஷினாகத்தான் மாறியிருந்தார்.
CSK vs RCB
CSK vs RCB

இதேமாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்கள் ஐ.பி.எல் இல் அரங்கேறியிருக்கிறது. பல பௌலர்கள் அடித்து வெளுக்கப்பட்டிருக்கின்றனர்.

டூலி சொன்னதை போல, கிர்க்கெட் சில சமயங்களில் இத்தனை கொடுமையாகத்தான் இருக்கும். அதுவும் டி20 க்கள் பேட்டர்களின் கேமாக முழுமையாக மாறிவிட்ட நிலையில் பௌலர்களின் நிலைமை படுமோசம்தான். ஆனால், விராட் கோலி முதல் மிட்செல் ஜான்சன் வரை பெரும்பாலானவர்கள் இதேமாதிரியான சூழல்களை கடந்தே வந்திருக்கின்றனர்.

Odean Smith
Odean Smith
Hotstar
ஓடியன் ஸ்மித்தும் இப்போது அந்த கொடுமையான சூழலில் சிக்கியிருக்கிறார். இது அவருக்கு முதல் சீசன்தான். பாடங்களைக் கற்றுக்கொண்டு சீக்கிரமே மீண்டு வந்து மிரட்டட்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism